Announcements - Madhu's new series starting soon!

Dear friends,
Madhu, a very familiar name at Chillzee is all set to start another series @ Chillzee ![]()
His new series named "Mudiviliyin mudivinile" will be starting very soon.
Here's what the writer got to say about her series:
முடிவிலி - முடிவு இல்லாதது.
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி வடிவம் இறைவன் என்கிறோம்.
ஜீவராசிளின் அணுக்களிலே உறைந்திருக்கும் உயிராகட்டும். அல்லது அந்த உயிருக்குள் பொதிந்திருக்கும் உணர்வாகட்டும் அனைத்திலும் இந்த இறைத்தன்மை இருக்கின்றது.
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையிலானா இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு வகையில் ஐம்பூதங்களோடு கலந்து இந்தப் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகி முடிவிலியை நோக்கி பயணிக்கிறது.
இதோ அதே போல ஒரு பயணம் இங்கே தொடக்கம்.
“முடிவிலியின் முடிவினிலே” AT THE END OF INFINITY
முடிவே இல்லாதது என்பதைத் தான் இப்படி தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்கிறேன்.
உங்களோடு இங்கே பயணிக்க போவது துடிக்கும் இதயம் உனதே உனதில் கணேஷ் ராம் குறிப்பிட்ட அவனது மோன் செர்ரியும் (MON CHERRIE), பாஸ் ஹெச்.எஸ்.ஆரும்.
ஏழையோ, பணக்காரனோ; புகழின் ஏணியில் இருப்பவனோ, எங்கோ ஓர் மூலையில் வசிப்பவனோ.... உயிர் உறையும் இந்த தேகத்திற்கு பிணி என்று ஒன்று வந்தால் வலியும் வேதனையும் ஒன்றே. உயிரின் மதிப்பும் இந்த மனித வாழ்வின் உன்னதமும் மருத்துவமனையின் படுக்கையில் தான் பலருக்கு புரிகிறது. ஜனனத்தின் மகிழ்ச்சி மரணப் பிடியின் மருட்சி இதன் சாட்சி மருத்துவர்கள்.
அவர்கள் வாழ்க்கை, அவர்கள் உணர்வுகள், அவர்கள் உறவுகள் இக்கதையின் அடித்தளம்.
நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த கதைக்கரு. நிறைய R&D தேவைப்பட்டதால் காலதாமதம் ஆகவே இதன் விழுதான ‘துடிக்கும் இதயம் உனதே உனது’ முந்திக் கொண்டது.
கதைக்கு முன்னுரை மிகவும் சீரியசாக இருக்கிறதே என்று தோன்றலாம். அடித்தளம் அழுத்தமாக இருக்க வேண்டும் அல்லவா. மற்றபடி நமது கணேஷ் ராமும் அவனது தோழி பூரி மசாலாவும் இங்கேயும் வந்து கோலோச்சிப் போவதால் கலகலப்பிற்கும் உற்சாகத்திற்கும் பஞ்சம் இருக்காது. கதை உங்கள் மனதிற்கு இனிய முடிவிலிப் பயணமாக அமையும் என்று நம்புகிறேன்.
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Madhu ![]()
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.