(Reading time: 17 - 34 minutes)

சாரா ரூபனை அழைத்துப் பேசினார். அத்தை பேச முற்படும் முன்பே ரூபன் அவரிடம் தான் அனிக்காவை அடித்தது குறித்து மன்னிப்பைக் கேட்டான். தான் அவளை விரும்புவது குறித்தும், தான் கோபத்தில் அவ்ளிடம் நடந்துக் கொண்டது எல்லாம் தவறே என மனம் வருந்தி சொல்லவும், மகள் எடுத்த முடிவு எதனால் இருக்கும் என்றறிந்தவர் அவலது சார்பாக அவனிடம் பேசினார். மகளைக் குறித்த அவரது கவலைகள் எல்லாம் ரூபனிடம் சொன்ன பின்னரே அவருக்கு ஆறுதலாயிற்று. அவர்கள் வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அத்தை வாயிலாக தெரிய வந்த பின்னரே அவனுக்கு முழுமையாக அனிக்காவின் மனநிலை புரிந்தது. தான் அவளை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வதாக உறுதிக் கொடுத்தான். சாராவிற்கு ரூபனுடனான அந்த உரையாடல் மனதிற்கு நிறைவாக அமைந்து இருந்தது.

அடுத்த நாள் நிச்சயதார்த்தம் , ஏறத்தாழ எல்லா உறவினர்களையும் அழைத்து மிக பெரிதாகவே ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. 15 நாட்களாக வீட்டில் தன் அறையில் இருந்தவள், தினம் தோறும் தான் விரும்பிய நேரம் பார்க்க கிடைத்தவளை மறுபடி அவள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதே ரூபனுக்கு கசப்பாக இருந்தது. மனதை சமாதானப் படுத்தியவனாக அனிக்காவை சந்திக்க தன்னுடைய அறைக்குச் சென்றான்.

முதன்முறையாக அவளிடம் தாமாகவே போய் பேச வேண்டியிருக்கின்றது. பேசித்தான் ஆக வேண்டும். உள்ளே நுழைய தன் வீட்டு வாண்டுகளோடு பக்கத்து வீட்டு குழந்தைகள் இரண்டும் சேர்ந்து அவன் அறையை விட்டு வெளியேற அவர்களை துரத்தியவளாக பின் சென்றவளை நிறுத்தினான்.

அனி கொஞ்சம் உக்காரு.பேசணும்’

இதென்ன அதிசயம் , என்னிடம் பேசப் போகிறானா? ஸாரி இனிமேல் போகிறாரா என்றுச் சொல்லணுமோ? அனிக்கா மைண்ட் வாய்ஸ் .

அவன் எதிரில் இருக்கையில் அமர்ந்தாள்.

“சித்தி கேம்” என்று வந்து நின்ற ராபினிடம், கண்களைச் சுருக்கி, கைகள் இரண்டின் விரல்களையும் காட்டி “டைம் ப்ளீஸ்” என்றதும் பெரிய மனத்தோடு அந்த வாண்டு அவளை விட்டு விட்டு விளையாட்டைத் தொடரச் சென்றான்.

"சொல்லுங்க அத்தான்" என்றவளைப் பார்த்து, ரொம்ப பிஸிதான் என மனதிற்குள் சிரித்துக் கொண்டவன். தான் அவளுக்கு தாலிக் கட்டிய சூழ்நிலையை விக்ரம் குறித்த விபரங்களை மட்டும் தவிர்த்து விம் பார் போடாமலேயே விளக்கிக் கொண்டிருந்தவன். அவளெதிரில் தவறுச் செய்தவன் போல தலைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் அவ்வாறு அமர்ந்திருந்தது அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. எதற்காக இந்த தலைக் குனிவாம்? அவளும் அவன் சொன்னதற்கெல்லாம் ஊம் கொட்டினாள். கதைக் கேட்கும் எஃபெக்ட் அவளுக்கு. அவன் எதற்காக இத்தனை விஷயங்களையும் சொன்னான் என்பது அவளுக்கு இன்னும் புரிபடவில்லை.

அதனாலே…..

ம்ம்…….அதனாலே

நாளைக்கு நம்ம எங்கேஜ்மெண்ட்

ம்ம்…

அன்னிக்கு உன் கழுத்தில தாலியிருந்தா எல்லாரும் ஏதாவது பேசுவாங்க, அதனால…..

அதனால….

அந்த தாலியை கழட்டிடு.

……… பேச்சற்று நின்றவளிடம் மறுபடியும் கேட்க, இதுவரை தன்னிடம் பேசியிராதவன் தானாக வந்து பேசியிருக்க முன்பெப்போதும் ரூபனிடம் உரிமையாக பேசியிராதவல் உற்சாகத்தில் அவனுடனான பேச்சை நீட்டிக்கும் பொருட்டு நறுக்கென்று பதில் சொல்லாமல் வள வளத்தாள்.

ம்ம்…..நான் ஒன்னு கேட்கணுமே அத்தான்.......

சொல்லு

இதை என் கழுத்தில ராஜேஷ் அண்ணா ஹாஸ்பிடல் சிஸ்டர் யாரும் கட்டினாங்களோ?

ம்ப்ச் …ஏன் இப்படி கேட்கிறாள் என்று புரியாதவனாக சலித்தான்.

இல்லன்னா அந்த லேடி டாக்டர் கட்டினாங்களா?

இல்லை அதான் உனக்கு இப்பதானே சொன்னேன்.......இதை நான் தான் கட்டினேன்.

அப்படின்னா கழற்ற முடியாது.

அதான் இது ப்ராப்பரா கட்டினது இல்லில்ல, கழட்டினா ஒன்னும் தப்பில்ல கழட்டித் தா….

அதெல்லாம் தர முடியாது. நீங்க ப்ராப்பரா நம்ம மேரேஜ் அன்னிக்கு வேற தாலி கட்டுவீங்கள்ல அதுக்கப்புறம் வேணும்னா இதை கழட்டுறேன்.

"பிடிவாதம்" பற்களைக் கடித்தான் அவன்.

"பிடிவாதம் தான் உண்மையோ பொய்யோ தாலி பத்தி எத்தனையோ செண்டிமெண்ட் இருக்கு. சும்மாவே நம்ம வீட்டுக்குள்ள ஆயிரம் ப்ராப்ளம் ஓடிட்டு இருக்கு. இதில நான் இதைக் கழட்ட உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னால அதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது” விளையாட்டு பாவனையில் இருந்தாலும் உள்ளத்தில் உள்ளவைகளை சொல்கையிலேயே சற்றாக அவள் குரல் உடைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.