Endrendrum unnudan 02


Endrendrum unnudan 02 is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her nineteenth story @ Chillzee.

முன் கதை சுருக்கம்

ம்மா (பூங்கோதை), தம்பி (விமல்), தங்கை (கவிதா) என அனைவரின் மீதும் அன்பு வைத்திருக்கும் கமல், அவர்கள் அனைவரையும் பொறுப்பாக வழி நடத்தும் கடமையை எடுத்துக்கொண்டதால் கோபம் எனும் முகமூடியை அணிந்துக் கொள்கிறான்.

அவனின் உண்மை முகம் தெரியாமல், ‘ஹிட்லர்’ என்று குடும்பத்தினரால் அழைக்கப்படுகிறான் / நினைக்கப்படுகிறான்!

கமலின் மென்மையான மனதை அறிந்தவள் அவன் விருப்பப்பட்டு மணந்துக் கொண்ட மனைவி சுமித்ரா மட்டுமே. கணவனின் மீது உயிராய் இருப்பவள், அவனின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் விமலின் மனைவி ரோஷினியையும் கூட அன்பாக அரவணைத்து செல்கிறாள்.

மனைவியின் மீது அதிக அன்பு வைத்திருக்கும் கமலிற்கு அவளின் இள வயது ஆசைகளை  நிறைவேற்றும் விருப்பம் இருந்தாலும் குடும்ப சுழல் காரணமாக எதையும் செய்ய இயலாமல் இருக்கிறான்.

கமல் – சுமித்ராவிற்கு ரேஷ்மி எனும் மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் சுமித்ராவிற்கு அவ்வப்போது வயிற்று வலி வருகிறது. தன் உயிர் தோழி டாக்டர் ஹேமாவின் மருத்துவமனைக்கு சென்று அவளிடம் வலி பற்றி சொல்கிறாள் சுமித்ரா.

அந்நேரம் ஹேமாவிற்கு வேறு அவசர வேலை வந்து விடவே சுமித்ராவை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு செல்கிறாள் ஹேமா.

ஹேமாவின் அறையில் காத்திருக்கும் சுமித்ரா கமலை முதன் முதல் அதே ஹாஸ்பிட்டலில் சந்தித்த பழைய நினைவுகளை அசைப் போடுகிறாள்.

ணக்கார வீட்டு மருமகள் ஆகி, பொறுப்புகள் இல்லாமல் வாழும் கனவுடன் இருக்கிறாள் சுமித்ரா...

அம்மாவிற்காக அந்த மருத்துவமனைக்கு வரும் கமல், எதிர்பாராத விதமாக சுமித்ராவை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவரும் மற்றவரிடம் ஈர்க்கப் படுகிறார்கள்.

தோழியின் மனநிலையை ஒருவாறு புரிந்துக் கொள்ளும் ஹேமா, கமல் அவளுக்கு ஏற்றவனில்லை – முன்கோபக்காரன் & பொறுப்புகள் அதிகம் கொண்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் என்று எடுத்து சொல்கிறாள்.

ஹேமா சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் தன் மனதை மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் சுமித்ரா!

சுமித்ரா – கமல் காதல் எப்படி கை கூடியது?

கமலின் உண்மை முகம் அவனின் குடும்பத்தினருக்கு தெரிய வருமா?

தெரிந்துக் கொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள் பிரென்ட்ஸ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.