(Reading time: 14 - 27 minutes)

‘அந்த விவேக் எதுக்கு நம்ம வீட்டிலே... முதல்லே அவனை இங்கிருந்து கிளப்பு. அப்புறம் தரேன் அப்பா நம்பர். உனக்கு நானும், அப்பாவும் வேணுமா, அந்த விவேக் வேணுமா சீக்கிரம் முடிவு பண்ணு. இல்லைனா நான் இப்படியே கிளம்பறேன்..’

‘ஹரிணி... விவேக் நம்ம வீட்டு கெஸ்ட்...’

‘மண்ணாங்கட்டி!!! இப்போ நீ போய் போக சொல்றியா. நான் போய் சொல்லட்டுமா...’  எகிறினாள் ஹரிணி.

வர்கள் வாவென்றால் வர வேண்டும்!!! வேண்டாமென்றால் வரக்கூடாதாமா??? யோசித்தபடியே ஒரு பெருமூச்சுடன் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார் தாமோதரன்.

‘இருங்க அங்கிள்.. நான் யோசிச்சு சொல்றேன். இவரை எங்கே பார்த்திருக்கேன்னு..’ இன்னமும் நெற்றியை தேய்த்தபடியே யோசித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீநிவாசன்.

‘இப்போ நீ அவனை கிளப்ப போறியா இல்லையா???” இது ஹரிணி

‘முடியாது..’

‘அப்படியா??? முடியாதா?? சரி நான் இப்போ நான் என்ன பண்றேன் பாரு..’ சொல்லிக்கொண்டே ஹரிணி ஹாலுக்கு வர, அவள் பின்னாலேயே சுஹாசினி ஓடி வர என்ன தோன்றியதோ எழுந்து விட்டான் விவேக்.

‘நான் கிளம்பறேன். சுஹாசினி..’

‘அய்யோ.. ஏன் அதுக்குள்ளே??? இன்னும் பார்ட்டி ஆரம்பிக்கவே இல்லையே??? என் ஃப்ரெண்ட்ஸ் யாருமே வரலை அங்கிள் இன்னும்..’ பரபரத்தான் ஸ்ரீனிவாசன்

‘இல்லடா கண்ணா. இன்னொரு நாள் நான் ரிலாக்ஸ்டா வரேன். அப்போ உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரோடையும் நாம நிறைய பேசலாம்’ என்றவன் அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு வாழ்த்திவிட்டு

‘ராகுல் எங்கே காணோம்....’ என்றான் சுஹாசினியை பார்த்து

‘அவர் வெளியிலே போயிருக்கார்.’

‘ஓ அப்போ கன்வே மை ரிகார்ட்ஸ் டு ஹிம்... நான் இன்னொரு நாள் வரேன்’ என அவளிடமும் விடைபெற்றுக்கொண்டு ஹரிணியை நிமிர்ந்து கூட பார்க்காமல் நடந்தான் விவேக்.. ஹரிணிக்குள் நிறையவே சந்தோஷமும், நிம்மதியும்.

காரை சரேலென்று கிளப்பிக்கொண்டு பறந்தான் அந்த மேகங்களின் நாயகன்.

‘திடீர்னு உங்கப்பா கண் முன்னாடி வந்திட்டா நீங்க என்ன பண்ணுவீங்க???’ ஹாசினியின் கேள்வியே அவனை சுற்றிக்கொண்டிருக்க கார் சாலையில் விரைந்துக்கொண்டிருக்க

அப்பா!!! நிஜமாவே திடீர்னு என் முன்னாடி வந்து நில்லுங்களேன்..’ என்றான் வாய்விட்டு. ‘அப்பா ப்ளீஸ்...பா..’

வந்துக்கொண்டிருந்தார் அவர்!!! அந்த சாலையின் இன்னொரு கோடியில் வந்துக்கொண்டிருந்தார் அவர். தாமோதரன்!!!

சுஹாசினி வீட்டில் இருந்த அந்த புகைப்படம் அவளது தந்தை தாமோதரனுடையது!!!

பல வருடங்களாகவே அவளுக்கு தெரிந்த ஆச்சர்யம்தானே அது!!!. உடையிலும் நடையிலும் பாவனைகளிலும் நிறையவே மாற்றம் இருந்தாலும் உருவத்தில் அவனது தந்தையை அப்படியே உரித்து வைத்தவராக அவளது தந்தை!!!

அவனது தந்தை இருந்தபோது ஓரிரு முறை அவரிடம் கூட சொல்லி இருக்கிறாள் இவள்.

‘நீங்க நம்ப மாட்டீங்க டாக்டர். எங்க அப்பா அப்படியே உங்களை மாதிரியே இருப்பார்..’

‘ஓ!!! ரியலி. ஒரு நாள் கண்டிப்பா மீட் பண்ணுவோம்..’ என்றார் அவர். ஆனால் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏனோ சரியாக வாய்க்கவில்லை.

அது ஏனோ அப்போது அவர் அந்த உருவ ஒற்றுமையை  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் மகனிடமும் சொல்லவில்லையோ அவர்???

இவளது தந்தையிடம் கூட சொல்லி இருக்கிறாள்தான். அவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அவனது தந்தையை பார்க்கும் போதும் ஹாசினி இந்த உருவ ஒற்றுமையை ரசித்துக்கொண்டேதான் இருப்பாள்.

தனது தாத்தாவை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறான் ஸ்ரீநிவாசன். நேரில் பார்த்திருந்தால் ஒரு வேளை அந்த உருவ ஒற்றுமை அவனுக்கு புரிந்திருக்குமோ என்னவோ!!! இவனது தந்தையின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில் சொல்லி இருப்பானோ என்னவோ இந்த உண்மையை.

அவளது தந்தையை விவேக் பார்ப்பதில், அவரில் தன் தந்தையை அவன் காண்பதில், கண்டு மகிழ்ந்து போவதில் துளியும் விருப்பம் இல்லை ஹரிணிக்கு.

‘ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் என்ற ஒன்று இல்லையே!!!’

இவன் காரில் பறந்து வந்துக்கொண்டிருக்க மெதுவாய் சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார் தாமோதரன்.

‘அப்பா ப்ளீஸ் வாங்கப்பா...’ இன்னொரு முறையாக வாய்விட்டு சொன்னான் நம் கேப்டன் விவேக் ஸ்ரீனிவாசன் !!!

 

தொடரும்......

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.