(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - விரைவில் தொடங்க இருக்கும் புத்தம் புதிய தொடர்!

Nee orumurai thaan vazhgiraai

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

ரவை அவர்கள் ராம் ராமகிருஷ்ணன் எழுதிய 'You Live Only Once’ எனும் ஆங்கில வாழ்வியல் புத்தகத்தின் தமிழாக்கத்தை “நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்” எனும் தொடராக  நம் chillzee.inல் எழுத இருக்கிறார்.

நாளை முதல் வாரம் தோறும் புதன் கிழமை மதியங்களில் இந்த தொடர் பதிவாகும்.

இந்த தொடரை பற்றிய ஆசிரியரின் அறிமுகம் இதோ:

 

'You Live Only Once (நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்!)' எனும் இந்த ஆங்கில நூல்,  2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த நூலிலிருந்து முக்கியமான பகுதிகளை தமிழில் தருவதே, எனது இந்த முயற்சி! இருநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்த நூலிலிருந்து பகுதிகளாக, தொடர்ந்து, சில்ஸீ வாசகர்களுக்கு அளிப்பதே எனது நோக்கம். நான் படித்து வெகுவாக ரசித்துப் பயனடைந்த நூல்!

 

நூலாசிரியர் ராம் ராமகிருஷ்ணனை பற்றி சிறு குறிப்பு:

1926 ல் கேரளா திருச்சூரில் ராமநாதன் என்ற அரசு ஆசிரியர் பள்ளி முதல்வரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

மதராஸ் பல்கலைக்கழக கெமிஸ்ட்ரி பட்டதாரியானார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் காமேர்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றார். படிக்கும்போதே, பேச்சுப்போட்டியில் பதக்கம் பெற்றார். 

பிறகு பர்மாஷெல் கம்பெனியில் சேர்ந்து உழைத்து படிப்படியாக முன்னேறி மதராஸ் டிவிஷனல் மேனேஜராக ஓய்வுபெற்றார். 

பிறகு, விக்டர் ஆயில் கம்பெனியின் தலைவராக பணியாற்றினார். பிறகு சென்னையில், ஏற்றுமதி/இறக்குமதி ஸ்தாபனத்தில் பகுதிநேர விரிவுரையாளராக இருந்தார்.

இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பயணித்து தற்போது அமெரிக்காவில் மனைவி சாவித்திரியுடன் வாழ்கிறார். பெரும்பாலும் மூன்று மகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் வாழ்கிறார்.

70 வயதுக்குமேல் எழுத தொடங்கி இதுவரை ஐந்து நால்கள் வெளியிட்டுள்ளார். அவை அத்தனையும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

 

ந்த நூலில் விளக்கியுள்ளபடி, மிகச் சிறந்த மனிதராக வாழ்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த கோடி வணக்கங்கள்.

அவரைப்போல வாழ்வதற்காகவே, இறைவனிடம் மறுபிறவி யாசிக்கிறேன்!

 

chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் எங்களின் நன்றியை பகிர்ந்துக் கொள்கிறோம் ரவை 🙂

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:656}  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.