(Reading time: 16 - 32 minutes)

ங்கிருந்து தனது அலுவலக அறைக்கு வந்த பூஜா, கோபத்தில் உடனே அங்கிருந்த சிஸ்டத்தில் தனது ராஜினமா கடிதத்தை  டைப் அடித்து  பிரிண்ட் அவுட் எடுத்து, அதை  எம். டி.  நாஷிதின் அறைக்கு எடுத்து சென்று, அவரிடம் நீட்டினாள்.

“என்ன பூர்வஜா இது?

“சார் நான் வேலையை ராஜினாமா செய்யறேன். அதுக்கு தான் இந்த கடிதம்........

“முதலில் நீங்க உட்காருங்க, என்ன ஆச்சு? எனி ப்ரோப்ளம்? என பூர்வியின் அவசரம் புரியாமல் மெதுவாக வினவினார்.

“சார், எனக்கு இங்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை. அதனால் எனோட ராஜினாமாவை எத்துகோங்க . நான் நாளைக்கே ஊருக்கு போறேன்.” என படபடவென்று கொட்டினாள் பூஜா.....

“யார் ஊருக்கு போறாங்க? என்ற கேள்வியுடன் அங்கு நுழைந்தான் இந்தர்.

“பூர்வஜா தான், திடீர்ன்னு வந்து ஏதேதோ சொல்றாங்க” என எம்.டி கூறினார்.

“காண்ட்ராக்ட் சைன் செய்த போது படிச்சு பார்கலையாமா மேடம்? என இந்தர் நகலாக கேட்டான்.........

அப்பொழுது தான் பூர்விக்கு நினைவு வந்தது ஒரு வருட காண்ட்ராக்ட் சைன் செய்தது. முன்பு அம்மாவின் கல்யாண நெருக்கடியில் இருந்து தப்பிக்க உதவிய காண்ட்ராக்ட் இப்பொழுது இந்தரின் கல்யாண நெருக்கடிக்கு, தலை மேல் தொங்கும் கத்தியாக இருப்பதை உணர்த்தியது.

“மேடம்க்கு உடம்பு சரி இல்லன்னா ரெண்டு நாள் லீவு வேணா எடுத்துக்கோங்க” என நமட்டு சிரிப்புடன் கூறினான் இந்தர். இங்க இருந்து அவ்வளவு சீக்கிரம் ஓட முடியாது பூஜா, சுவிஸ்ஸி லிருந்து எனக்கு தெரியாமல் ஓடியது போல் என தனக்குள் சொல்லி கொண்டான் இந்தர்.......

“லீவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்” என கூறி கோபமாக தனது அறைக்கு சென்றாள் பூஜா.......

ரண்டு நாட்கள் கழித்து தனது வேலையில் ஈடுபட்டிருந்தாள் பூர்வி, அன்று  ஆள் இல்லா தீவிற்கு கெஸ்டுகளை அழைத்து செல்லும்  பிக்னிக் இருந்தது.  அங்கு சென்று மாலை நேர டீ, & ஸ்நாக்ஸ்  , மற்றும் இங்குள்ளவர்களின் கிராமிய கலையான “பொடு பேரு” என்ற கலை நிகழ்ச்சியும் இருக்கும்.  மாலை நான்கு மணிக்கு சென்று ஆறு மணிக்குள் திரும்பி விடுவார்கள்.

அவர்களுடன் செல்வது பூர்வியின் வேலை இல்லை, எனினும் இந்தர் இங்கு ரெசொர்டிலேயே தங்கி இருப்பதால், அவனை விட்டு ஒரு இரண்டு மணி நேரமாவது  தள்ளி இருக்க விரும்பினாள். அவன் அவளிடம் அவ்வாறு சவால் விட்டதிலிருந்து கோபத்தில் இருந்தாள் பூர்வி.

மாலை நேரம் பிக்னிக் கிளம்பிய குழுவுடன் அவளும் கிளம்பினாள். எம்.டி இடம் சென்று தானும் அவர்களுடன் சென்று வருவதாக கூறினாள்.

“தாராளமா போயிட்டு வாங்க, குழுவை விட்டு எங்கும் தனியாக மட்டும் போகாதிங்க, உங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்.” அவளுக்கு சம்மதம் அளித்தார்.

டூர் கைடு ஆரிப், ரெண்டு வெய்டர்ஸ், போட் காப்டன், அவனது இரண்டு உதவியாளர்கள், ஐரோபிய பயணிகள், மூன்று குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர், இவர்களுடன் பூர்வியும் சேர்த்து பத்தொன்பது பேர் கிளம்பினர்.

போடில் ஏறும் பொழுது ஸ்ருதி அவர்களுக்கு கொண்டு செல்லும் உணவை சரி பார்க்க வந்திருந்தாள். அப்பொழுது தான் பூர்வியும் அவர்களுடன் செல்வதை கவனித்தாள்.

“ என்ன பூர்வி சொல்லவே இல்லை, நீயும் பிக்னிக் போறன்னு?

“ம்..... திடீர்ன்னு தான் தோனிச்சு, அதான் கிளம்பிட்டேன்.”

“நீ முன்னாலேயே சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே. இப்போ கொஞ்சம் வேலை இருக்கே’ என வருந்தினாள் ஸ்ருதி.........

“பரவாயில்லை ஸ்ருதி, இன்னொரு நாள் நாம சேர்ந்து போகலாம்.” என கூறி அவர்களுடன் கிளம்பினாள் பூர்வி.

அரை மணி நேர பயணத்தில் இருந்த இரட்டை தீவிற்கு அவர்கள் சென்றடைந்தனர். இரு தீவுகள் அருகருகில் இருந்தது. அவர்கள் இறங்கியது ஆளில்லா சிறிய தீவு. பக்கத்துக்கு தீவில் கிராம மக்கள் இருக்கிறார்கள் என்று ஆரிப் கூறினான்.

பூர்வி போட்டிலிருந்து இறங்கி கரை ஓரமாக நடக்க துவங்கினாள். வந்திருந்த வெயடர்ஸ் அனைவருக்கும் டீ , ஸ்நாக்ஸ் பரிமாறினர். அனைவரும் சாப்பிடும் பொழுது அவர்களிடம் ஆரிப் கூறி கொண்டிருந்தான் அந்த தீவை பற்றி.

“இந்த தீவை 20 நிமிடத்தில் நடந்தே சுற்றி வந்து விடலாம். பக்கத்துக்கு தீவிற்கு நடந்தே சென்று விடலாம். ஆனால் அப்படி யாரும் சென்று விடாதீர்கள்”. என ஆரிப்  கூறியதை கேட்க அங்கு பூர்வி இல்லை. அவன் கூறியது கேட்காத தூரத்திற்கு அவள் சென்றிருந்தாள். 

“ஏன் என சிலர் கேட்டனர்.

“இப்பொழுது இரண்டு தீவிற்கும் நடுவில் உள்ள நீரின் உயரம் குறைவாகவே இருக்கும்.  ஆனால் சிறிது நேரத்தில் ஹை டைட் ஆகி விடும். அந்நேரத்தில் இரு தீவுகளுக்கு நடுவில் உள்ள நீரின் ஓட்டம் அதிகம் இருக்கும். அதை கரன்ட் என்று சொல்வார்கள். நாம் அதில் இறங்கினால் அது நம்மை இழுத்து சென்று விடும். என்று விளக்கி கூறினான். ஆனால் இதை எல்லாம் கேட்க பூர்விக்கு தான் கொடுத்து வைக்க வில்லை.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.