(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 06 - தேவி

vizhikalile kadhal vizha

லர் வேலையில் சேர்ந்து ஒரு செமஸ்டர் முடிவடைய இருந்தது.. முதலில் study holidays போது பேராசிரியர்களுக்கு மட்டும் காலேஜ் இருந்தது. அங்கிங்கே ஒரு சிலர் சிறப்பு வகுப்புகள் எடுக்க, மற்றவர்கள் எக்ஸாம்க்கு தேவையான ஏற்பாடுகள் என்று பிஸி ஆக இருந்தனர்.

அவள் பாடம் நடத்தி முதல் முறையாக எக்ஸாம் நடக்க போவதால், students விட மலர் தான் மிகுந்த டென்ஷன் ஆக இருந்தாள். மலர் தான் எடுக்கும் வகுப்புகளில் சில வீக்கான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காக வர சொல்லிருந்தாள்.

செழியன் இடையில் தன்னுடைய படிப்பின் காரணமாக லீவில் சென்று இருந்ததால் அவனுடைய portions கொஞ்சம் விடுபட்டு போயிருந்தது. அதை முடிப்பதற்காக அவன் எடுக்கும் வகுப்பு மாணவர்களையும் வர சொல்லிருந்தான்.

செழியன் BSC MSC final இயர் பாடங்கள் நடத்துபவன். அவன் இரண்டு batch உம வர சொல்லிருக்க, BSC கிளாஸ் ரூம் ஐ சற்று நேரம் பார்த்துக் கொள்ள சொல்லி மலரை அனுப்பி வைத்தான்...

இந்த கும்பல் தான் மலரை முதல் முதலில் ராகிங் செய்தவர்கள். அவள் இது வரைக்கும் இந்த கிளாஸ் வர நேரிட்டதில்லை. அந்த மாணவர்கள் அங்கே அங்கே பார்க்கும்போது மரியாதையுடன் விஷ் செய்து விட்டு நகர்ந்து விடுவார்கள்.

இன்று தான் நேரடியாக வந்து இருக்கிறாள். அவள் வந்தவுடன் விஷ் செய்து விட்டு அமர்ந்தவர்கள், அன்றைக்கு ராகிங் செய்த கும்பல் தலைவன்,

“மேம்... நீங்க இன்னிக்கு கிளாஸ் எடுக்க போறீங்களா?”

“இல்லை.. உங்க சார் வேற கிளாஸ் எடுத்துட்டு இருக்கார்.. அவர் வர வரைக்கும் நான் உங்கள monitor பண்ண போறேன்.. அவ்வளவு தான்.”

“ஓகே.. இப்போ நாங்க என்ன பண்ணனும் மேம்..?”

“ஹ்ம்ம்.. நீங்க lessons revise பண்ணுங்க.. எதாவது டவுட் இருந்தா, எனக்கு தெரிஞ்சவரை explain பண்றேன். “

மேம்... பாடம் படிச்சு போர் அடிக்குது.. வேறே எதாவது சொல்லுங்களேன்..

“ஏன் சார்... இப்போ படிக்காமல் அப்போ எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் படிக்க போறீங்களா?”

“மேடம் .. மார்ச் போனா செப்டம்பர் உண்டு கேளேடா கண்ணா.. உங்களுக்கு தெரியாதா?”

“அது எனக்கும் தெரியும்... ஆனால் நீங்க final இயர் ,, சோ உங்களுக்கு மார்ச் போனா .. ஒரு இயர் போச்சே... அது தெரியுமா?

இது எல்லாம் students வாழ்க்கையில் சகஜமப்பா..

“ஸ்ஸ்.. முடியல..”

“இதுக்கே இப்படியா... இன்னும் எவ்ளோ பார்க்க வேண்டியிருக்கு?” என்று வடிவேலு பாணியில் ஒருவன் சொல்ல, கிளாஸ் மொத்தமும் சிரித்தது..

மலரும் சிரித்தவள் “சரி.. படிக்க வேண்டாம்...” என,

மொத்த கிளாஸ் உம “ஓஹோ...” என்று சத்தம் கொடுத்தனர்.

“ச்ஷ்... “ என்று அடக்கியவள், “ உங்க எல்லோருடைய வருங்காலம் பத்தி பேசலாமா? “ முதலில் எழுந்தவனே “ அட போங்க மேடம்.. இதுக்கு பாடமே தேவலை... வருங்காலம் பத்தி யோசிச்சு நிகழ் கால நிம்மதிய கெடுத்துக்காதீங்க அப்படின்னு பெரியவங்களே சொல்லிருக்காங்க.. “

“ஓஹோ.. சரிங்க.. பெரியவரே... “ என்றவள் “படிப்ப தவற இந்த காலேஜ் பத்தி சொல்லுங்க.. “ என,

ஒருவன் எழுந்து “மேடம் இந்த காலேஜ்லே எனக்கு பிடிச்சது மரத்தடி தான்.. “ என,

“ஏன்?”

“எல்லா காலேஜ் லேயும் மரம் இருக்கும்.. ஆனா வாட்டமா சிமெண்ட் பெஞ்ச் இருக்காது.. இங்கே தான் அந்த சிமெண்ட் பெஞ்ச் இருக்கு.. அதுலே இடம் பிடிச்சிட்டோம் அப்படின்னா, வீட்டுலே AC லே தூங்கரத விட நிம்மதியா தூங்கலாம்.. ஒரு சின்ன suggestion .. அங்கே அங்கே குப்பை தொட்டி வச்சிருக்கிற மாதிரி. ஒரு சின்ன அலமாரி செஞ்சு .. சின்ன சின்ன குஷன் வச்ச நல்ல இருக்கும்.. நீங்க கொஞ்சம் management கிட்ட recommend பண்ணுங்களே ப்ளீஸ்”

“அது சரி.. அப்போ எங்க lectures எல்லாம் அவ்ளோ நல்லவா இருக்கு?”

“இன்னுமா உங்களுக்கு புரியல... இந்த காலேஜ் ஓட மொத்த strength கணக்கேடுக்க, கிளாஸ் ரூம்லே முடியாது... மரத்தடி, கான்டீன் , ஆடிட்டோரியம் அங்கெல்லாம் தான் எடுக்கணும்.”

அடுத்து ஒருவன் எழுந்து “மேடம்.. நம்ம கான்டீன் ஓட்ட வடை தான் ஸ்பெஷல் “ என

“அது என்ன ஸ்பெஷல் ?”

“உங்களுக்கு இந்த காலேஜ் வரலாறு தெரியுமா? எங்க முன்னோடிகள் எல்லாம் வார வாரம் எதாவது ஒரு பிரச்சினைக்கு strike பண்ணிட்டு இருந்தாங்க.. ஒரு வாரம் எந்த பிரச்சினையும் கிடைக்கல.. என்ன பண்றது அப்படின்னு யோசிச்ச ஐன்ஸ்டீன் அறிவாளிகள் ... அன்னிக்கு கான்டீன்லே போட்ட வடைலே ஓட்டை இல்லைன்னு strike பண்ணினன்களாம் அதை கேட்ட நானும் நாம படிக்கும்போது அப்படி எதாவது நடக்குமான்னு பார்த்துட்டு இருக்கேன்.. இப்போ கான்டீன் contractor வடை போட்டா தானே பிரச்சினை என்று பஜ்ஜி, போண்டா, சமோசா ன்னு போட்டு சமாளிக்கிறார்..” என்று சொல்ல,

மீண்டும் கிளாஸ் ரூம் சிரிப்பால் அதிர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.