(Reading time: 44 - 88 minutes)

'ருண்..' அவனது அம்மாவின் குரல் பாய எழுந்தே விட்டான் பரத்.

'இதோ இப்போ கூட நான் சந்தோஷமா இருக்கணும்ன்னு உங்களாலே நினைக்க முடியலை இல்லையா அருண்??? மெல்ல எழுந்தாள் அபர்ணா.'

'சந்தோஷமா இருப்பேன் அருண். கண்டிப்பா எல்லாத்தையும் மறந்திட்டு சந்தோஷமா இருப்பேன். உறுதியன தொனியில் சொன்னாள் அபர்ணா 'நேத்து நீங்க போன்லே பேசினதுக்கப்புறம் இதை உங்க கிட்டே சொல்லணும்ன்னு தோணிச்சு அதான் வந்தேன் இனிமே என்னை தொந்தரவு பண்ணாதீங்க அருண் ப்ளீஸ்..'.

அபர்ணா இத்தனை உறுதியாக பேசி பரத்தே பார்த்ததில்லை. சற்றே வியப்புடன் அவன் அவளை  பார்த்த நொடியில்

'அபர்ணா... என் பையன் உன்னை அடிச்சானாமா???' இடைப்புகுந்தார் அம்மா. அவர் முகத்தில் இருந்த கலவரம் அபர்ணா பரத் இருவரையுமே கொஞ்சம் உலுக்க,

'அதை விடுங்கம்மா நாங்க கிளம்பறோம்..' சொல்லிவிட்டு நகர எத்தனித்தான் பரத்.

'நீ சொல்லு அபர்ணா.. அடிச்சானா..'

'இல்லமா அது...'

'ஆமாம் அடிச்சேன் இப்போ என்ன அதுக்கு..' கோபத்தின் உச்சிக்கு போயிருந்தான் அவன்.. ஒரு பெண்ணை கை நீட்டி அடிப்பது பெரிய விஷயமாகவே தோன்றவில்லை போலும் அவனுக்கு.

கல்லாய் இறுகியது அம்மாவின் முகம் 'நீ இனிமே என் புள்ளை இல்லைடா..' படீரென வெடித்தன அவர் வார்த்தைகள். 'இது எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். அபர்ணாவை நிமிர்ந்து பாக்குற தகுதி கூட உனக்கு இல்லை. இதிலே அவளை மிரட்டற..'

'மா என்னமா பேசறே..' எகிறிய அருண் குரலை கண்டுகொள்ளாமல் பரத்திடம் தொடர்ந்தார் அம்மா.

'அவன் கல்யாணத்தை நிறுத்தினது கூட என்னாலே மன்னிக்க முடிஞ்சது. அவளை கல்யாணம் பண்ணி காலத்துக்கும் கஷ்டபடுத்தறதை விட இது பரவாயில்லைன்னு தோணிச்சு . ஆனா கை நீட்டி அடிச்சது.... இங்க பாரு பரத், அபர்ணா என் மருமகள்ன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். அருண் இடத்திலே இனிமே நீதான். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. நீதான் எனக்கு எல்லாம் செய்யணும்..' அம்மா சொல்லிக்கொண்டே போக

'மா என்னமா நீங்க..' பரத் ஏதோ சொல்ல முயல்வதற்குள்

'யாருடா உனக்கு அம்மா.. ' கோபத்தின்  உச்சிக்கு சென்ற அருண்  பரத்தின் மீது பாய  அம்மா அருணை தடுக்க முயன்று நடுவில் வர  ஒரு வேகத்தில் அருண் அம்மாவை தள்ளிவிட, கொஞ்சம்  தள்ளி சென்று தடுமாறி விழுந்தவரின் தலை சுவற்றில் மோத அப்படியே மயங்கி விழுந்தார் அம்மா.

எல்லார் பார்வையும் அந்த பக்கம் போக 'அ... ம்மா..' அங்கே எதிரொலித்தது அருணின் குரல். பதறிக்கொண்டு அவரை நோக்கி ஓடினான் பரத். அவர் மயங்கி கிடக்க பின் தலையிலிருந்து வழிந்துக்கொண்டிருந்தது ரத்தம்.

அதிர்ந்து பின் வாங்கினாள் அபர்ணா 'மை காட்...'

'அ....ம்......மா...' உடைந்தான் அருண். 'அய்யோ...என்ன செய்துவிட்டேன் நான்!!!'

'இந்த கோபத்தினாலே பெருசா எதையோ இழக்க போறியோன்னு பயமா இருக்குடா கண்ணா..' அம்மா முன்பு சொன்னது இப்போது தலையில் அடித்தது. பல பல நாட்களுக்கு பிறகு கண்ணீர் பெருக ஆரம்பித்தது அவனுக்கு.

பம்பரமாய் இயங்கினான் பரத். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட மருத்துவர் பரிசோதிக்க ஆரம்பித்திருந்தார்.

சில நிமிடங்களில் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட 

'நான் இத்தனை மோசமானவனா??? இத்தனை முரடனா??? எங்கிருந்து வருகிறது இத்தனை அகங்காரமும், கோபமும்' தரையில் சிந்தி இருந்த அம்மாவின் ரத்தத்தையே பார்த்தபடி பிரமை பிடித்தவன் போல் கண்ணீர் வழிய தரையிலேயே அமர்ந்திருந்தான் அருண்.

'கோபம் இத்தனை பெரிய அரக்கனா??? அது இத்தனை இழப்புகளை கொடுக்குமா???

அருண் நிலை அவளுக்கு வருத்தத்தை கொடுக்காமல் இல்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் எதையும் செய்ய தோன்றாத அளவு மனம் மரத்துப்போய் கிடந்தது அபர்ணாவுக்கு. பேசாமல் ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள் அவள்.

இப்போது அருண் தோளில் விழுந்தது பரத்தின் கரம். அவனருகில் மண்டியிட்டு அமர்ந்தான் பரத். இதமான அவனது அணைப்பு அருணை ஏதோ செய்திருக்க வேண்டும் போலும். கண்ணீருடன் நிமிர்ந்து பரத்தை பார்த்தான்.

'நான் வே...  வேணும்னு செய்...  செய்யலை . ஏ... ஏதோ கோபத்திலே...' எங்க அம்மா... ' வற்றிப்போன குரலில் துண்டு துண்டாய் விழுந்தன வார்த்தைகள்.

'சரி எல்லாம் சரியாகும்... நீங்க எழுந்திருங்க முதல்லே...'

நேற்று வரை அருணை ஒரு அரக்கனாகத்தான் பார்த்திருந்தான் பரத். இன்று ஒரு மகனாக அவன் உடைந்து கிடப்பதை பார்க்க மனம் கொஞ்சம் இளகித்தான் போனது.

'பரத் அம்மா பிழைச்சுக்குவாங்க இல்ல. ..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.