(Reading time: 2 - 3 minutes)

Chillzee KiMo-விற்கு இன்று பிறந்தநாள்!

ணக்கம் பிரென்ட்ஸ்.

 

இன்று சில்சீ கீமொ-வின் பிறந்தநாள். KiMo சேவை தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் இன்று தொடங்குகிறது.

   

சில்சீ கீமொ சேவையை நாங்கள் பெரிய பிஸ்னஸ் ப்ளான் தயார் செய்தோ, பெரிய எதிர்பார்ப்புகளுடனோ தொடங்கவில்லை.

   

ஒரு ஆர்வத்தில், ஒரு இம்பல்சில் ஸ்டார்ட் செய்தோம்.

   

ஐம்பது ரூபாயில் எத்தனை புக்ஸ் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்பது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் இருந்தது.

    

சிறிய அளவு சேவை என்றாலும், இரண்டு வருடங்களில் கிமோவில் மட்டும் மில்லியன் கணக்கில் பக்கங்கள் வாசிக்கப் பட்டு இருக்கிறது.

   

KiMo எழுத்தாளர்களுக்கு கீமொ சேவை வழியாக மட்டும் தோராயமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக வழங்கி இருக்கிறோம்.

 

இது மிக மிக சிறிய செய்தி தான். ஆனால் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கும் செய்தி!

 

சில்சீ கீமொ-விற்கு ஆதரவு அளித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் Chillzee KiMo சார்பாக என் நன்றியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

 

நன்றி! 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.