(Reading time: 22 - 43 minutes)

மாமா பயப்படலநு சொன்ன??என்றவளின் கண்கள் தந்த பார்வை உணர்த்தியது தேவிகாவென..

கார்த்திக்கின்பிடி அவனறியாமல் இறுக,

கவைலைபடாத மாமா..இனி எதைப்பாத்தும் உன் சஹானாவோ தேவிகாவோ பயப்பட தேவையில்ல..சஹானாவா நீ கட்டின தாலிய கழுத்துல வாங்கின நொடியே எனக்கு ஆயிரம் யானை பலம் வந்துருச்சு..இன்னும் அந்த அருணாச்சலத்தோட முடிவு மட்டும்தான் மிச்சம்..அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கதான் போகுது தைரியமாயிரு மாமா..

ஒன்றும் கூறாமல் அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்..வெயில் சற்று அதிகமாக தொடங்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர்…மதியம் மணி கூறியபடியே உணவு வகைகள் மேஜையை அலங்கரித்திருக்க இருவரும் அனைத்தையும் ஒருபிடி பிடித்தனர்..

வாவ் அண்ணா ரொம்ப நல்லாயிருக்கு ஆனா இப்படியே பத்து நாள்ளசாப்டோம் சென்னைக்கு போறப்போ நாங்க ரெண்டுபேரும் கொலுல வைக்குற செட்டியார் பொம்மை மாறிதான் போவோம்..-கார்த்திக்..

உணவு பரிமாறி முடித்து மணி வெளியேற சஹிம்மா நீ கொஞ்சம் தூங்கி எழுந்துரு..நா அதுகுள்ள ஆபீஸ்கால் முடிச்சுட்டு ஓடி வந்துருவேன் ஓ.கே யா?

மாமா வந்தன்னைகே ஆரம்பிச்சுட்டியா???

இல்லடா டெய்லி ஒரு ஹாவ் அன் அவர்தான் அதுகூட நீ தூங்குற நேரத்துல தான்..லேப்டாப் ஜார்ஜ் இருக்குல???

உன்னையெல்லாம் மாத்தவே முடியாது..ம்ம் புல் ஜார்ஜ்ல தான் இருக்கு..

தட்ஸ் மை கேள்..தேங்க் யூ பேபி..என நெற்றியில் இதழ்பதித்து லேப்டாப்போடு மாடிக்குச் சென்றான்..லேப்டாப்பை உயிர்பித்தவாறு சிவாவை போனில் அழைக்க இருவைரும் தங்களின் வேலையை தொடங்கினர்..

கார்த்திக் ட்ரவல்லா எப்படியிருந்தது ஒண்ணும் பிரச்சனை இல்லையே??

இல்ல சிவா அதெல்லாம் ஒண்ணுமில இப்போதான் தூங்கப் போனா அதான் கால் பண்ண லேட் ஆய்டுச்சு..

பரவால்ல கார்த்திக் அப்பறம் நீங்க கேட்ட ஆடிட்டர் டீடெய்ல் கிடைச்சது அவரு பேரு கருணாகரன்..ரொம்ப வருஷமா அருணோட ப்ராப்பெர்டீஸ் வரவு செலவு எல்லாமே அவருதான் பாத்துகிறாரு..ஆள் கைசுத்தம் ஆனா அருண்க்கு ரொம்ப விசுவாசமா இருக்காரு..சோ அவர்கிட்டயிருந்து நமக்கு எந்த ஹெல்ப்பும் கிடைக்கும்நு தோணல..

கருணாகரன்..ம்ம்ம் ஆங் அவரு சைதாப்பேட்டை ஏரியாவா??

ஆமா கார்த்திக் அவர உங்களுக்கு தெரியுமா??

தெரியும் சிவா என் ப்ரெண்ட்டோட அப்பாதான்..நீங்க சொன்னது 100% கரெக்ட் ரொம்ப நேர்மையான ஆளு அதே நேரம் அவரோட தொழில்கான எத்திக்ஸ மதிக்குறவரு சோ அவர்கிட்டகேட்டாலும் எதுவும் சொல்லமாட்டாரு..சோ ப்ஸினஸ் வைஸ்அவன கார்னர் பண்றது இப்போதைக்கு முடியாது வேற எதாவது வழில தான் அவன டார்கெட் பண்ணணும்..அவனோட வக்கீல்ட பேச சொன்னேனே கேட்டீங்களா??

ம்ம் பேசிருக்கேன் கார்த்திக் கொஞ்சம் பயப்படுறாரு..இருந்தாலும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்காரு.,

குட் அவரு மூலமா அவன்மேல இருக்குற கேஸ்ல முக்கியமானதா சில டீடெய்ல்ஸ் வாங்கிகோங்க..லைக் நீங்க ஏற்கனவே சொன்னீங்களே லேண்ட் ராபரிஇல்ல ப்ளாக் மணி அப்படி எதாவது..இப்போதைக்கு என் ஐடியா என்னன்னா ஸ்ட்ராங் எவிடென்ஸோட ஒரு கேஸை அவன்மேல போட்டு பப்ளிக் ப்ராசிக்யூட்டரா நீங்க ஆஜராகி அவனை உள்ளேதள்ளனும்..சோ நமக்கு ஹெல்ப் பண்ற யாரைப்பத்தியும் அவனுக்குத் தெரியகூடாது அண்ட் இது எதார்த்தமா நடந்தமாதிரி இருக்கனும்..என்ன சொல்றீங்க சிவா???

நல்லாதான் இருக்கு கார்த்திக் பட் அவனுக்கு இருக்குற பலத்துக்கு எவ்ளோ பெரிய கேஸா இருந்தாலும் ஈஸியா ஒண்ணுமில்லாம ஆக்கிடுவான்..இதுக்கு நமக்கு இவ்ளோ கஷ்டம் நைட்டோட நைட்டா போய் அவன் கழுத்தறுத்து போட்டு வந்துருவோம்..அதுதான் சரி நீங்க யோசிக்குற அளவுலா அவன் வொர்த்யில்ல..

என்ன சிவா கிரிமினல் லாயர்நு நினைச்சா கிரிமினலாவே மாறிடுவீங்க போல என லேசாய் சிரிக்க.

ஆனா உங்களமாதிரி ஒரு மிஸ்டர் கூல் பார்ட்டியை நா பாத்ததேயில்ல கார்த்திக்..என்னவோ போங்க..இவனையெல்லாம் பூமிக்கு பாரமா இன்னும் ஏன் விட்டுவச்சுருக்கோம்நு நினைச்சாதான் கடுப்பாயிருக்கு..சரி நா என் ப்ரெண்ட்கிட்ட பேசிட்டு நாளைக்கு கூப்பிடுறேன் கார்த்திக் பை டேக் கேர்..

போனை வைத்துவிட்டு லேப்டாப்பில் சில அப்டேட்ஸை முடித்துவைத்துவிட்டு சஹானாவை தேடிச் சென்றான்..மாடியின் கீழிருந்த மூன்றாவது படியில் அமர்ந்து குனிந்து ஏதோ செய்துகொண்டிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.