(Reading time: 11 - 21 minutes)

“ஓய் செல்லம்.. அந்த வெட்கம் எல்லாம் நான் ரசிக்கத்தான்..சீக்கிரம் கதவை திற..நான் பார்க்கனும்..”என்றான் ராகவேந்திரன். என்ன சொல்கிறான் இவன்? என்ற திடுக்கிடலுடன் அவள் எட்டிப் பார்க்க,  வாசலில் அவன் நிற்பது தெரிந்தது. “ஐயோ நான் இன்னும் குளிக்கவே இல்லயே”என்று அரண்டவள் கெத்தான குரலில் அவனிடம்,

“அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடுவேனா? வெயிட் பண்ணுங்க ஏசீபி சார்”என்று ஃபோனை வைத்தாள்.

“ஆஹா..அமைதியான பொண்ணுனு நினைச்சேன்,..இவளும் கொஞ்சம் வாலுதான் போல”என்று சொல்லிக் கொண்டவன், அவளது வீட்டுத் தோட்டத்தை ரசிக்க ஆரம்பித்தான்.

ண்ணு.. குட் மார்னிங்” உற்சாகமாய் சமையலறைக்குள் வந்த வெற்றி வழக்கம் போல கண்மணியை சீண்டும் ஆசையில் அங்கிருந்த கொத்தமல்லியை பிய்த்து அவள் தலையில் கொட்டினான்.

“எரும மாடு,,ஆரம்பிச்சுட்டியா? குட் மார்னிங்..காஃபி வேணுமா? டீ வேணுமா?”

“ம்ம்..வோட்கா கிடைக்குமா?”

“ஹை ஹீல்ஸ் செருப்பு இருக்கு.. வேணுமா?”

“ஹீ ஹீ..”

“என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்க? ஸ்க்ரிப்ட்டு எழுதிட்டியா?”

“அடிப்பாவீ..நான் என்ன சிறுகதையா எழுதுறேன்..ஒரே நாளில் முடிக்க?எப்படியும் குறைந்தபட்சம் ஆறுமாசம் ஆகும் கண்ணு..”

“ஆறு மாசமா?” வியப்பாய் கேட்டாள்கண்மணி.

“ஆமா கண்ணு..இப்போல்லாம் படத்தில் கொஞ்சம் எதிர்மறையான சீன் வந்தாலே பேன் பண்ணுறாங்க..படம் வெளில வரக்கூடாதுனு தடை பண்ணுறாங்க..பார்க்குறவங்க இது இந்த நடிகரின் படம்னு ஈசியா விட்டுடுறாங்க.. ஆனா படத்தில் உழைப்பை போட்டு வேலை செஞ்ச எல்லாரையும் தானே அது பாதிக்கிது? அதை யோசிக்கிறாங்களா? இது என் முதல் படம் அதையும் தாண்டி, என்னால எந்த டெக்னிஷனும் கஷ்டபட கூடாது.. என்னால அதை தாங்கிக்க முடியாது..”

“ஏய்.. ஃபீல் பண்ணாதடா”

“இல்லடா..எனக்காச்சும் தோழின்னு நீ இருந்த.. என்னை கவனிச்சுக்கிட்ட.. ஆனா எத்தனை பேரு நம்பிக்கையான் வார்த்தை கூட இல்லாமல் நிதர்சனத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும்  அவங்களுடைய கனவுகளை விட்டு கொடுக்குறாங்க தெரியுமா?”

“ரொம்ப கஷ்டப்பட்டதுனால அவங்க கஷ்டம் எனக்கு புரியும்..சோ என்னோடு வேலை பார்க்குற ஒருத்தருக்கு கூட மனக்கஷ்டம் பணக்கஷ்டம் இல்லாம நான் பாத்துக்கனும்.. அதனாலத்தான் அரசாங்கத்தை நேரடியாக குறை சொல்லாம, அதே நேரம் சொல்ல வந்ததைசரியா சொல்லுற மாதிரியும் கதையை ரெடி பண்ணுறேன்..”

“வெரி குட்.. அண்ட் இன்னொரு விஷயம்..உன் படத்துக்கு நான்தான் அசிஸ்டண்ட்”

“ஹ்ம்ம்…அது நம்ம படம் கண்ணு..நான்தான் அன்னைக்கே சொன்னேனே.,.நீயும் டைரக்டர்தான்!”என்றான் வெற்றி உறுதியான குரலில்.

“சரி சொல்லு வேறென்ன சந்தோஷம்? உன் குரல்ல எனர்ஜி லெவல் ஜாஸ்தியா இருக்கு! விஷூ கிட்ட பேசுனியா?”

“நான் பேசலன்னாலும் அவ விட்டுருவாளா கண்ணு?”

“ நீ கடமை,கண்ணியம்னு திரிஞ்சா எப்படிடா குடும்பஸ்தனா ஆகுவ? உனக்கு அப்பப்போ மணிக்கட்ட விஹாஷினிதான் கரெக்ட்டு..”

“விட்டா நீ அவ கையில தாலிய தந்து எனக்கு கட்டிவிட சொல்லுவ போல”என்று வெற்றி சலித்துக் கொள்ள அதை கற்பனை செய்த்துவிட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள் கண்மணி..

“ஹெய் செம்மடா..அவகிட்ட சொல்லிடுறேன்.. நீயும் கொஞ்சம் கற்பனை பண்ணி பாரேன்.. “என்றாள்.

“அம்மாதாயே.. நான் சொல்ல வந்ததே மறந்துடுவேன் போல.. சீக்கிரம் ப்ரெஷ் ஆகு.. நாம ஷாப்பிங் போறோம்..”

“என்ன திடீர்னு?”

“சொல்லுறேன்.. நீ முதல்ல கெளம்பு”என்றான் வெற்றி. அவளின் கேள்விகளை எல்லாம் சமாளித்துவிட்டு வந்தவன், சத்யேந்திரனை ஃபோனில் அழைக்க, அது அணைக்கப்பட்டு இருந்தது.

ந்த படப்பிடிப்பு காட்சியில் இருந்த அனைவருமே படபடப்புடன் விறுவிறுப்பாகவும் விரைந்து கொண்டிருந்தார்கள். சத்யனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகளை சரி பார்த்து கொண்டிருந்தார் ஒருவர். அந்த படத்தில் முக்கியமான காட்சியது. ஒரு உயரமான பாளத்திலிருந்து கீழே குதிக்க வேண்டும் அவன். இது போன்ற ஆபத்தான காட்சிகளின் போது சத்யேந்திரன் அதிகமாக யாரிடமும் உரையாடிட மாட்டான்.. ஃபோனையும் அணைத்துவிடுவான். எந்த வகையிலும் தனக்கு தடுமாற்றம் வந்துவிடக்கூடாது என்று நினைப்பான்.

“டூப் போட்டு கொள்ளலாம் சத்யன்..கொஞ்சம் ரிஸ்க்காக இருக்கு” மீண்டும் ஒருமுறை அவனைப் பார்த்து சொன்னார் இயக்குனர். அவர் பலமுறை கேட்டும் அவன் மறுத்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.