(Reading time: 3 - 5 minutes)

அறிவிப்பு - 5 டிசம்பர் தொடங்கும் ஸ்ரீயின் புத்தம் புதிய தொடர்!

inbame vazhvagida vanthavane

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

Chillzeeயில் "என்னுள் நிறைந்தவனே" மற்றும் "நின்னை சரணடைந்தேன்" கதைகள் புகழ் ஸ்ரீயின் புதிய தொடர் "இன்பமே வாழ்வாகிட வந்தவனே" 5 டிசம்பர் முதல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்கிழமை காலைகளில் வெளி வர இருக்கிறது.

 

chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:

வணக்கம் மக்களே,

வெற்றிகரமா என்னுடைய மூன்றாவது கதையை ஆரம்பிச்சாச்சு..முதல் இரண்டு கதை மாதிரி இதுல வில்லன் பைட் ரிவெண்ஞ்ச்லா கிடையாது..கதை முழுசும் உங்களோட வர போறவங்க தமிழ்ச்செல்வன் நிர்பயா ஜோடி தான்..

இப்போ இருக்குற நிலைமைல பெண்களுக்கு எதிரான வன்முறைங்கிறது சார்வசாதாரணமா போய்ட்டு இருக்கு..அது ஏழுமாத குழந்தையா இருந்தாலும் சரி எழுவது வயது பாட்டியா இருந்தாலும் சரி..பெண் என்கிற ஒரு அடையாளம் போதுமானதா இருக்கு..ஒவ்வொரு நாளும் பேப்பரோ டீவியோ பாக்கவே பயமாயிருக்கு..அப்படிபட்ட கொடுமைல சிக்குற பல பெண்கள்ல நமக்கு தெரிய வர்றது ஒரு 50% கூட இருக்காது..

சமீபத்துலகூட முகப்புத்தகத்தில் மீ டூ என்ற ஒரு ஹேஷ்டேக் ரொம்ப வைரல் ஆச்சு..என் நட்பு வட்டாரத்திலேயே அத்தனை பேர் அதை ஃபார்வேர்ட் பண்ணிணாங்கனா இந்தியா முழுக்க உலகம் முழுக்க பாக்கும்போது ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு தான் இருக்காங்க..இப்படி அந்த கொடுமைய அனுபவிச்சவங்களுக்கு அதன் பிறகான வாழ்க்கைங்கிறது எப்படியிருக்கும்னு தோணிட்டேயிருக்கும்..அப்படி சிந்தனையிலிருந்த ஒரு நாள் தற்செயலா ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது..நிஜத்தில் இது கண்டிப்பாக ஏதோ ஓர் மூலையில் சாத்தியமாயிருக்கலாம்..அதை வைத்து ஆரம்பிக்குறதுதான் இந்த கதைக்களம்..முழுக்க முழுக்க என் கற்பனையும் எனக்கு தோன்றியவற்றை மட்டுமே பதிவிட போகிறேன்..அது சாத்தியமா இதெல்லாம் நடக்குமானு எல்லாம் ஆராய்ச்சி பண்ணாம சமத்தா எபியை படித்து கமெண்ட் பண்ணுங்க..

உங்கள் ஆதரவு மட்டுமே இது போன்று வேறு வேறு கதைகளத்தை உருவாக்க எனக்கு வழிவகுக்கும்..ஒரு 10-12 எபியில் முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன்..குட்டி குட்டி எபி'ஸ் தான் இருக்கும் அதையும் கண்டுக்காம சின்ன பிள்ளையை மன்னித்தருளவும்..:) smile

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.