Announcements - "Chillzee பிரபலம்" புது பொலிவுடன்!!!!
ஃப்ரெண்ட்ஸ், முன்பு அறிவித்திருந்தது போல Chillzee பிரபலம் (Celebrity) புது வடிவில் உருவாகி வந்து இருக்கிறது!
Chillzeeயில் எழுதும் எழுத்தாளர்கள், டீம், வாசகர்கள் அனைவருமே மிக மிக முக்கிய நட்சத்திரங்கள் தான்.
அப்படி மின்னும் நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து எங்களின் பாராட்டை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய "Chillzee பிரபலம்" திட்டம்!
ஒவ்வொரு மாதமும் Chillzeeயை நிர்வகிப்பவர்களால் ஒரு "Chillzee பிரபலம்" தேர்வு செய்யப் படுவார்*.
இவர் Chillzeeயில் தொடர்ந்து பங்களிப்பவராக இருக்கலாம், உரிய நேரத்திற்கு தங்களின் பங்களிப்பை பகிரும் 'punctuality' பிரியர்களாக இருக்கலாம், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருத்தை பகிரும் வாசகர்களாக இருக்கலாம், தளத்தை நல்ல முறையில் நடத்த உதவும் டீமை சேர்ந்தவராக இருக்கலாம், தவறுகளை சுட்டிக் காட்டி, யோசனைகளை பகிர்ந்து, Chillzeeயை மேம்படுத்த உதவும் chillzee நட்பாகவும் இருக்கலாம்.
360 கோணத்திலும் Chillzeeயை மேம்பட நடத்த உதவுபவரை முன்னிலைப் படுத்தி காட்ட தான் இந்த புதிய "Chillzee பிரபலம்" திட்டம்.
"Chillzee பிரபலம்" ஆகுபவருக்கு அவர் தேர்வு செய்யும் "Chillzee Shop"ல் இருந்து ஒரு நாவல் பரிசாக வழங்கப்படும். புத்தக விலை மற்றும் ஷிப்பிங் செலவு முதல் அனைத்தையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம்!
மேலும் புத்துயிர் பெற்று வர இருக்கும் "Chillzee Featured" பகுதியில் அவர்களின் பேட்டியும் பப்ளிஷ் ஆகும்!
படிக்கும் ஆர்வம் உள்ள பிரியர்களுக்கான தளம் Chillzee என்பதால் இந்த பரிசுகள்!
பரிசை பெற்றுக் கொள்ள ஒரே ஒரு சிறிய நிபந்தனை தான்! உங்களுக்கு ஒரு Chillzee ஐடி இருக்க வேண்டும்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு புத்தகங்களை அனுப்பவதில் இருக்கும் logistics பிரச்சனைகளை மனதில் கொண்டு அவர்களின் விருப்பப் படி இந்தியாவில் யாருக்கேனும் புத்தகத்தை அனுப்ப்வோ அல்லது பிற்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் Chillzee Shop credit ஆகவோ பரிசு வழங்கப் படும்.
இந்த புதிய திட்டத்தை அனைவரும் வரவேற்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.
"Chillzee பிரபலம்" திட்டத்தை மேம்படுத்த உங்களின் உதவியையும் எதிர்பார்க்கிறோம்.
இங்கே நாங்கள் பகிர்ந்திருக்கும் திட்டத்தை இன்னும் சிறந்த முறையில் செய்யலாம் என உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால், தயக்கம் இல்லாமல்
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சலுக்கு ஈமெயில் அனுப்பி அதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி!
{kunena_discuss:656}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
