(Reading time: 12 - 23 minutes)

காற்றிலே ஆடும் காகிதம் நான்...

நீதான் என்னை கடிதமாக்கினாய்...

அன்பில் தொடங்கி...

அம்பில் முடிக்கிறேன்...

என் கலங்கரை விளக்கமே...

மெரீனா கடற்கரையில் மணலில் அமர்ந்திருந்தான் துஷ்யந்த்... சுற்றி சுற்றி வெளிச்சத்தை காட்டிக் கொண்டிருந்த அந்த கலங்கரை விளக்கத்தை பார்த்தபோது... தானும் ஒருகாலத்தில் இருட்டில் தத்தளித்த போது, தன் வாழ்க்கையில் கலங்கரை விளக்கின் வெளிச்சமாய் கங்கா வந்ததை நினைத்துப் பார்த்தான்.

சிறுவயதிலிருந்தே தனிமை ஒன்று தான் அவனுக்கு நெருங்கிய தோழனாக இருந்தது.. அதற்காக அவன் குடும்பத்தாருக்கு அவன் மேல் அன்பு இல்லையென்றோ... இல்லை அவனுக்கு, அவன் குடும்பத்தின் மேல் அன்பு இல்லையென்றோ இல்லை... இருந்தும் தனிமையை தான் தன் தோழனாக அவன் ஏற்றிருந்தான்...

அவனுக்குள் இருக்கும் ஏக்கம், எதிர்பார்ப்பு என்னவென்று அவன் குடும்பத்தார் தெரிந்துக் கொள்ளவில்லையோ... ஏன் அவனுக்கே அது தெரியவில்லையென்று தான் சொல்ல வேண்டும்... அவனுக்குள் இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு என்னவென்று கங்கா வந்ததற்கு பின்பு தான் அவனாலேயே அறிந்துக் கொள்ள முடிந்தது...

அதன் ஆயுட்காலம் குறைவு என்றாலும், இன்று வரையிலும் கூட தன் வாழ்க்கை இருண்டு விட்டதாக அவன் நினைத்ததே இல்லை... அவளைப் பார்த்துக் கொண்டும், அவள் குரலைக் கேட்டுக் கொண்டும், அவள் தன்னோடு இருக்கிறாள் என்ற நம்பிக்கையும் தான் அவனை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது... அதுவும் இவனே நினைத்துப் பார்க்காத உயரத்திற்கு..

ஆனால் இப்போதோ.. விடிந்தால் இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்கிற நிலையில், தன் வாழ்க்கை திரும்ப இருளை நோக்கி நகர்வதாக தான் தோன்றியது... அதுவும் அதில் அப்பாவியான இன்னொரு பெண்ணையும் அழைத்துச் செல்லப் போகிறான்... சந்தோஷமாக திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கப் போகிற நர்மதாவிற்கு, ஏமாற்றத்தை தான் பரிசாக அளிக்கப் போகிறான்...

சில நாட்களுக்கு முன்பு வரை, தனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று இவன் எதிர்பார்த்ததில்லை... அன்று கங்கா இவனிடம் பேச வேண்டும் என்று அழைத்த போது, எவ்வளவு சந்தோஷப்பட்டான்... அது இவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கான அழைப்பு என்று தெரிந்திருந்தால், அவளை பார்க்க அன்று இவன் சென்றிருக்கவே மாட்டான்.

ரம்பக் காலங்களில் இருந்தே... ஒவ்வொரு முறையும் அவனை வேதனைப் படுத்திய போதெல்லாம், இரவில் அதை நினைத்து கங்கா கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை... அப்போதே அப்படியென்றால், இப்போதோ அவனுக்கு எவ்வளவு பெரிய துயரத்தை பரிசாக அளித்திருக்கிறாள்... அவனுக்கு மட்டும் இல்லை, இவளுக்கும் அது  பெரிய துயரம் தான்...

அதை நினைத்து இப்போதும் இவளால் கண்ணீர் விட மட்டும் தான் முடியும்...?? தன் வேதனைகளை கண்ணீராலேயே கரைத்தாள்... உடலில் உள்ள சக்தி முழுதையும் கண்ணீராக வடித்தாள்... அவன் ஏன் என் வாழ்க்கையில் வந்தான்... இருவரும் சந்திக்காமலேயே இருந்திருந்தால், இத்தனை துயரங்கள் இருவருக்குமில்லையே... என்று நினைத்தவள் ஒட்டு மொத்தமாக அழுது தீர்த்தாள்...

ஏன் என் வாழ்வில் வந்தாய்...

கண்ணா நீ...

போவாயோ கானல் நீர் போல்...

என் வாழ்வினிலே...

அனைவரும் உறங்கும்...

இரவெனும் நேரம்...

அது என் தலையணை

நனைத்திடும் ஈரம்...

எவ்வளவு நேரம் அழுதாலோ தெரியவில்லை... வாணிம்மா வந்து விடுவார்களே... என்று நினைத்தவள், எழுந்து விளக்குகளை உயிர்பித்து, முகம் கழுவிக் கொள்ளலாம் என்று நினைத்தப்படியே எழுந்தவளுக்கோ... அழுதழுதே அவள் சக்தியெல்லாம் வடிந்துப் போயிருக்க, அப்படியே கட்டிலில் மயங்கி சரிந்தாள்.

ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் கொஞ்சம் பெரிதாக இருக்கும்... இப்போ என்னால இவ்வளவு தான் கொடுக்க முடிந்தது... பொறுத்துக் கொள்ளவும்... நன்றி...

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.