(Reading time: 10 - 20 minutes)

அந்தப் படம் முடியுறவரை மகா நல்லவனா நடிச்சிருக்கான்... அந்தப்படம் சின்ன பட்ஜெட் படம்தான்.... ரெண்டு மாசத்துல முடிஞ்ச படம்.... பொள்ளாச்சி பக்கத்துல இருக்கற கிராமத்துலதான் முழுப்படமும் எடுத்தாங்க.... அதனால அவன் ரெண்டு மாசமும் வீட்டுப்பக்கம் வரலை.... அதனால அந்த producerக்கு என்னைப் பத்தி தெரியாம போச்சு.... படப்பிடிப்பு முடிஞ்சு வந்தபிறகு கொஞ்ச கொஞ்சமா அவனோட நடத்தைல மாற்றம் தெரிஞ்சுது.... எதுக்கெடுத்தாலும் என்கிட்டே கத்தி சண்டை போட ஆரம்பிச்சான்.... அது அப்படியே அடியா மாறிச்சு.... இப்படி இருக்கும்போதுதான் கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்குப் பிறகு நான் கருவுற்றேன்... ஆனா அது தங்கலை.... என்னோட கருப்பைல ஏதோ பிரச்சனை உடனடியா அதை நீக்கணும்ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.... அவனுக்கு அது வசதியாப் போச்சு.... அதையே சாக்கா வச்சு அந்தப் பெண்ணை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.... என்னை எப்படி கன்வின்ஸ் பண்ணின்னான்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை.... நானேதான் அவனோட ரெண்டாவது கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.... அவன் ஹீரோவா நடிச்ச படம் செம்ம ஹிட்... அதுக்கு பிறகு வரிசையா எல்லாப் படமுமே நல்லாப் போக ஆரம்பிச்சுது.... கல்யாணம் ஆன பிறகும் சில வருஷங்கள் இங்க வந்துட்டுதான் இருந்தான்...அதுக்குப்பிறகு  கொஞ்ச கொஞ்சமா அது குறைய ஆரம்பிச்சு அப்பறம் மொத்தமா நிறுத்திட்டான்... நான் அவனை சந்திக்க பண்ணின முயற்சியெல்லாம் வீண்.... என்னால அவனை பார்க்கக்கூட முடியலை.... ஃபோன் பண்ணினாலும் எடுக்கலை....”

“ஓ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தது ஒருத்தருக்கு கூடவா தெரியாது.... ஆச்சர்யமா இருக்கு.... அதுவும் ஒரு இடத்துல வீடு எடுத்து தங்கி இருக்கீங்க “

“நாங்க இருந்தது அவுட்டர் ஏரியா..... தனி வீடு வேற.... வீடு பார்த்தது எல்லாம் அவன்தான்.... இன்னும் சொல்லணும்ன்னா அந்த வீட்டு ஓனர் யாருன்னு கூட எனக்குத் தெரியாது...  அவனோட ரெண்டாவது  கல்யாணம் முடிஞ்ச உடனேயே என்னை வேற வீட்டுக்கு குடி மாத்திட்டான்....”

“ஹ்ம்ம் இதுவரைக்கும் நீங்க சொன்ன கதைல தப்பு உங்க ரெண்டு பேர் மேலயுமே இருக்கு.... நரேஷ் சொன்னான் அப்படின்னு அவன் சொன்னதுக்கெல்லாம் நீங்க தலையாட்டி இருக்கத் தேவையில்லை... அட்லீஸ்ட் அவனை ரெண்டாம் கல்யாணம் பண்ணவாவது விடாம இருந்து இருக்கணும்...”

“நீங்க சொல்றது எல்லாம் சரிம்மா... எனக்கு அப்பத்தான் கர்ப்பப்பை எடுத்த நேரம்.... மனசளவுல ரொம்ப பாதிப்புல இருந்தேன்..... நான் என்ன பண்றேன்னே எனக்குத் தெரியலை.... இது எல்லாம் விடக் கொடுமை... என் சுய நினைவில்லாம அவன் கேட்டான்னு அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கேன்....”

“என்னங்க சொல்றீங்க.... அவன் எதுக்கு அப்படி ஒரு கையெழுத்து வாங்கினான்...”

“அவன் என்னை முழுவதுமா தவிர்க்க ஆரம்பிச்சதை நான் உணர்ந்த பிறகு எப்படியோ அவனை ஒரு நாள் வேற ஒருத்தர் ஃபோன்ல இருந்து பேசினேன்....”

“ஏன்னா என்னோட நம்பர் பார்த்தாலே எடுக்காம இருந்தான்.... அவனோட பழைய  நம்பரை வேற மாத்திட்டான்.... அவனைக் கூப்பிட்டு  என்னை பார்க்க வரலைன்னா நான் அவனோட வீட்டுக்கு வந்து அவன் பொண்டாட்டிக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு சொன்னேன்.... உடனே அவன் என்னை மகாபலிபுரத்துக்கு பக்கத்துல இருக்கற ஒரு பண்ணை வீட்டுக்கு வர சொன்னான்.... நானும் கிளம்பிப் போனேன்.... அங்க போனபோதுதான் நான் இந்த மாதிரி கையெழுத்து போட்டுக் கொடுத்ததே எனக்குத் தெரியும்.... அப்போ அவன் கூட ஒரு போலீஸ்காரரும் இருந்தார்.... ஏற்கனவே இந்த மாதிரி நான் அவனை மிரட்டின மாதிரியும் அப்போ இந்த மாதிரி எழுதி வாங்கின மாதிரியும் கூட சாட்சிக்கு அந்த போலீஸ்காரர்தான் இருந்தார்னும் சொல்லுவேன்னு சொல்லிட்டு, அந்தப் பேப்பரை என்கிட்டே காட்டி இனி அவன் வழில வந்தா என்னை அடையாளம் தெரியாம அழிச்சுடுவேன்னு மிரட்டினான்.... நானும் என்னை ஏமாத்தின நீ நல்லாவே இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்....”

“எல்லாம் சரி இது எல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் இருக்குமா... இப்போ என்ன திடீர்ன்னு அவன் மேல கோவம்.....”

“ஒரு நாலு மாசம் முன்னாடி வீடு ஒழிக்கும்போது அவனும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ எனக்கு கிடைச்சுது.... நாங்க சேர்ந்து எடுத்த படங்கள் எல்லாத்தையும் ஒரு நாள் சண்டைல போட்டு எரிச்சுட்டான்... இது மட்டும் எப்படி தப்பிச்சுதுன்னு இன்னை வரை தெரியலை... அதை வச்சு அவனை மிரட்டி நான் எழுதி கொடுத்த அந்த பேப்பரை வாங்கிடலாம்ன்னு அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.... அவன் முதல்ல நான் சொன்னதை நம்பவே இல்லை.... இந்த முறையும் என்னை வர சொன்னான்... நான் வர முடியாதுன்னு சொல்லிட்டேன்... சரி நான் வர முடியாது, என் ஃபிரண்டை அனுப்பறேன்னு சொன்னான்.... அவங்ககிட்ட அந்த பேப்பரும் கொடுத்து விடறேன்னு சொன்னான்....  அந்த ஆள் வந்து என்கிட்ட பேசிட்டு பேப்பரை காட்டிட்டு, நீ மொதல்ல போட்டோ காட்டு அப்போதான் நம்புவேன்னு சொன்னான்.....  நானும் எடுத்துட்டு வந்து காமிச்சேன்.... அதை பார்த்துட்டு, அவன் இந்தப் பணத்தை நரேஷ் செலவுக்கு வச்சுக்க சொன்னான்னு சொல்லி என் கைல பணத்தைக் கொடுக்கும்போது கரெக்டா போலீஸ் வீட்டுக்குள்ள நுழைஞ்சுடுச்சு.... வந்தவங்க நான் ஏதோ தப்பான தொழில் பண்றதா சொல்லி என்னை அர்ரெஸ்ட் பண்ணினாங்க....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.