Kadhalai unarnthathu unnidame - Tamil thodarkathai


Kadhalai unarnthathu unnidame is a Romance / Family genre story penned by Chithra V.

This is her first serial story at Chillzee.
Kadalai unarnthathu unnidame

மிகவும் எளிதான முறையில், ஒரு கட்டாயத்தின் பேரில்... சம்யுக்தா, பிருத்விராஜின் திருமணம் வடபழனி முருகன் கோவிலில் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் இருவருக்கும் விருப்பம் இல்லை. இவர்களுக்கு மட்டுமில்லாமல், இவர்கள் இருவரின் குடும்பத்தாருக்கும் இந்த திருமணம் சங்கடத்தையே தருகிறது.

பிருத்வியின் கோபம், யுக்தாவின் தாயுடைய புலம்பல், மற்றவர்கள் யுக்தாவிடம் பேசாமல் இருப்பது... இவையெல்லாம் இப்படி ஒரு திருமணம் நடக்க, யுக்தா தான் காரணம் என்பதாக காட்டுகிறது... ஆனால் தனிமையில் இருக்கும் யுக்தாவிற்கோ, பிருத்வியின் கோபமும்... தன் ஒன்றுவிட்ட சகோதரியும், தன் நெருங்கிய தோழியுமான சங்கவி தன்னிடம் பேசாமல் இருப்பதையும் நினைத்து வருத்தம் கொள்கிறாள்...

இப்படியிருக்க கதை இரண்டு மாதங்கள் முன்னோக்கிச் செல்கிறது... தன் தாய், தந்தையோடு நியூயார்க்கில் வசிக்கிறாள் சம்யுக்தா... அவர்கள் இந்தியாவை விட்டு சென்று பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது... யுக்தாவோ தன் தாய் நாடான இந்தியாவையும், தமிழ் கலாச்சாரத்தையும் அதிகமாக நேசிக்கிறாள்... அவளுடைய கல்விக்காலம் முடிந்த காரணத்தால்... சென்னையில் வசிக்கும், தன் பெரியம்மா மற்றும் தன் சகோதரியோடு வசிக்க விரும்புகிறாள்... அதற்கேற்ப அவள் அத்தை மகள் திருமணம் மதுரையில் நடப்பதால்... குடும்பத்தோடு இந்தியா வர முடிவெடுக்கிறார்கள்...

தன் அன்னையின் நெருங்கிய தோழியின் மகனான பிருத்வியின் மேல் சிறு வயதிலிருந்தே அன்பு வைத்திருக்கிறாள் யுக்தா... அது காதலாக மாறி... இந்தியா சென்றதும் அவனிடம் காதலை சொல்லி அவனை மணந்துக் கொள்ள நினைக்கிறாள்.

பிருத்வியோ வேறொரு பெண்ணை காதலிக்கிறான்... யுக்தாவின் அத்தை மகனான தேவாவுக்கு யுக்தாவை மணம் முடிக்க பெரியவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கிறது... யுக்தாவின் சகோதரி சங்கவி தேவாவை காதலிக்கிறாள்... இது எதுவும் தெரியாத யுக்தா இந்தியா வருகிறாள்...

இந்தியா வந்த யுக்தா, பிருத்வியின் காதல், தேவாவுடன் அவளுக்கு நடக்கும் திருமண பேச்சு, சங்கவியின் காதல் இதைப் பற்றியெல்லாம் தெரிந்துக் கொண்டாளா..?? பிருத்வியிடம் தன் காதலை தெரியப்படுத்தினாளா..?? வேறொரு பெண்ணை காதலிக்கும் பிருத்வி யுக்தாவை எப்படி மணந்தான்... பிருத்வியை காதலிக்கும் யுக்தாவிற்கு இந்த திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லாமல் போனது..?? திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்களா..??

இதையெல்லாம் தெரிந்துக் கொள்ள நாமும் யுக்தாவோடு இக்கதையில் பயணிப்போம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.