(Reading time: 4 - 8 minutes)

அறிவிப்பு - புவனேஸ்வரி கலைசெல்வியின் புத்தம் புதிய கவிதைத் தொடர் விரைவில் ஆரம்பம் !

distantRelation

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

"இது பேய் காதல்" கவிதைத் தொடரைத் தொடர்ந்து புவனேஸ்வரி எழுதும் புதிய கவிதைத் தொடர், தொலைதூர தொடுவானமானவன் விரைவில் ஆரம்பம் ஆக உள்ளது. 

Chillzee வாசகர்களுக்கு இந்த புதிய தொடர் பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:

ஹாய் ப்ரண்ட்ஸ் ! “இது பேய் காதலு”க்கு அப்பறம் ஒரு கதையோடு கவிதை தொடர் ஆரம்பிக்கிறதுல ரொம்பவே சந்தோஷம் எனக்கு. தலைப்பை வெச்சே எதைப்பத்தி பேச போறேன்னு கெஸ் பண்ணி இருப்பீங்க.. இருந்தாலும் சொல்லுறது புவியின் கடமை அல்லவா? ஹீ ஹீ வாங்க சொல்லுறேன்.

அருகில் இருந்து, கரம் கோர்த்து, கார்குழலில் வாசம் பிடித்து, சின்ன சின்ன சண்டைகள் போட்டு அதை இறுகிய அணைப்பில் தீர்த்துவைக்கிற காதல் தான் அனேகர்களின் கதை. பொதுவாகவே பிரிவை தாங்குற சக்தி யாருக்கு இருக்கு? அப்படியே இருந்தாலுமே பிரிவை யாரும் விரும்புறதே இல்லை. அதுவும் நமக்கு ரொம்ப பிடிச்சவங்களை இரண்டடி  தள்ளி நிறுத்திவைச்சு பார்க்க கூட மனசு கேட்காது.

ஆனா இதையே வாழ்க்கையாக சிலர் வாழுறாங்க.. கடமைக்காக குடும்பத்தை பிரிந்துள்ள இராணுவ வீரர்கள், திரைக்கடல் ஓடி திரவியம் தேடும் நாயகர்கள், வெவ்வேறு தேசத்தில் நேசிக்கும் நெஞ்சங்கள் இப்படி பல ரகம் உண்டு. ரொம்ப சீரியசான கதைக்களத்தை எடுக்காமல் நான் ரொம்ப ரசித்த  ஊடகம் தொடக்கி வைத்த தொலைதூர காதலைப் பற்றித்தான் பேச போறேன்.

இந்த உறவு எனக்கே ஒரு ஆச்சர்யம் தான். ஏன்னா எனக்கு வயசு ஏற ஏற என் பார்வையும் மாறியுள்ளது.

20-21 வயதில்,

“கண்டிப்பா இது சாத்தியம் காதல் தான்.. மனசுக்கு புடிச்சிருந்தா மேஜிக் எங்க வேணும்னாலும் நடக்கும்.

22 வயதில்,

“பல்லு இருக்குறவன் மட்டும்தான் பக்கோடா சாப்பிட முடியும்.. அதனால சிலபேருக்கு அமையும்..”

23 வயதில்,

“காதல் கண்ணை பார்த்து வரனும்.. நேருக்கு நேர் பழகினால்தான் உறவுகள் மலரும்”

24இல் தொடங்கி இப்போ வரை,

நான் நிறைய புது மனுஷங்களை சந்திச்சேன். என் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் அவங்க நிரந்தர பதில். சும்மா காதலிக்கிற வாய்ப்பு இருந்தவரை காதலிச்சு பிரிஞ்சவங்க இல்லை. காதலிச்சு, அவர்களின் ஒற்றுமையை பொக்கிஷமாக்கி, வேற்றுமைகளை சமநிலைபடுத்திக்க முயற்சித்து, அயல்நாட்டில் வாழ்க்கையை தொடரவும் தயாராகி, இருவேறு பழக்கவழக்கங்கள், சமூக மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப மாறி கணவன்-மனைவி என்ற ஸ்தானமும் தாண்டி பெற்றோராக அடுத்த நிலைக்கு சென்றவர்கள் அவர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம்,அவங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு? பெரியவங்க என்ன சொன்னாங்க? என்ன என்ன சவால்களை சந்திச்சாங்க..? இப்படி பல கேள்விகளை கேட்டு வைப்பேன்.

அப்போ நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னனா? ஆங்கிலத்துல, “The person is a lover but not a fighter”  என்ற வாசகம் இருக்கு. யாருக்கு காதலிக்க வராது? யாரு காதலிச்சதே இல்லை? இருக்காங்கனு சொன்னா பொய் தான்.. எல்லாருக்கும் காதலிக்க தெரியும். பெரும்பான்மையினருக்கு காதலிக்க பிடிக்கும். ஆனா அந்த காதலோடு சேர்ந்து கடமையும் சிக்கலும் வரும்போது, பயந்து ஓடுறவங்க உண்டு, தன்னை சுற்றி உள்ளவங்களுக்காகனு சொல்லி பின் வாங்கும் சூழ்நிலை கைதிகளும் உண்டு! முக்கியமா குடும்ப கௌரவம், குடும்ப சூழலுக்காக அந்த காதலை தியாகம் செய்ததா சொல்லுவாங்க. சிலர் காதலிக்கிற மாதிரியே எல்லா நம்பிக்கையும் தந்துட்டு, “ச்ச ச்ச உன்னை என் ப்ரண்டா தான் பார்த்தேனு” மறைச்சிடுவாங்க.. இதுல சரி எது தப்பு எதுனு இங்க பேசல. என்னுடைய பார்வையே அவர்களில் சேராத சில பிடிவாத போராளிகள் தான்.

யெஸ் எனக்கு குடும்பம் வேணும், நல்ல பேரு கண்டிப்பா வேணும் ஆனா அதே நேரம் என் காதலை நான் விடமாட்டேன்.. எவ்வளவு பிரச்சனையை வேணும்னாலும் கொடுங்க.. ஆயிரம் தடவை உடைஞ்சு ஆயிரத்து ஓராவது தடவை அவளைத்தான்/அவனைத்தான் கைப்பிடிப்பேன்நு இருப்பாங்க.. இவங்களுக்காக மட்டுமே இந்த தொடர். ஏன்னா காதலிக்கிறது ஈசி , ஆனா அதை எல்லாரும் அங்கீகரிக்கிற மாதிரி வாழ எந்த சவாலையும் சந்திக்க காத்திருப்பவர்கள் கம்மி. 

இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாக பேசியதை ஆங்கிலத்தில் இலகுவா சொல்லனும்னா, “LONG DISTANCE RELATIONSHIP” !

இந்த தொடரில், அறிமுகம், சலனம், படபடப்பு, மௌனம்,காதல், பிரிவு, இணைதல்னு எல்லா உணர்வுகளும் இருக்கும்.

அவர்கள் வந்தார்கள், வாழ்ந்து விட்டு போனார்கள் என்ற பாணியில் இல்லாமல், “அவனோடு நான் வாழ்கிறேன்” என்ற பாணியின் நகரும் இத்தொடர் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் நன்றி சொல்லிக்கிறேன். நன்றி.. பாய்..

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனேஸ்வரி smile

நன்றி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.