(Reading time: 22 - 43 minutes)

போனை வைத்தவளுக்கு இன்னமும் படபடப்பாய் இருந்தது..நைட் பேசுறேன்னு சொன்னாரே ஐயோ கடவுளே அவங்களே புதுசா கல்யாணம் ஆனவங்க இவரு எனடானா நினைச்ச நேரம் எதையாவது பண்ணி வைக்குறாரு..என்ன நினைப்பாங்க என்னை பத்தி..என மனதிற்குள் தவித்து கொண்டிருக்கும்போதே சஹானா வந்து அவள் தோள் தொட பதறிப்போய் திரும்பியவள் அவளை கண்டு நிம்மதியானாள்..

ம்ம் இருதாலும் ஒரு வீட்டோட பெரீய மருமகள இப்படி கொரியர் சர்வீஸ் பண்ண வைகுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல என போலியாய் வருத்தப்பட

சாரிக்கா அவரு புரியாம மன்னிச்சுடுங்க..

ஹே கௌரி இப்போ எதுக்கு சாரிலா சொல்ற ஏதோ என்னால முடிஞ்சது நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..சரி நீ போய் காலேஜ்க்கு கிளம்பு..நா மாமா எழுந்தப்பறம் சாப்டுக்குறேன்..

சிறிதுநேரம் அப்படி இப்படியாய் பொழுதை கழித்தவளுக்கு போரடித்து போக கார்த்திக்கை தேடிச் சென்றாள்.அவளுக்கு முதுகுகாட்டி படுத்திருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தவள் இரண்டு நிமித்திற்குமேல் பொறுக்கமாட்டாமல் மாமா எழுந்துரு எனக்கு செம போர் அடிக்குது..லேசாய் விழித்தவன் அவள்புறம் திரும்பி படுத்து தன்னவமேல் கை போட்டுகொள்ள,அய்யே டர்டி பாய் நா குளிச்சாச்சு  போய் குளிச்சுட்டு வா போ சீக்கிரம் நாம எங்கேயாவது போலாம் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா..

அடிப்பாவி நைட்புல்லா நல்ல தூங்கிட்டு இப்போ நா தூங்கினா உனக்கு போரடிக்குதா??.

ஹே நானும் கொஞ்சநேரம் தான் தூங்கினேன் பொய் சொல்லாத மாமா..

சரி சரி இந்த டோன்ல பேசினா அப்பறம் வெளில போற மூட் போய்டும்..எப்படி வசதி???

அடச்சே எப்போ பாத்தாலும் இப்படியே பேசிட்டு இரு கார்த்திக் நீ ரொம்ப ரொம்ப பேட் பாய் ஆய்ட சீக்கிரம்ரெடி ஆய்ட்டு வா சாப்டலாம் நா ஹால்ல இருக்கேன்.

அந்தபயம் இருக்கனும் பேபி..10 மினிட்ஸ்ல வந்துரேன்..

இருவருமாய் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பத் தயாராக மணி உள்ளே வந்தார்..கண்ணுகளா மத்தியானத்துக்கு என்ன சமைக்கட்டும்???

அண்ணா நம்ம ஊரு பேமஸ் சொதி குழம்பு பண்றீங்களா??மாமா அத சாப்ட்டுருக்க மாட்டான்..

என்ன சொதியா???

ஆமா தம்பி இந்தப்பக்கம் எல்லாம்  கல்யாணம்முடிஞ்சு மறுவீட்டுக்கு அததான் பண்ணுவாங்க..தேங்காபால் எடுத்து காய்கறிலாம் போட்டு தொடுக்க இஞ்சிபச்சடியும் உருளைகிழங்கு வறுவலும் வச்சு சாப்டா மதிய நேரத்துல ஒரு தூக்கம் வரும் பாருங்க..

ஐயோ அண்ணா நீங்க சொல்றதுலயே நாக்கு ஊறுது..நாங்க ரெண்டு பேரும் ஆத்துப்பக்கமா போய்ட்டு வரோம்..வந்து ஒரு பிடி பிடிக்குறோம்..

தம்பி ஆத்துக்கா..என பதட்டமாய் சஹானாவை பார்க்க அவள் முகம் சற்று வாடிப்போக

அண்ணா அன்னைக்கு ஏதோ தண்ணில ரொம்ப நாளுக்கப்பறம் ஆட்டம்போட்டதுல மயக்கம் வந்துருச்சு அதுக்காக சஹானா எல்லாதடவையும் விழுவாநு நினைச்சுட்டீங்களா என கார்த்திக் கிண்டலாய் கேட்க..காரமாய் அவனை பார்த்தவள்

மணி அண்ணா மானம் போகுது என்னை நீங்களே இப்படி டேமேஜ் பண்றீங்களே..

சரி சரி தெரியாம சொல்லிட்டேன் சஹானாம்மா தாராளமா போய்ட்டு வாங்க..என்றவர் கார்த்திக் சமாதானமாய் பார்த்துச் சென்றார்..

இருவருமாய் அந்த வயல்வெளிகளின் நடுவிலிருந்த பாதையில் நடக்க ஆரம்பிக்க சஹானா பெற்றோர் கைப்பற்றும் குழந்தைபோல் கார்த்திக்கின் கைப்பற்றி கதைபேசியபடி நடந்து கொண்டிருந்தாள்…

என்ன சஹி சைலண்ட்டா வர்ற??

ஒண்ணுமில்ல மாமா சும்மா அப்படியே யோசிச்சுட்டு வரேன்…

எதபத்தி டா??

இல்ல காலம் எவ்ளோ வேகமா நகருது பாரேன்..5-10 வயசுலயும் இந்த இடத்துல நடந்துருக்கேன் போன வாரமும் நடந்தேன்..இப்பவும் வரேன் இருந்தாலும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இல்ல பாத்தியா நாளைக்கே நம்ம பசங்களும் வருவாங்க இப்படியே ஜென்ரேஷன்ஸ் போய்ட்டே இருக்கும் இவ்ளோ தான் லைப் இல்ல மாமா…

ஏன் சஹி என்னென்னவோ பேசுற??

சும்மா தோணிச்சு மாமா வேற ஒண்ணுமில்ல..ஆமா நா கேக்கனும்நு நினைச்சேன் மணி அண்ணா மாதிரியே நீயும் பயந்ததான???

ஹே ச்சச்ச அப்படிலா இல்ல சஹி அன்னைக்கு ஏதோ திடீர்நு அப்படி ஆச்சு அதுக்காக ஒவ்வொரு தடவையும் ஆகுமா என்ன??

அவனைப் பார்த்து சிரித்தவள் ஒன்றும்கூறாமல் நடக்க ஆரம்பித்தாள்..குளிர்ந்த நீர் நம் காலை வருடும் சுகமே அலாதிதான்..நீரின் சலசலப்பும் காற்றின் பபரப்பும் மனதை ஏதோ செய்ய கார்த்திக்கை நெருங்கி அமர்ந்து கொண்டாள்..அந்த மௌனம் இருவருக்குமே ஒருவித ரம்யத்தை கொடுக்க இருவரின் கைகளும் கதைப்பேசியபடி இருக்க பாலத்தின் மேல் சென்ற ரயிலின் சத்தத்தில் இருவருமே நடப்புலகிற்கு வந்தனர்..கார்த்திக் பதட்டமாய் சஹானாவை தோளோடு அணைத்துக் கொள்ள..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.