(Reading time: 3 - 5 minutes)

அறிவிப்பு - எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்!

encourage

பிரென்ட்ஸ்,

சமீபத்தில் ஒரு தோழி பகிர்ந்த விஷயம்!

என் குடும்பத்தில் இருக்கும் எட்டாவது படிக்கும் ஒரு சிறுமியிடம் லைப்ரரி போய் புத்தகங்கள் எடுத்து படிக்க சொன்னேன். அவள் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஸ்கூல்ல எப்போவும் அப்படி புக்ஸ் மட்டும் தான படிக்குறோம். லீவ் நாளிலேயாவது ப்ரீயா இருக்கேனே”

அடுத்துவரும் தலைமுறையினரிடம் வாசிக்கும் விஷயத்தில் இது போன்ற மனநிலை இருப்பது நம்மை நோக்கி எதிர்வரும் ஆபத்திற்கான அறிகுறி என்று தெளிவாக புரிகிறது.

இன்றைய தலைமுறையிலேயே வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

சரி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

னம் இருந்தால் மார்க்கம் உண்டு பிரென்ட்ஸ்.

கெட்டதில் நடக்கும் நல்லதாக இன்று நம்மிடையே Chillzee போன்ற சில இலவச இணையத்தளங்கள் இருக்கின்றன.

இவை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் கொடுக்கின்றன.

இப்படி ஆர்வம் இருப்பவர்களை பேணி பாதுக்காத்து அடுத்த தலைமுறை வரை கொண்டு சென்று சேர்ப்பதும், புதிய எழுத்தாளர்கள் உருவாக நம்மால் முடிந்த விதத்தில் உதவுவதும் நம் கடமை.

Chillzee போன்ற ஒரு வெப்சைட் நடத்துவதன் மூலம் நாங்கள் பல விதங்களில் எங்களால் முடிந்ததை செய்கிறோம்.

அதே போல வாசகர்களாகிய நீங்களும் உங்களுக்கு பிடித்ததாக எந்த ஒரு கதையை எங்கே வாசித்தாலும், வாசித்து முடித்து விட்டு அமைதியாக சென்று விடாமல், கட்டாயம் உங்களின் கருத்தை பகிருங்கள்.

இப்படி நீங்கள் பகிரும் ஒவ்வொரு கருத்தும் அந்த எழுத்தாளரின் எழுதும் ஆர்வத்தை அதிகரிக்கும் தூண்டுகோல்.

 

Chillzeeயின் புதிய முயற்சி:

வாசிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும் என்ற சமூக உணர்வுடன், உங்களுக்கு பிடித்த Chillzee.in வெப்சைட்டில் இன்னுமொரு புதிய முயற்சியை தொடங்க இருக்கிறோம்.

 

{jb_purplebox}மாதம்தோறும் நம் Chillzeeயில் பிரசூரம் ஆகுபவற்றுக்கு நம் சைட்டிலோ (அ) chillzee பேஸ்புக் பக்கத்திலோ [ https://www.facebook.com/ChillzeeIn ] (அ) chillzee ட்விட்டர் பக்கத்திலோ [ https://twitter.com/chillzee_in ] அழகான கருத்துக்கள் பகிர்ந்து எழுத்தாளரின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அருமையான வாசகரை chillzee எழுத்தாளர் ஒருவரே அடையாளம் காண போகிறார்.
அப்படி அவர் தேர்வு செய்யும் வாசகரை கெளரவப்படுத்துவதுடன் ரூபாய் 500 பரிசாகவும் வழங்கப் படும்.{/jb_purplebox}

 

{jb_brownbox}அதே போல ஒவ்வொரு மாதமும் நம் chillzee வெப்சைட்டில் கதை பகுதிகளில் அதிக பங்களிப்புகள் வழங்கும் எழுத்தாளரும் கௌரவிக்கப்பட்டு, ரூபாய் 500 பரிசாக பெறுவார்.{/jb_brownbox}

 

இதை இந்த ஜூலை மாதம் முதலே ஆரம்பிக்க இருக்கிறோம்.

 

ங்கள் பக்கம் இருந்து முயற்சியை நாங்கள் தொடங்கி விட்டோம்.

உங்கள் பக்கம் இருந்தும் எழுதுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் கருத்துக்கள் வரும் என்றும் எதிர்ப்பார்க்கிறோம் 🙂

 

மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.