Itharku peyar thaan kadhalaa - Tamil thodarkathai

Itharku peyar thaan kadhalaa


Itharku peyar thaan kadhalaa is a Family / Romance genre story penned by Sasirekha.

This is her eighteenth serial story at Chillzee.

கதையின் முன்னுரை

ன்பான சில்ஸி வாசகர்களே….

முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.

இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்

நன்றி

சசிரேகா

முன்னுரை

ன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.