(Reading time: 24 - 48 minutes)

‘இதெல்லாம் அவர் வேலை. மேலிருந்து என்னை இயக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனின் வேலை. எப்போதும் அவர் நினைத்தை என்னை செய்ய வைப்பதுதானே அவர் வழக்கம்’ தனக்குள் புலம்பிக்கொண்டே நடந்தான் விவேக்.

கண்களை தாண்டி, கன்னங்களையும் தாண்டி நீர் வழிந்துக்கொண்டிருக்க அசையக்கூட தோன்றாமல் நின்றிருந்தான் சுதர்ஷன். காலம் முழுவதும், அவன் உடல் மண்ணில் சாயும் வரையிலும் இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து அவனுக்கு விடுதலை இல்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது சுத்ர்ஷனுக்கு.

னம் அலைப்புற்று கிடக்க காற்றில் அலையும் இலை போல் மருத்துவமனைக்குள் இங்கமங்கும் நடந்துக்கொண்டிருந்தாள் ஹாசினி. கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்றது மனம். அந்த நேரத்தில் அவளை கடந்து நடந்துக்கொண்டிருந்தான் விவேக்.

‘விவேக்..’ அவசரமாய் அழைத்தாள் அவனை

‘ம்... சொல்லுங்க ஹாசினி.

‘நாளைக்கு மார்னிங் அப்பாவை, ஐ மீன் உங்க அப்பாவை நீங்க டிச்சார்ஜ் பண்ணி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. உங்க வீட்டுக்கு... உங்க வீட்டுக்கு கூட வேண்டாம் வேறே எங்கேயாவது ஒரு நிம்மதியான இடத்துக்கு அதாவது அவர் ரிலாக்ஸா இருக்கிற ஒரு இடத்துக்கு...’படபடபடவேன பரபரத்தாள் அவள்.

‘இருங்க  இருங்க டாக்டர். ஏன் ஏன் இத்தனை அவசரம்??? இங்கே இருந்தா என்ன??? நான் கூட இருந்து பார்த்துக்கறேன். லெட் ஹிம் ரிகவர்  ஃபர்ஸ்ட்’

‘இல்ல விவேக் நான் நல்லதுக்குதான் சொல்லுவேன். உங்க நல்லதுக்கு. இப்போ அவருக்கு கைலேதான் எலும்பு முறிஞ்சிருக்கு. நடக்குறது எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க வேணும்னா ஒரு நர்ஸ் வெச்சுக்கோங்க. நாளைக்கு இங்கிருந்து கிளம்பிடுங்க’ மூச்சு முட்டியது அவளுக்கு.

‘ஏன் ஹாசினி..’ இவ்ளோ டென்ஷன். நான் அவரை அட்டென்ட் பண்ற டாக்டரையும் கன்சல்ட் பண்ணிட்டு..’

அவங்க இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகட்டும்னு சொல்வாங்க. அதெல்லாம் வேண்டாம்  நீங்க கிளம்புங்க. அதுதான் நல்லது..’ அவள் திரும்ப திரும்ப அதையே சொல்லி அவனை சம்மதிக்க வைத்திருந்தாள்.

மறுநாள் மதியம்

தாமோதரனை பரிசோதிக்கும் மருத்துவரும் ஒப்புக்கொள்ள அவரை கிழக்கு கடற்கரை  சாலையில்  இருக்கும் தனது இன்னொரு வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்திருந்தான் விவேக். இரண்டு மனதாகவே இருந்தது தாமோதரனுக்கு.

‘என்னதான் இருந்தாலும் இவன் என் மகளை மறுத்தவன் ஆயிற்றே எனவும் தோன்றியது அவருக்கு.

‘ஏன்பா இவ்வளவு யோசிக்கறீங்க??? அவர் அருகில் அமர்ந்தான் விவேக். ‘நான் உங்களை ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்’

‘அதுக்கில்லேபா. நான் அப்படியே எங்க வீட்டுக்கு போயிட்டு..’

‘அங்கே உங்களுக்குன்னு யாருமே இல்லைதானே???’

‘அது.. வந்து.. எனக்கு..’ ஹரிணியை பற்றி சொல்லி விடுவோமா என அவர் யோசிக்க

‘அப்பா ப்ளீஸ்பா. வந்திடுங்க. எனக்கு உங்களை பார்த்திட்டே இருக்கணும்பா  ப்ளீஸ்பா’ அவர் கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டான். மறுபடி மறுபடி  அவன் உச்சரிக்கும் அந்த அப்பா அவரை உருக்கிப்போட்டது. வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை.

‘சரிப்பா..’ போகலாம்..’ அவர் புன்னகைக்க உற்சாகத்தின் முழு உருவமாக கிளம்பினான் விவேக். அவர்கள் கிளம்பி செல்வதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் சுஹாசினி.

அதே நேரத்தில் அங்கே

விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் ஹரிணி. அந்த விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்து இங்கிருந்து நேரே சென்னைதான். போய்விடலாம். மாலைக்குள்  போய்விடலாம். போய் விவேக்கை ஒரு கை பார்த்துவிடலாம்!!!

அவள் எண்ணம் முழுதும் விவேக்கே ஆக்கிரமித்திருந்தான். அன்று ரோஜாப்பூவை வைத்து அவனை ஆட்டம் காட்டிய நிகழ்வும் அவள் நினைவில் வந்தது.

‘அன்றே முடித்திருக்கவேண்டும் அவனை. அவன் ஏதாவது தவறாக செய்திருந்தால் அவனது விமான உரிமமே ரத்து செய்ய பட்டிருக்கும். அதோடு ஒடுங்கி இருப்பான். தப்பித்துவிட்டான் அவன் எப்படியோ தப்பித்துவிட்டான்’ கருவிக்கொண்டிருந்தது அவள் உள்ளம்.

தீதும் நன்றும் பிறர் தர வாராது. நம் செயல்களும் எண்ண ஓட்டங்களுமே நமக்கு வரும் பிரச்சனைகளுக்கு காரணம் என அறியவில்லையே அவள்.

அருகிலிருந்த துணை விமானி அவளுக்கு ஆணைகளை கொடுத்துக்கொண்டிருக்க இறக்கி கொண்டிருந்தாள் விமானத்தை. ஓடுதளம் கண்ணில் தெரிந்துக்கொண்டிருந்தது.

டென் தௌசண்ட்

எய்ட் தௌசண்ட்

சிக்ஸ் தௌசண்ட்

அவள் இறக்கிக்கொண்டிருந்த போது ஒலித்தது அந்த அபாய அலாரம். விமானம் நிலத்துக்கு மிக அருகில் இருக்கிறது என்பதை உணர்த்தும் அபாய ஒலி. உயிர் மொத்தமும் உறைந்து போனது அவளுக்கு. தலைக்குள்ளே சுனாமி தாக்கியது.

‘அய்யோ... நான் இறங்கிக்கொண்டிருப்பது  ஓடுதளம் நோக்கி இல்லையே!!!

 

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!!!!

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.