(Reading time: 18 - 35 minutes)

தற்குள் வீடு வந்துவிட்டதா? என்று பார்த்த வருனிடம் கதிரை காண்பித்து இவனை நம்பி வண்டியில் நான் மட்டும் தான் ஏறுவேன். பட் உன்னையும் இன்று என்னுடன் கூட்டிவந்துவிட்டேன். அப்பா! என்னவேகம் என்று போலியாய் பயப்படுவதுபோல் பாவனைசெய்தான் மஹிந்தன்.

அவன் அவ்வாறு கூறியதை கேட்டதும், கதிர்! நீ உன் மாமா சொல்வதை நம்பி விடாதே காரில் ஏறியதும் எனக்கு அவன் போட்ட கண்டிசன் என்ன செய்வாயோ தெரியாது இன்னும் அரை மணி நேரத்தில் நாம் வருணை அவன் வீட்டில் விட்டுவிடவேண்டும் என்றான். ரொம்ப முக்கியமான வேலை உடனே போக வேண்டும் சோ! நான் ஒரு மணி நேரம் எடுக்கும் டிஸ்டன்சை அரை மணி நேரத்தில் ரீச் ஆகுமாறு ஓட்ட வேண்டிவந்தது என்றான்.

கதவை திறந்து இறங்கிய வருனிடம் எனக்கு டிப்ஸ் சொல்லிவிட்டு போ வருண் என்ற மஹிந்தனிடம் வீட்டிற்குள் வாருங்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றான் வருண்.

அவன் அவ்வாறு சொன்னதும் மஹிந்தன், “ஐ ஹவ் அர்ஜென்ட் வொர்க்”. சோ! அடுத்த தடவை நான் உன் வீட்டிற்கு ழையாவுடன் வரும் போது உன்னிடம் டிப்ஸ் கேட்டுக் கொள்கிறேன் என்ற கூறிவிட்டு அவனுக்கு பை சொல்லிவிட்டு காரை கிளப்பிய கதிரிடம் சோலாஹோட்டலுக்கு போ கதிர் அங்கு அஜய்யின் தந்தை குமரேசன் வந்து காத்திருப்பார் என்றான்.

மஹிந்தன் காரைவிட்டு இறங்கி வாயிலில் சென்றதுமே எதிர் நோக்கிவந்த குமரேசன் வாங்க சார் நீங்கள் என்னை பார்க்க வரச் சொன்ன உடனேயே நான் கிளம்பி வந்துவிட்டேன்.என்று கூறியவரைப் பார்த்தவன் மரியாதை நிமித்தமாக் கை கொடுத்து குலுக்கியவன், குமரேசன்! நீங்கள் நான் சொன்னவுடன் வந்துவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்றான், வாருங்களேன் உள்ளபோய் உட்கார்ந்து நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேன் என்பதனை சொல்கிறேன் என்றதும் அவரும் பவ்யமாக சரிசார், என்றவர் அவனுடன் உள்ளே அவர்களுக்காக் புக் செய்திருந்த மேஜையில் சென்று அமர்ந்தார்.

மிஸ்டர் குமரேசன் இந்த தடவை எங்கள் எஸ் வி என் ஸ்டீல் பாக்டரியின் ப்ளாஸ்ட் பர்நேன்ஸ் ஸ்லாக்( ஊதுலை கசடு) டெண்டரை உங்களுக்கு தருவதாக டிசைட் செய்திருக்கிறேன், என்றான்.

அவன் கூறியதை கேட்ட குமரேசனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவனுடைய ஸ்டீல் பாக்டரி கழிவு டெண்டர் தன்னைப் போன்றவர்களுக்கு கிடைப்பதால் தன்னுடைய பிசினெஸ் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்பதை உணர்ந்தவர். எனவே, கடந்த நான்கு ஐந்து வருடமாக அவரும் அந்த டெண்டரை கைப்பற்ற பெறும் முயற்சி செய்து கொண்டிருந்தார் இருந்த போதிலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில் ஸ்டீல் பாக்டரியின் உரிமையாலனேரே தன்னிடம் வந்து அந்த டெண்டரை உங்களுக்குத் தருகிறேன் என்றதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை குமரேசனுக்கு.

அவர் முகத்தில் வந்த மகிழ்ச்ச்சியின் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்த மஹிந்தன், ஆனால்! அதற்கு நீங்கள் எனக்கு ஓர் உறுதி கொடுக்க வேண்டும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும், சொல்லுங்க சார் நான் என்ன செய்யவேண்டும் என்று குழப்பத்துடன் கேட்டார். ஏனெனில் தான் ஒரு பிசினெஸ் மேன் என்றாலும் மஹிந்தனின் பிசினெஸ் சாம்ராஜ்யத்தின் முன் தன்னுடையது கடுகளவு தான் இருக்கும். அப்படிப்பட்டவனுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவர் மனதில் உண்டானது.

அவரின் கேள்வியை பார்த்து சிரித்தபடி நீங்கள் பயப்படுமாறு எந்த உதவியையும் உங்களிடம் நான் கேட்கப் போவது கிடையாது.சொல்லப் போனால் நீங்கள் எனக்கு கொடுக்கும் இந்த உறுதியால் இலாபம் உங்களுக்குத்தான் அதிகம். நான் ஜஸ்ட் ஓர் இண்டர்மீடியேட்டர்தான் எனக்கு இதில் இலாம் என்று பார்த்தால் என் பெர்சனல் லைப்பில் என் இமேஜை இந்த விசயத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவதால் உங்களுக்கு இப்படி ஓர் சான்சை கொடுக்கிறேன் என்றான்.

உடனே குமரேசன் முதலில் உங்களுக்கு நான் என்ன உறுதி கொடுக்கணும் என்று சொல்லுங்கள். என்னால் முடியுமானால் உடனே நான் சரிசொல்லிவிடுகிறேன் என்றார்.

உங்களுக்கு எனக்கு கல்யாணம் ஆனா விசயமும் இக்கல்யாணத்திர்க்கு முன் ஐஸ்வர்யாவுடன் நடந்த நிச்ச்ச்சயம் முறிந்து விட்ட விசயமும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன்

உங்கள் மகன் அஜய்க்கு எனக்கு நிச்சயம் செய்திருந்த ஐஸ்வர்யாவிற்கும் கல்யாணம் முடிக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் உங்களின் மோட்டார் கம்பெனியின் பங்குகளில் பெரும்பகுதி இப்பொழுது அந்த பெண் ஐஸ்வர்யாவின் வீட்டார்களின் வசம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இந்த நிலையில் உங்களுடனான அந்த பெண்ணின் திருமணம் நின்றதால் அதன் பங்கு விலை சரியப்போவதாக் கேள்விப்பட்டேன். இந்த சூழ்நிலையில் என் பையனை இதில் கொண்டுவருவதில் உங்களுக்கு என்ன இலாபம் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார் குமரேசன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.