(Reading time: 5 - 9 minutes)

அறிவிப்பு - விரைவில் தொடங்கும் ஜான்சியின் புத்தம் புதிய தொடர்!

en jeevan neeye

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee வாசகர்களின் மனம் கவர்ந்த ஜான்சி தன்னுடைய புதிய தொடர்கதை "என் ஜீவன் நீயே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

வணக்கம் அன்பு தோழமைகளே,

சில்ஜீயில் மறுபடி ஒரு தொடர்கதையில் உங்களை சந்திக்க மிக ஆவலோடு இருக்கிறேன்.

அமிழ்தினும் இனியவள் அவள் கதையின் ஜீவனை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஆம், இக்கதையின் நாயகன் ஜீவன் மற்றும் நாயகி திவ்யா. உங்களது அளப்பரிய ஆதரவை இக்கதைக்கும் தந்து துணை நிற்க வேண்டுகிறேன்.

கூடிய விரைவில் கதையுடன் சந்திக்கிறேன். இப்போது உங்களுக்காக கதையின் ஒரு துளியாக டீசர் ஒன்று....

அன்புடன்,

ஜான்சி

 

ந்த க்ரே கலர் டஸ்டர் ப்ளஸ்ஸை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினான் ஜீவன். 

    அன்று விடுமுறை நாள் ரூபனும் அனியும் அவர்கள் வீட்டில் இருப்பார்கள் என நிச்சயமாக அவனுக்கு தெரியும். அதனால் தான் ஏதோ துரத்துகின்ற உணர்வில் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.

    முகத்தில் களையே இல்லை, கடந்த சில நாட்களில் தன் இயல்பை தொலைத்து குறும்பு தெறிக்கும் வார்த்தைகளை இழந்து மௌனமாகி இருந்தான்.

    கைகள் முறுக்கேறி இருந்தன, அவனது கோதுமை நிறத்திற்கும் , பருமனற்ற உடல் வாகிற்கும் அவன் உடுத்திருந்த அந்த ப்ராண்டட் சர்ட் கம்பீரமாய் பொருந்தி இருந்தது.முகத்தில் மீசை அவ்வளவாய் பொருந்தி அவனிடம் இருக்கும் துறுதுறுப்பு பையன் சற்றே மறைந்து ஆண்மை ததும்பும் தோற்றத்தில் இருந்தான்.முகத்திலும் சிந்தனைக் கோடுகள் மன முதிர்ச்சியை காட்டிக் கொண்டு இருந்தது.சிரிக்கும் போது தவழும் வசீகரம் அது மட்டும் சற்றுக் குறைந்து இருந்ததோ?!

     முன் சிகை காற்றில் பறக்க அவற்றை அலட்சியமாய் விலக்கிக் கொண்டு டக் டக்கென வீட்டின் முன் நின்று கதவை நோக்கி கை நீட்டவும் கதவு தானாக திறந்தது.

    வாடா...

  தம்பியை அழைத்தவாறு ரூபன் எதிரில் நின்றான்....கார் பார்க் செஞ்ச சத்தம் கேட்டதும் நினைச்சேன் நீயாதான் இருப்பேன்னு என்றவன் திருமணமாகிய சில வருடங்களில் வாழ்க்கை துணையோடு காதலோடு

கூடிய இனிய வாழ்க்கையில், விரைவில் தந்தை ஆகப் போகும் நிறைவில்,  மிகவும் கம்பீரமாய் இருந்தான். முன்பை விட சற்று பருமனாக இருந்தான். தொடர்ந்த உடற்பயிற்சிகளில் தொப்பையில்லாமல் தன்னை செதுக்கியே வைத்திருந்தான்.

   தோளில் கைப்போட்டு தம்பியை அணைத்தவாறு வந்தவன், உள்ளறையில் சோபாவிற்கு அருகில் வந்ததும் வாயில் கையை வைத்து அமைதி எனச் சொல்லிக் காட்டினான்.

   அங்கே கர்ப்பிணிகளுக்கேயான இலகுவான உடையில் தன் ஆறு மாத வயிற்றில் கை வைத்துக் கொண்டு ரிக்லைனரில் ஓரமாய் ஏதோ ஒரு வாகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

    அந்த குழந்தைத்தனமான, மாசு மருவற்ற முகம் மாறாமல் அப்படியே இப்போதும் கூட இருந்தது. குழந்தை தரித்ததில் இருந்து தொடர்ந்த கவனிப்பால் கொஞ்சம் எடை கூடி இருந்தாள். 

    ராத்திரி தூங்கலை ...அதான் இப்ப தூங்கிட்டு இருக்கா...

   ஓ..

தன் தோழியும் அண்ணியுமானவளைப் பார்த்த போது தன்னாலே ஜீவன் முகத்தில் முறுவல் வந்தமர்ந்தது. 

   எத்தனை எத்தனை சண்டைகள் போட்டிருப்போம்...அவனுக்கும் , அவளுக்குமான உறவு மிகவும் இறுக்கமானது. சொந்தம் எனும் ஒரு பிணைப்பு, அதன  அடுத்து நட்பு எனும் இறுகிய பிணைப்பு, அண்ணி எனும் கூடுதல் பிணைப்பு.

    யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஏன் அவனே அவளை அதட்டினாலும் அனிக்கா அவனுக்கு மிகவும் ஸ்பெஷல் உறவு. அவளிலும் ஸ்பெஷல் அவனுடைய அவள் அல்லவா? இதை திவ்யா எப்படி உணராமல் போனாள்?

    தலையை உலுக்கி சிந்தை தெளிவித்து அமர்ந்தான்.

   எடுத்துக்கோடா ...ரூபன் ஏதோ சில ஸ்னாக்ஸ்களை கொண்டு வந்து அவன் முன் வைத்தான்.

    பெர்முடாஸில் ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.

    மெதுவாகவே பேசிக் கொண்டனர். மேல் மாடியிலுள்ள குட்டித் தோட்டத்தை அவர்கள் பார்வையிட்டு வந்த போது அனிக்கா விழித்திருந்தாள்.

   ஏ...அனி...மெதுவா எழும்பு...விட்டால் துள்ளலோடு குதித்து நிற்பாள் எனும் பயத்தில் அவளருகே விரைந்தான் ரூபன்.

   வா ஜீவா...கணவனின் கைப் பிடித்து நேராக எழுந்து அமர்ந்தவள் தூக்க கலக்கத்தில் ,

பொறு நான் உனக்கு ஜீஸ் கொண்டு வாரேன்...

   நீ இரு தாயே...உனக்கு வேணும்னா நான் கொண்டு வாரேன்.

  சென்றவன் ப்ரிட்ஜில் இருந்த ப்ரெஷ் ஜீஸ்களை மூவருக்கும் கொண்டு வந்து பரிமாறினான்.

    இப்பவே நல்லா வேலை செஞ்சு பழகுடா....

நண்பனின் திருமணத்தை குறித்து கிண்டலடித்தாள் அனி.

   சோபையாய் புன்னகைத்தான் ஜீவன்.

      திவ்யாவை அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல....கேட்டவள் அதுவரை குடிக்காமல் வைத்திருந்த பழச்சாறை ஒரு வாய் உறிஞ்சவும்...

   அச்சோ...என்றாள்.

என்னாச்சு..

   இந்தக் குட்டிதான் ஜீவா...எப்ப பாரு உள்ளேயே ஆட்டம் ...

  ஹா ஹா சிரித்தான் ஜீவன்...ரூபன் குழந்தையின் அசைவை கணிக்க தன் கையை அவள் வயிற்றில் வைத்தான் ரூபன்.

   உன் குட்டில்ல உன்னை மாதிரி தான் துறுதுறுன்னு இருக்கும்....சிரித்தான் ஜீவன்.

    ஏ அனி...பாப்பாவ நான் தொட்டுப் பார்க்கட்டுமா...தயங்கியே கேட்டான் ...

   பாரேன் அவன் கையை தன் வயிற்றில் வைத்தாள் அனி. அவன் விரல்களுக்குள் ஏதோ குறுகுறுப்பு.

உன் சித்தா டா...சித்தப்பா குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தவள் குரலில், குழந்தையின் அசைவில்

     தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி...எல்லாம் சரியாகி விடும் எனும் மலை போல நம்பிக்கை வந்தமர்ந்தது ஜீவனுக்குள்.

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஜான்சி 🙂

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.