(Reading time: 3 - 6 minutes)

அறிவிப்பு - 6 ஜனவரி தொடங்கும் புவனேஸ்வரியின் புத்தம் புதிய தொடர்!

vellai pookkal ithayam engum malaruthe

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

புவனேஸ்வரி யார் என்பதை chillzee வாசகர்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை smile வேறென்ன வேண்டும் நீ  போதுமே முதல் சமீபத்திய தமிழுக்கு புகழ் என்று பேர் வரை புவனேஸ்வரியின் கதைகள் அனைத்துமே வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவையே!

புவனேஸ்வரி புத்தாண்டு பரிசாக 'வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே' எனும் புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் வரும் சனிக்கிழமை முதல் சந்திக்க வருகிறார்.

Chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:

B-R-S  B-R-K  B-P-G  B-P-J   B-M-S  B-J-R   B-K-G  B-V-S

B-S-S   B-S-V   B-Y-S   B-V-K   B-M-N  B-V-M  B-S-J   B-A-G

வணக்கம் ப்ரண்ட்ஸ்  _/\_

மேல இருக்குற ஆங்கில எழுத்துகளை பார்த்துட்டு, “அடடா, புவி நமக்கு மேத்ஸ், கெமிஸ்டிரி அல்லது வேற பாடம் ஏதாவது எடுக்க போறாங்களா?”னு யோசிச்சீங்களா?

ஹீ ஹீ.. அது எல்லாமே பெயர்களின் சுருக்கம். “B”  என்பது என் பெயரின் சுருக்கமாக பயன்படுத்தினேன். மத்த இரு எழுத்துக்கள் என்னுடைய நண்பர்களின் பெயரில் முதல் எழுத்து.

என்னத்தான் கணக்கெடுக்க முடியாத நண்பர்கள் இருந்தாலும் சரி,அல்லது விரல்விட்டு எண்ண முடிஞ்ச நண்பர்கள் இருந்தாலும் சரி. மூணு பேரு சேர்ந்து இருக்குற கூட்டணி எப்பவுமே தனி. இல்லையா? எல்லாரும் அப்படியே மேல பார்த்துகிட்டே உங்க வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணி பாருங்க. ஏதோ ஒரு இடத்துல, “நாம் ஒருவர் நமக்கிருவர்” னு ஒரு க்ரூப் இருந்திருக்கும். அங்க சிரிக்கிற சிரிப்புக்கும், பேச்சுக்கும், லூட்டிக்கும், நினைவுகளுக்கும், பிணைப்புக்கும் பஞ்சமே இருக்காது.

ஆக, நான் இவ்வளவு பில்ட் அப் கொடுக்குறதுக்கு காரணமே, “வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே” நாவல் மூன்று நண்பர்களின் கதை. என்னுடைய முதல் நாவலை தவிர, நான் எழுதிய மற்ற எல்லா கதைகளுமே ஓரளவுக்கு ப்ளான் பண்ணித்தான் ஆரம்பிச்சேன்.. எனக்கு மறுபடியும் எதையுமே ப்ளான் பண்ணாமல் அதன்போக்கில் மீண்டும் ஒரு கதையை தொடங்கி பார்ப்பும்னு தோணிச்சு..

எப்படி முதல் நாவலில், முதல் அத்தியாயம் எழுதும்போது “அர்ஜூன் சுபத்ரா’ மட்டும் அகக்கண்ணில் நின்னாங்களோ, அதே மாதிரி இப்போ “பிரபஞ்சன், கார்முகிலன், கதிரவன் மூணு பேரும், “எப்போ புவி எங்களை சில்சீகு கூட்டிட்டு போக போற”னு கேட்டுக்கேட்டு வம்பு பண்ணுறாங்க.. சோ என் கண்ணின் மணிகளுடன் (டேய் கேட்டுக்கோங்கடா) விரைவில் வரேன். நன்றி.

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனேஸ்வரி smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.