(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - லதா சரவணனின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Marainthu vidaathe maaya

னிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

நாற்பதிற்கும் மேற்பட்ட கதைகள், பல பத்திரிக்கைகளில் கட்டுரைகள் என பல பரிமாணங்களில் நமக்கு பரிச்சயப் பட்ட லதா சரவணன், நம் சில்சீயில் புதிய தொடர்கதையின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறார்!!!!

"மறைந்துவிடாதே மாயா" எனும் இந்த தொடர் விரைவில் வாரத் தொடர்கதையாக நம் சில்சீயில் வலம் வர போகிறது.

தையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

Latha Saravanan

பர்னிச்சர் ஏற்றுமதி தொழில் புரியும் கமல் தன்னுடைய தொழில் நிமித்தம் கலந்து கொள்ளும் நிகழ்வில் மாயாவின் பரதநாட்டியத்தைப் பார்த்து மனதை பறிகொடுத்து அவளிடம் காதலை தெரிவிக்க இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் நேரத்தில் தொழில் நிமித்தம் லண்டன் செல்கிறான்.

மாயா மாடிப்படியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்வதாக டிடெக்டிவ் நண்பன் அசோக் மூலம் தகவல் வருகிறது.

மாயாவின் இறப்பு தற்கொலை அல்ல என்று சந்தேகத்தோடு நண்பனோடு புகார் தருகிறான். மாயாவின் கணவன் என்றும் தங்களிருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்து விட்டது என்றும் மாயாவின் வீட்டு நபர்களிடம் சொல்லி அங்கே தங்குகிறான். 

அசோக்கின் காதலி லட்சணா மருத்துவமனையில் தலைமை நர்ஸாக பணிபுரிகிறாள். விபத்தில் இருந்து தப்பி மருத்துவமனையில் மாயாவின் சாயலில் ஒரு பெண்ணைக் கண்டதும் அசோக்கிற்கு தகவல் தெரிவிக்கிறாள். அந்தபெண் ஒரு சிகப்புவிளக்கு பகுதியைச் சேர்ந்தவள் என்றும், அவளுடன் பழகிய ஒருவன் தன் தேவைக்காக ஒரு குழந்தையை பெற்றுத்தருமாறு அவளை நிர்பந்தித்ததையும், பிறகு அவளை ஏமாற்றியதைப் பற்றியும் விரிவாக கூறுகிறாள். மாயாவின் இறப்பின் சிக்கலை கண்டுபிடிக்க அவளை பயன்படுத்திக்கொள்கிறார்கள் நண்பர்கள்

இறுதியில் மாயாவைப் போன்ற தோற்றமுடைய பெண்ணின் நிலை?

கமல், அசோக் யார் உதவியோடு மாயாவைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தார்கள்?

மாயாவின் இறப்பு தற்கொலை (அ) கொலையா ?

தொடர்வோம்..............

"மறைந்துவிடாதே மாயா"

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

சில்சீக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் லதா மேம்! smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.