(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - 16 ஃபிப்ரவரி தொடங்கும் ஸ்ரீயின் புத்தம் புதிய தொடர்!

sivaGangavathy

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

தன்னுடைய இனிய எளிய கதை நடையால் நம் மனம் கவர்ந்த ஸ்ரீதன்னுடைய எட்டாவது தொடர்கதை “சிவகங்காவதி” உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த கதை, ஃபிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பதிவாகும்.

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

சரித்திர நாவல்கள் பொதுவாய் மன்னர்கால பழக்கவழக்கங்கள் போர்முறைகள் அதைக் கடந்த காதல் என இவை அனைத்தையும் விவரிக்கும் ஒன்றாய் தான் அமைந்திருக்கும்.

அப்படியிருக்க என்னுடைய இந்த சிவகங்காவதி முழுக்க முழுக்க கற்பனையில் ஜனித்திருக்கும் காதல் கதை.

தென்னகத்தைச் சேர்ந்த சிவகங்காவதி இந்துஸ்தானத்தை பிறப்பிடமாய் கொண்ட இஷான் நஸீம்.இவர்களுடன் தான் மதுரையில் இருந்து இந்துஸ்தானத்திற்குப் பயணிக்கப் போகிறோம்.

காதல் கதையில் எப்படி வித்தியாத்தை திணிக்க இயலும் என்ற போது தான் ஒரு எண்ணம் தோன்றியது.மன்னர்கால ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பது சாதாரணம்.சொல்லப் போனால் கௌரவமும் கூட.

அப்படி செய்யும் திருமணங்களில் எதோ ஒரு மனைவியிடம் மட்டும் அன்பு சற்று அதிகமாக இருக்கும் கணவருக்கு.அதுவும் காதல் தான் என்றாலும் இன்றைய காலத்தில் அதை பல பேர் அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ள மட்டார்கள்.

இதற்கு சிறந்த உதாரணங்கள் அக்பர் ஜோதாபாய்,ஷாஜகான் மும்தாஜ் .காதல் சின்னமான தாஜ்மஹாலையே கட்டடியிருந்தாலும் இன்றைய தலைமுறையில் விளையாட்டாய் எழும் ஒரு கேள்வி மேற்குறிப்பிட்ட அரசர்கள் ஒன்றும் ஒரே மனைவியோடு வாழ்ந்ததில்லையே என்பதே!

அதை மனதில் வைத்து எழுத ஆரம்பித்த கரு தான் இந்த கதை.அதுமட்டுமன்றி பெயரிலேயே கண்டுபிடித்துருப்பீர்கள் இருவரும் இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கான காதல் திருமணமாய் முழுமையடைவதை தான் முடிந்த அளவு சுவாரசியமாக கூற முயற்ச்சித்திருக்கிறேன்.

நிச்சயம் உங்கள் அனைவரின் ஆதரவும் இந்த கதைக்கும் வேண்டும்.வரும் சனிக்கிழமை முதல் அத்தியாயத்தோடு வருகிறேன் மக்களே!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ 🙂

 

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!  

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

{kunena_discuss:656}   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.