(Reading time: 3 - 5 minutes)

அறிவிப்பு - சித்ரா வெ-யின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Maiyalil manam saaintha velai

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

சில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'காதலை உணர்ந்தது உன்னிடமே', 'கண்களின் பதில் என்ன? மௌனமா?', மழையோடு தான் வெயில் சேர்ந்ததே', 'உன் நேசமதே என் சுவாசமாய்' புகழ் சித்ரா வெ, தன்னுடைய ஆறாவது தொடர் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த தொடரின் அத்தியாயங்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய் காலை நேரத்தில் உங்களைத் தேடி வர இருக்கிறது.

புதிய கதை பற்றிய சித்ராவின் அறிமுகம் இதோ:

தோழமைகளே இதுவரை நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவிலும் ஊக்கத்திலும் நான் அடுத்த கதையோடு வந்துவிட்டேன். இந்த முறை நான் பல சுவாரசியங்களோடு ஒரு முக்கோண காதல் கதையோடு வந்திருக்கிறேன். ஒரு வாசகியாக இது போன்று கதைகளை கொஞ்சம் கஷ்டத்தோடு தான் படிப்பேன். இரண்டு பேர் காதலிக்கும்போது ஒருவர் ஒருதலை காதலோடு இருந்தால், ஒன்று அவர்கள் தியாகியாக வேண்டும் இல்லை வில்லன்(வில்லி) ஆக காண்பிக்கப்படுவார்கள். இல்லை அதேபோல் ஒருதலை காதலோடோ இல்லை காதல் தோல்வியடைந்தவரோடு ஜோடி சேர்த்து விடுவார்கள்.

 

இதெல்லாம் இந்த கதையில் இருக்காது என்று சொல்ல போவதில்லை. ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம். மூன்று பேரின் மனதிலும் காதல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒருக் கட்டத்தில் மூன்று பேருமே ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.

 

பதின் பருவம் கவனமாக இருக்க வேண்டிய பருவம்.. அது இரண்டுபாலருக்கும் பொருந்தும்..  மனதை எந்த தவறான பாதையிலும் அலைபாய விடக் கூடாது.. அப்படி தன்னை மீறி மனம் அதில் சாயும் போது,  அதன் விளைவு ஆண்களை விட  பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. நம் கதையின் நாயகி யாதவி மனம் எதன்பக்கம் சாய்ந்தது. அதில் அவளுக்கு கிடைத்தது என்ன? விபாகரன், சாத்விக் இருவருக்கும் அவள் வாழ்க்கையில் என்ன பங்கு? இன்னும் பல கதாப்பாத்திரங்களோடு  இக்கேள்விகளுக்கான விடையை தேடி கதையோடு பயணிப்போம்.. மற்ற கதைகளுக்கு நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுக்க வேண்டும்.. நன்றி. 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சித்ரா 🙂

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.