(Reading time: 40 - 79 minutes)

நானும் , அதான் தூக்கம் வந்திச்சா படுத்து தூங்கிட்டேன்… சோம்பல் முறித்தவள் அவன் மடியின் மேல் இன்னும் வசதியாய் பரவினாள்.

அத்தான் வீட்ல இருந்து போரடிக்கு, நீங்க இன்னிக்கு ஆஃபீஸ் போகாதீங்களேன். ப்ளீஸ்….

இந்த பேப்பர்ஸ் இப்ப சப்மிட் பண்ணனும் மா….. சீக்கிரம் வர பார்க்கிறேன் சரியா……என் செல்ல அனில்ல.. போக விடு….. ஜீவன் ஃபேக்டரி பேப்பர்ஸ் இது, ரொம்ப இம்பார்டெண்ட் மா எனக் கெஞ்ச , அவள் அவனை விடாமல் தொல்லைப் பண்ணிக் கொண்டே தோளில் தொங்கிக் கொண்டவாறு அவர்கள் அறையின் வெளியே வரை வந்தாள்.

எதிரில் அப்பாவைப் பார்த்ததும்,

அப்பா வாங்கப்பா என்றவள் மறுபடி கணவனிடம் அதே பாட்டை பாடி வைக்க,

“தம்பிதான் சொல்றாங்க இல்லியா? அப்புறமும் ஏன் உனக்கு இவ்வளவு பிடிவாதம்? அவங்க ரெண்டு பேருக்கும் இப்ப வெளி வேலையா அலையறதுக்கே நேரம் சரியா இருக்கும். கூட போயி ஹெல்ப் பண்ணோமானு இல்லாம அவர் வேலையும் கெடுக்கிறியா?” என கடிந்தார்.

அப்படின்னா நான் அத்தான் கூட ஃபேக்டரிக்கு போனா உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையாப்பா?

இதை எதற்காக தன்னிடம் மகள் கேட்கிறாளென புரியாதவராக, தான் முன்பெப்போதோ அகங்காரமாய் பேசிய வார்த்தைகள் ஒருத்தனை  சல்லி சல்லியாய் நொறுக்கி போட்டிருப்பதை நினைவில் வைத்திராதவர்,

“பின்ன வீட்டுல சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறதுக்கா படிக்க போன” என கேட்க

மாமனார் கொடுக்கும் கவுண்டரில் ரூபனுக்கு சிரிப்பே வந்து விட்டது.

எப்ப பாரு இவங்க ரெண்டு பேரு இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறது, பின்னே என்னையே டேமேஜ் செய்யிறது என அப்பாவை முறைக்க முடியாத காரணத்தால் கணவனை முறைத்தாள். அதில் இன்னிக்கு உனக்கு இருக்கு மகனே…… என்கிற மறை முக மிரட்டல் இருப்பதை உணர்ந்தவன் அங்கிருந்து நகர யத்தனித்தான்.

அவன் கையை விடாமல் பற்றியவள், நான் அப்போ நாளையிலருந்து ஆஃபீஸ் வருவேன் என அப்பா முன்பாக உறுதி படுத்திக் கொண்டாள்.

சரி வா , என அந்த பிடிவாதக் காரனையே உறுதிக் கொடுக்க வைத்து தான் கையை விட்டாள்.

இன்னிக்கு வரை மட்டும் தான் உங்களுக்கு ஃப்ரீடம் நல்லா எஞ்சாய் பண்ணிக்கோங்க, நான் அங்க வர்றதே நீங்க உங்க வேலையை சரியா செய்யிறீங்களான்னு பார்க்கத்தான் என மிரட்டியவளை ரசனையாய் பார்த்து விடைப் பெற்றான்.

அவளும் அப்பாவோடு அமர்ந்து சற்று நேரம் அளவளாவலானாள்.

இப்போது அவளும் ஃபேக்டரி சென்று வர ரூபனுக்கு வேலைகள் கொஞ்சம் குறைந்தது. வேலையாளாக அவளை பணி புரிய விடாமல் முதலாளியாய் வேலை பழக்கினான். ஓரளவு முன்பு பெற்ற பயிற்சி அவளுக்கு உதவிகரமாக இருந்தது. கணவன் இல்லாத தருணங்களில் ஓரளவு விஷயங்களை சமாளித்துக் கொள்வாள். முடியாத பட்சத்தில் அவனுக்கு போன் போட்டு புரியும் வரை அவனிடம் கேள்விகள் கேட்டு தெளிந்து செயல்படுத்துவாள்.

என்ன இருந்தாலும் அவளை நேரம் கழித்தே ஃபேக்டரி வரச் சொல்பவன், சாயங்காலம் கண்டிப்பாக சீக்கிரமே அனுப்பி வைத்து விடுவான்.

வீட்டில் முடிந்த வரை அத்தைக்கும், ப்ரீதாவுக்கும் உதவியாக இருப்பவள், சற்று வேலைகள் கடந்த பின்னே அலுவலகம் சென்று வருவாள், அடிக்கடி அம்மா அப்பாவைப் போய் பார்த்து வருவதும் , ஹனியுடன் நேரம் செலவழிப்பது, ராபினுடன்  விளையாடுவதும் என அவள் வாழ்க்கை அவளது இயல்பு மாறாமலேயே கடந்துச் சென்றது.

அவளின் குறையாத புன்னகையும் , மகிழ்ச்சியுமே ரூபனின் எதிர்பார்ப்பாக இருக்க அங்கு தடங்கலில்லாமல் கடந்துச் சென்றது அவர்களது வாழ்க்கை.

ஒரு வருடம் கடந்ததும் சற்று தன் வேலையில் கால் ஊன்றிய தம்பிக்கு திவ்யாவை பெண் கேட்கச் செல்ல குடும்பத்தில் சொல்லி முனைந்தான் ரூபன்.

ஒரு நல்ல நாளில் ஜீவனுக்கும் , திவ்யாவுக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடக்க ஒரு வருடம் கழித்து திருமணம் என்று அவர்கள் திட்டமிட்டுக் கொண்டனர்.

தீபன் தன்னுடைய ப்ளாட் தயாராகி ஒப்படைக்கப் பட அனைவரும் சேர்ந்து அங்கே இருக்கலாம் என அழைக்க,

பிள்ளைங்க சொந்த கால்ல முன்னேறி நல்லா இருக்கிறதை பார்க்கிறதை தவிர எங்களுக்கு என்ன சந்தோஷம், நாங்க இங்க தான் இருப்போம், நீ போப்பா என தனியாய் சிறகுகள் விரித்து பறக்க மகனை மகிழ்வோடு அனுப்பி வைத்தனர் பெற்றோர்.பேரன் ராபின் பெரும்பாலும் தாத்தா பாட்டியோடு இருக்க, வார இறுதி நாட்களை சேர்ந்தே கழிக்க அந்த வாழ்க்கை முறையும் அவர்களுக்கு பழகித்தான் போயிற்று.

அடுத்து இன்னொரு வைபவம் சில மாதங்களில் நடைபெற அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக கூடியிருந்தனர்.

ரூபன் கடந்த வருடம் ஆரம்பித்திருந்த வீட்டின் வேலை நிறைவு பெற்றிருக்க, பால் காய்ப்பு விழா அது. பார்த்து பார்த்து ரசித்து ரசித்து வீட்டை கட்டியிருந்தான் ரூபன்.  

தாமஸிக்கு தான் முன்பு வீடு கட்ட எண்ணியிருந்த அந்த குறிப்பிட்ட, பிரபலமான இடத்தில் எப்படி தன் மருமகன் வீட்டை நிர்மாணித்தான் என்பது ஆச்சரியமே? தன்னுடைய மருமகனுடைய சிந்தனைகள் ஓரளவு ஒன்று போலவே இருப்பதைப் பார்த்து அவருக்கு வியப்பாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.