(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 07 - ரேவதிசிவா

knkn

போகும் பாதை தெரியாமல்

துணைக்கு யாரும் இல்லாமல்

தன்னந்தனி  பயணம்!

யாரை நம்ப

யாரிடம் கேட்க

உலகமே அந்நியமாய்

யாரும் இல்லா தீவில்

மாட்டிக் கொண்டவளாய்

மனிதர்களை தேடி போகும்

பயணியாய் அவள்!

இடம்:ஹரியானா

வளின் கைகளில் அவன்!

கள்ளமில்லா அம்முகத்தில்தான் எத்தனை நிம்மதி! அன்னையின் அரவணைப்பில் உலகையே வென்றவனாய், உறக்கத்தில் அவன்!

அம்மாவின் உடையைப் பிடித்துக்கொண்டு பயமுருத்தும் இருளைக் கண்டு அச்சமில்லாமல், அன்னை அனைத்தையையும் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் வானில் மின்னும் நட்சத்திரத்தைப் பார்த்தபடியே நடந்தாள் குட்டிப்பெண்.

அவ்விருவர்  மட்டுமே அவளின் நம்பிக்கை. அவள் வாழ்கின்ற வாழ்க்கையின் ஆதாரம்.இருவரையும் நன்மக்களாய் வளர்த்துவிட்டால் போதும்.

இதுவே அவளின் கனவு!

நடந்து வந்தவள் அவ்வூரின் எல்லையை கடக்கவும், “தனியாய் போகும் மகளே! இதோ என் பிரதி பிம்பம்! இன்னும் பன்னிரண்டு மணி நேரத்திற்கு உன்னுடன் உனக்கு துணையாய் வரும், “ என்று அவளுடனே வழியனுப்ப வந்த இருள், தன் எல்லையில் நின்று விடை கொடுத்தது!

வெளிச்சம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது...

இன்னும் சிறிது நேரத்தில் பேருந்து வந்துவிடும் ஆனால் எங்கு செல்ல?

உடலளவில் பசி கொடியது! அதைவிடவும் கொடியது மனதளவில் பாதுகாப்பின்மை!

அச்சம்!

அடுத்த நொடி என்ன நேருமோ? உயிருடன் இருப்போமோ? என்று அச்சத்திலேயே உழல்வது எத்தகையது என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே அறிவர். உலகில் பெரும்பாலோர் இந்த நிலையில்தான் உள்ளனர்.

இடம்: மகாராஷ்திராகாமத்திபுரா

நிஷிதா, சூழ்நிலையை பயன்படுத்தி எப்படி இங்கிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஹேமாவின் வாழ்க்கை அத்தியாயம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.பிள்ளைகளை தேடும் செயலில் ஒரு கும்பல் இருக்க, அவர்களைக் காக்கும் கடமையில் இருப்பவளும் அங்கிருந்து தப்பித்து செல்ல தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தாள்.

வழக்கம் போல் அவன் வர, முகத்தை சுருக்கி அவர்களுக்குள் ஊடல் போல் நடந்து கொண்டாள். அவனும் குடி போதையில் மிக கேவலமான வார்த்தைகளில் வர்ணித்துக் கொண்டே தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டான்.அவன் உறங்கிய பின்னர், அவன் கைப்பேசியை உபயோகித்து எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டாள்.

அவனிடம் உள்ள பணத்தையும், தான் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்துக் கொண்டாள். எப்படி இங்கிருந்து வெளியேருவது என்பதுதான், அவள் பிரதான பிரச்சனையாய் இருந்தது!

அதற்கான சமயம் வந்தது, பக்கத்து அறையில் உள்ளவளின் மூலம்!

இது போன்று உள்ள விடுதிகளிலிருந்து பெண்களை, சில ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுவர்.ஏதற்கு என்று சொல்லவும் வேண்டுமா?

பெரும் கரும்புள்ளிகளின் இச்சைக்காக அனுப்படும் இவர்கள் எல்லோரும்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்!

மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட பலர், தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இதுதான்! இவைகளையெல்லாம் என்னவென்று சொல்ல ?

அப்படி தெர்ந்தெடுக்கப்பட்ட ஒருத்திக்கு உடல்நிலை மிகவும் மோசமாகவே, இவளை அனுப்பும் ஏற்பாடு ஆயத்தமாகியது. அவள் சந்திக்கபோகும் நபர், பெரும் பணம் பதவி படைத்தவன் என்பதால் இவள் செல்லும் நிலை கட்டாயமாகியது. அனைவரும் வண்டியில் ஏற்றிவிட்டு தக்க இடத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

இவள்  சென்ற அறையில் வயதான ஒரு கிழம் குடித்துக் கொண்டிருந்தது, இவள் தன் முகத்தை காட்டாமல் குனிந்தப்படியே வர, பிதற்ற ஆரம்பித்தது அவ்வுருவம்! இவளிடம் ஏதோதோ உளறியப்படியே இருக்க, தன்னிடமிருந்த ஒரு காகிதத்தில் உள்ள பொடியை கோப்பையில் கலந்தாள். அதனை அறியாமல் மோகத்தில் மூழ்கியவன், வாயில் கவிழ்க மோகம் போய் போதையில் கவிழ்ந்தது அம்மாமிச மலை!

துரிதமாக சில வீடியோக்களையும், படங்களையும் எடுத்தவள்,தன்னை ஆண் போல் ஒப்பனை செய்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.

இருளைப் போன்ற உற்ற நண்பனும் இல்லை, பெரும் பகைவனும் இல்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.