(Reading time: 11 - 21 minutes)

மேலும், இதுவரை அவன் நடித்த படங்களில் ஒன்றில் கூட அவன் டூப் போட அனுமதித்ததில்லை.

“டூப் பண்ணுறவங்களும் மனுஷங்கத்தானே? அவங்களுக்கு போனா அது உயிரில்லையா?எனக்கு ஹீரோயிசம் மெருகூட்டி பார்க்கனும்னு தானே இந்த சீன்? அப்போ இதை நாந்தான் பண்ணுவேன்..” இதுதான் அவன் எப்போதுமே உரைக்கும் பதில்.

அன்றும் அதையே சொன்னான். அவன் பேச்சுக்கு மறுப்பேச்சு சொல்லவில்லை இயக்குனர். கண்களை மூடி தன் தந்தையை எண்ணிகொண்டான் சத்யன். பொதுவாக இந்த மாதிரி நேரங்களில் அவன் மனதில் நினைப்பது அவரை மட்டும்தான்!

“அப்பா.. இது உங்களுக்காகப்பா” என்று சொல்லிக் கொள்வான்.

“ரெடி.. ஸ்டார்ட்..கேமரா..ஆக்க்ஷன்..”

இமைக்கும் நொடியில் கடலில் குதித்திருந்தான்  சத்யேந்திரன்.

“கட்.. ஷாட் ஓகே”

“சத்யன் ஆல்ரைட்?” என்று அனைவரும் விரைய, அவனோ மயங்கி இருந்தான்.

“ஹேய் சீக்கிரம் தூங்குங்கப்பா..” பதறிப்போனார் இயக்குனர்.

த்யேந்திரனின் நிலை அறியாத கண்மணி வெற்றியுடன் புடவை கடைக்கு வந்திருந்தாள்.

“ எதுக்கு இப்போ புடவை வாங்குற?”

“சொல்லுறேன் கண்ணு வா” என்றவன், அவளுக்கு மிக அழகான புடவை ஒன்றை வாங்கி தந்தான்.

“புடிச்சிருக்கா கண்ணு?”

“ புடிச்சிருக்காவா? பிரகாசமா, பிரம்மாண்டமா இருக்கு..”

“இதே பிரகாசம் உன் வாழ்க்கையிலும் இருக்கனும்.. இருக்கும்” .

“என்னடா பண்ணுற?”

“ஒன்னுமில்ல..வா வீட்டுக்கு போலாம்”.

“என்னவோ போ” என்று தோளை உலுக்கி கொண்டாள்கண்மணி.

கண்மணியை வீட்டில் இறக்கிவிட்டவன், சத்யனின் வீட்டிற்கு செல்ல, அங்கு  வீட்டை பூட்டிக் கொண்டிருந்தார் சுலோட்சனா.

“ஆண்ட்டி..”

“தம்பி நீங்க..வெற்றியா?”

“ஆமா .. வெளில கிளம்புறேன்..”

“ச..சரிங்க ஆண்ட்டி..”

“ஹாஸ்பிட்டலுக்கு போறேன் வெற்றி.. நீங்களும் வரிங்களா?”

“என்னாச்சு ஆண்ட்டி..”

“ஷூட்டிங்ல தண்ணியில் குதிக்கும்போது சத்யன் தலையில அடி பட்டுருச்சாம்..”

“ஐயோ”என்று வெற்றி அலற, சுலோட்சனாவோ நிதானமாய் புன்னகைத்தார்..

“டென்ஷன் வேணாம் வெற்றி அவனுக்கு ஒன்னும் ஆகாது..”

“எப்படி ஆண்ட்டி இலகுவா சொல்லுறீங்க?”

“பழகிடுச்சு.. சரி கண்மணி வீட்டில் இருக்காளா?கூட்டிட்டு போலாமா அவளையும்..”

“அது… நானே சொல்லி அவளை கூட்டிட்டு வரேன் ஆண்ட்டி.. பயந்துருவா” என்றான் வெற்றி..

“அப்படியா? இருங்க நானே என் மருமகளை டெஸ்ட் பண்ணுறேன்”என்றவர், கண்மணியை ஃபோனில் அழைத்து தகவலை சொன்னார். சுலோட்சனாவின் கணிப்பு பொய்க்கவில்லை.

“அவருக்கு ஏதும் ஆகாது அத்தை..என் தொல்லையையே தாங்குவாரு..இந்த சின்ன அடியை தாங்க மாட்டாரா? நீங்க வாங்க.. நாம சேர்ந்து ஹாஸ்ப்பிட்டல் போகலாம்”என்று சொல்ல தோழியின் நம்பிக்கை நிறைந்த குரல் வெற்றிக்கு மலர்ச்சியைத் தந்தது. கண்மணியின் வீட்டிற்கு செல்லும் வழியில் தான் வந்த காரணத்தையும் சொல்லியிருந்தான் வெற்றி.. எண்ணியதெல்லாம் எண்ணியபடி நிறைவேறுமா?

இன்னொரு பக்கம், ராகவேந்திரனிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் அர்ப்பணா. “ இதுவரைக்கும் மத்தவங்க எடூக்கும் முடிவுக்கு தலையாட்டியே வாழ்க்கைய வாழ்ந்துட்டேன் ராகவ்.. நம்ம விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுக்கனும்னு ஆசைப்படுறேன்… நீங்க ஒத்துக்குவிங்களா?” ஆவலும் ஏக்கமுமாக அவள் கேட்க, என்னவென்று கேட்காமலே சரியென்றான் ராகவேந்திரன்.. அது என்னனு  அடுத்த வாரம் பார்ப்போம்..

ஹாய் ப்ரண்ட்ஸ்..எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த அத்தியாயத்திற்கான கருத்தையும் சேர்த்து என்னுடைய இன்னொரு கேள்விக்கும் பதில் தர முடியுமா? “யார் மீட்டிடும் வீணையிதுசினிமா கலைஞர்களுக்கும் நம்மை போல சராசரி வாழ்க்கை இருக்கு என்பதை மையமாக காட்டத்தான். அந்த நோக்கம் நிறைவேறி கொண்டிருக்கிறதான்னு உங்க கருத்தை கேட்க விரும்புறேன். நான் சொல்ல வந்ததைகரெக்டா சொல்லுறேன்னு உங்களுக்குன் தோணுதா? எதிர்மறை கருத்துகளையும் வரவேற்கிறேன்..சோ மனம் திறந்து சொல்லுங்கள்.. உங்கள் கருத்து நிச்சயம் எனக்கு தோள் கொடுக்கும். நன்றி :)

-வீணை இசைந்திடும்-

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.