(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 07 - தேவி

vizhikalile kadhal vizha

ந்த செமஸ்டர் exams எல்லாம் முடிந்து காலேஜ் students எல்லோருக்கும் லீவ் விட்டிருக்க, staff எல்லோருக்கும் பேப்பர் correction வொர்க் இருந்தது.

அந்த டைம் காலேஜ் students இல்லாததால் staff எல்லோருமே கொஞ்சம் லிபெரலக இருந்தனர். மலரும் செழியனும் ஒரே சமயத்தில் காம்பஸ் உள்ளே வர, இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து இருந்தனர்.

வழக்கம்போல் பார்கிங் ஏரியாவில் வண்டியை விட்டு விட்டு நிமிர்ந்தவர்கள் , சற்றே வெட்கம் கலந்த சிரிப்பை வெளியிட்டனர்.

அன்றைக்கு மலர் தன் பிங்க் ஸ்கூட்டி கலரில் அழகான லேகிங்க்ஸ் வித் ப்ளக் டாப்ஸ் அணிந்து ஷால் ஐ.. ஒற்றை பக்கத்தில் விட்டிருக்க, இரண்டு பக்கம் முடி எடுத்து சென்டர் கிளிப் போட்டு, கீழே விரித்து விட்டு இருந்தாள். இதுவரை புடவையில் பார்த்தே பழகி இருந்த செழியனுக்கு , அவளின் இந்த அலங்காரம் பார்த்து விசில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. அப்போதுதான் காலேஜ் படிக்கும் பெண் போல் இருந்தாள். அதிலும் அவளின் விரித்து விடப்பட்ட கூந்தல் மயில் தோகையை நினைவு படுத்தியது.

செழியனும் அன்று காலேஜ்க்கு ப்ளூ ஜீன்ஸ் ப்ளக் டீ ஷர்ட் என வந்து இருந்தான். பார்க்க கல்லூரி படித்து முடித்த தோற்றம் கொடுத்தது,

இருவருமே இது வரை கல்லூரிக்கு இப்படி வந்தது இல்லை. செழியன் மலரின் முதல் மாத சம்பளம் வாங்கிய அன்று ஹோடேலில் பார்த்த பின்பு , வெளியில் இருவரும் சந்தித்தது இல்லை,

இவர்கள் department OD போகும்போது கூட, student உடன் வருவதால் இருவருமே அவர்களின் வேலைக்கு உரிய மதிப்பு குறையா வண்ணம் தான் நடந்து கொள்வார்கள். வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையிலும் எளிமையான காட்டன் புடவைகளை இரவிற்கு உடுத்துக் கொள்வாள் மலர். அதில் அவள் பாட்டி மிகவும் கண்டிப்பு. வீட்டில் உடுத்துவதை பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும், இவள் இந்த மாதிரி வெளியே தங்க நேரும்போது ஏகப்பட்ட அறிவுரை சொல்லுவார். அதில் சில மலருக்கு எரிச்சல் கொடுத்தாலும் அவளால் அவரின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடிந்தது. அதை முடிந்த வரை பின்பற்றவும் செய்தாள்.

இவர்கள் department professor ஒருவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. அதற்கு பார்ட்டி கொடுப்பதற்காக அன்றைக்கு லஞ்ச் அவர் அழைத்து போவதாக சொல்லி இருந்தார். ஏதாவது function என்றால் அதற்கு தகுந்த மாதிரி உடை அணியலாம்.. வெறும் பார்ட்டி தானே என்று  தான்  இருவரும் casual உடையில் வந்தனர்.. ரெகுலர் காலேஜ் இருந்து இருந்தால் என்னவகிலும் formal டிரஸ் அணிந்து இருப்பார்கள்.

அன்றோடு staff வொர்கிங் days உம முடிகிறது. அன்றைக்கு காலை இரண்டு மணி நேரம் மட்டுமே கல்லூரியில் இருக்க வேண்டும். அதனால் கல்லூரிக்கு வரும்போதே casual உடையில் வந்து விட்டனர்.

விசிலடிக்கும் ஆசையை அடக்கி கொண்ட செழியன்,

“ஹலோ வி... “ என்று ஆரம்பித்து “மலர் .. ஹ்ம்ம்.. இந்த costume லே உன்னை.. சாரி.. உங்களை எதிர்பார்க்கலை..” என்று சற்றே தடுமாற்றத்தோடு கேட்டான் செழியன்..

அவன் இதுவரை இப்படி ஆனதில்லை.. எந்த சூழ்நிலையிலும் எதிரில் நிற்பவர் தன் உணர்வுகளை கண்டுபிடிக்கும் அளவு பேச மாட்டான்.. முதல் முறையாக மலரிடம் அவனால் அதை செயல்படுத்த முடியவில்லை. தன்னை கட்டுபடுத்த தன் pant பாக்கெட்டுள் கையை விட்டுக் கொண்டான்.

மலரும் சற்றே தடுமாறி “சார்.. “ என்றவள் பின் “இல்லை.. பார்ட்டி என்பதால் தான் குர்தி அணிந்து வந்தேன்.. அதுவும் நம்ம வளர்மதி மேடம்ட்ட கேட்டுட்டு தான்.. எதுவும் ப்ரோப்லேம் வருமா சார்..” என்று வினவ,

“நோ.. நோ.. அப்படி எல்லாம் இல்லை.. இல்லை இந்த ட்ரஸில் பார்க்கும் போது ஸ்டுடென்ட் மாதிரி இருக்க.. சாரி இருக்கீங்க.. அதான் அப்படி கேட்டேன்..”

“இட்ஸ் ஓகே  சார்.. இப்போ தான் students யாரும் இல்லையே.. சாதரணமாவே கூப்பிடுங்க சார்.. “

பின் சற்று தயங்கி “ நீங்களும் ஜீன்ஸ் எல்லாம் போட்டால் professor மாதிரி இல்லாமல் நல்லா இருக்கீங்க. சார்..”

அவள் மனதினுள் மாடல் மாதிரி இருக்கீங்க என்று தான் வந்தது.. ஆனால் அது தவறா படுமோ என்று தான் நல்லா என்றதோடு நிறுத்தி விட்டாள்.

“ஹ்ம்ம்.. சார் எல்லாம் வேண்டாம் மலர்.. நாமதானே இருக்கோம் செழியன் நே சொல்லுங்க..” என்றவன்,

“லெட் us கோ “ என்றவாறு இருவரும் தங்கள் department நோக்கி சென்றனர்.

ன்றைக்கு அட்டேண்டன்ஸ் sign செய்துவிட்டு.. மிச்சம் இருந்த பேப்பர் correction முடித்து கம்ப்யூட்டர் department சென்று கொடுத்து விட்டு வந்தனர்.

இவர்கள் department மொத்தம் 13 பேர் lecturer.. எல்லோருமே அன்றைக்கு பார்ட்டி மன நிலைமையில் தான் இருந்தனர்.. அதனால் பேப்பர் correction போதும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு , கேலி செய்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் HOD “என்ன செழியா... இன்றைக்கு ஒரு மார்க்கமா வந்து இருக்க...?”

“ஏன் சார்... ? நல்லா தானே இருக்கேன்..”

“உனக்கு என்னபா.. இந்த காலேஜ் ஹீரோ நீ.. எங்கள எல்லாம் யார் கண்டுக்கற..?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.