(Reading time: 16 - 32 minutes)

சித்திர மேனி தாழம் பூ

சேலை அணியும் ஜாதி பூ

சிற்றிடை மீது வாழை பூ

ஜொலிக்கும் செண்பக பூ

தென்றலை போல நடபவள்

என்னை தழுவ காத்து கிடப்பவள்

செந்தமிழ் நாட்டு திருமகள்

எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்

கொட்டும் அருவி போல சிரிப்பவள்

மெல்லிய தாமரை காலெடுத்து

நடையை பழகும் பூந்தேரு

மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

சித்திரை மாத நிலவொளி

அவள் சில்லென தீண்டும் பனி துளி

கொஞ்சிடும் பாத கொலுசுகள்

அவை கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தை போல இருப்பவள்

வெல்ல பாகை போல இனிப்பவள்

சின்ன மை விழி மெல்ல திறப்பவள்

அதில் மன்மத ராகம் படிப்பவள்

உச்சியில் வாசனை பூ முடித்து

உலவும் அழகு பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

என இந்தர் பாடி முடித்ததும் அனைவரும் கைதட்டினர். அவர்கள் இருந்தது தனி ஹாலாக இருந்ததால் இவர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுடன் சேர்ந்து வெய்டர்ஸ் ம் கை தட்டினர், என்ன வென்று புரியாவிட்டாலும் இந்தரின் குரலில் அந்த பாட்டுக்காக........

“என்ன இந்தர் வர போற மருமகளை பற்றி பெரிய அளவு கற்பனையில் இருக்க போல”என சம்யுக்தா கேட்டார்......

“மா...... இது உழவன்  படத்தில், பிரபு  பாடின பாட்டு.  பாட்டு பாடினா அனுபவிக்கனும் , ஆராய கூடாது” என தனது தாய்க்கு பதில் கூறினான் இந்தர்.........

“அப்படின்னா சரி, உன் குரலில் ரொம்ப நல்லா இருந்தது பாட்டு” என மெச்சினார்.........

“இருந்தாலும் பாஸ், உங்க பாட்டில் இருந்த பெண் கற்பனையில் பார்த்த மாதிரி இல்லையே, எங்கேயோ நேரில் பார்த்த மாதிரி  இருந்தது” என ஸ்ருதி ஆரம்பித்த பொழுது........

“போதும், எல்லோரும் கிளம்பலாமா? இல்லை டின்னருக்கும் இங்கயேவா? என கூறி அனைவரையும் மேலும் பேச விடாமல் அங்கிருந்து கிளப்பி சென்றான் இந்தர்.........

பூர்வியுடன் தனியாக அதிகம் பேச முடியாததால் பாட்டில் கூறிவிட நினைத்தான் இந்தர்........ அவளுக்கு புரிந்தால் சரி தான் என.......

அதனால் திரும்பும் பொழுது வீட்டிற்க்கு செல்லாமல், இவர்களுடனேயே ரெசார்ட்டிற்கு சென்றான்....... கவனமாக, தங்களுடன் வருவேன் என்ற குழலியை வேறு ஒரு நாள் செல்லலாம் என கூறி அப்பா, அம்மாவுடனேயே அனுப்பி வைத்தான்........

வர்களது ரேசார்டிற்கு வந்த பின் , மாலை நேரம் தீவின் ஒரு ஓரத்தில் இருந்த ஒரு பகுதியை பார்க்க வருமாறு பூர்வியை அழைத்தான் இந்தர். ரெசிடண்ட் மேனஜர் என்பதால், அவனது அழைப்பை தட்ட முடியாது அங்கு சென்றாள் பூர்வி.........

அந்த இடத்தை பார்த்ததும் மனமே லேசானது போல் இருந்தது பூர்விக்கு..... சூரியன் முழுவதும் மறைந்து, முழுதும் இருட்டாமல் பார்க்கவே ரம்யமாக மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து ஒரு டேபிள் இரண்டே சேர், அந்த மணலில் ஆங்காங்கு மெழுகுவர்த்திகள் என, க்யூபிட் இல்லாத குறை மட்டுமே ஆக இருக்க, அவ்வளவு ரொமான்டிக்காக இருந்தது அந்த இடம்.

அவள் சென்ற பொழுது ஒரு சேரில் இந்தர் அமர்ந்திருந்தான். மற்றொன்றில் அவளை அமர சொன்னான். அங்கு ஒரு வெய்ட்டர் இருந்ததால் மறுக்க முடியவில்லை பூர்வியால்.........

சாதாரணமாக ஹனி மூனுக்கு வரும் ஜோடிகளுக்காக இப்படி அமைப்பது தான். அவ்வப்பொழுது பூர்வியும் அதை சரி பார்க்க வருவதும் உண்டு...........பூர்வி அமர்ந்ததும் அந்த வெய்ட்டர் சில மாலை நேர உணவான ஸ்ப்ரிங் ரோல், குக்கிஸ், சிக்கன் டிக்கா என அடுக்கி விட்டு, காபியை பிளாஸ்கில் வைத்து விட்டு அகன்றான்........

NAU

“என்ன இந்தர் இது? இன்னைக்கு எந்த ஹனிமூன் ஜோடிகளும் இங்கு வரலையே, பின்ன எதற்கு இந்த ஏற்பாடு? என பூர்வி அவனிடம் வினவினாள்.........

“ஹனிமூன் ஜோடிகள் ஆக போரவங்களுக்கு  கூட ஏற்பாடு பண்ணலாமே!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.