எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - ஆகஸ்ட் ஸ்பெஷல்ஸ் 👌👌👌

பிரென்ட்ஸ்,
Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க "எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்!" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
அதன் ஆகஸ்ட் மாத விபரங்கள் இதோ.
TOP COMMENT POSTER:
ஆகஸ்ட் மாதத்தில் அழகான கருத்துக்கள் பகிர்ந்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அருமையான வாசகரை தேர்வு செய்யும் பொறுப்பை தீபாஸ் [ பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை, பெண்ணே என் மேல் பிழை, ஒளி தருமோ என் நிலவு] ஏற்றுக் கொண்டிருந்தார்.
[உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி தீபாஸ்.]
தீபாஸ் தேர்வு செய்த வாசகர் பற்றிய விபரம் இதோ:
எழுத்தாளர்களுக்கு தங்களின் எழுத்துக்கு வரும் கருத்துக்களே அவர்களின் அடுத்தடுத்து எழுதும் எழுத்துக்கு தூண்டுகோள். ஒவ்வொரு வாசர்களின் கருத்துக்களும் எழுதுபவர்களின் தரத்தை அவர்கள் உணரவைத்து அதன் மூலம் தங்களின் எழுதும் தரத்தை உயர்த்தி மெருகேற்ற உதவுகிறது. வாசகர்களின் கருத்து பகிர்தல் இல்லையென்றால் காட்டிய அன்பிற்கு பிரதிபளிப்பான அன்பு காணாத தாயைப்போல் எழுத்தாளர்கள் ஏங்கிப் போய்விடுவார்கள்.
அந்த வகையில் நான் ஏங்கிபோகாமல் என்னை நம் சில்சீ நட்பூக்கள் என்னை அரவணைத்து தங்களின் அன்பை, கமெண்டாக பலர் கொடுத்து ஏற்றம்பெற வைக்கிறீர்கள். இருந்தாலும் இந்த மாதம் ஒருவரைத்தான் டாப் கமெண்ட் கொடுப்பவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதனால் கமென்ட் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் மஹிநாகராஜ் அவர்களை இந்த மாத டாப் கமெண்ட்ஸ் தந்த நபராக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அன்புள்ள மஹிநாகராஜ் அவர்களே, நீங்கள் தரும் கமெண்ட்சை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். மேலும் உங்களின் கமெண்ட்ஸ் பொதுவாக தமிழிலேயே இருக்கும் எனக்கு தமிழ் தான் எழுத படிக்க எளிதாக இருக்கும் அதற்காக ஆகிலத்திலேயோ, தங்கிலீசிலேயோ எழுதும் கமெண்ட்ஸ் எனக்கு பிடிக்காது என்பதெல்லாம் கிடையாது. லாலா கடையில் தீபாவளி ஸ்வீட் பாக்ஸில் பலவகை இனிப்பு கலந்து இருக்கும் அது எல்லாமே எனக்கு பிடிக்கும் என்றாலும் அதில் இருக்கும் நெய் மைசூர்பாகுவை தான் முதலில் என் கை எடுத்து எனக்கு ஊட்டிவிடும் அந்த நெய்மைசூர்பாகு போன்றது தமிழ் எனக்கு .
மேலும் மஹி நீங்கள் தொடர்ந்து உங்களின் கருத்துக்களை பதிவிட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் சேவையை சிறப்பாக செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகஸ்ட் மாத டாப் கமெண்ட் போஸ்ட் இடத்தை பெற்ற மஹிநாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களின் சேவை எழுத்தாளர்களுக்குத் தேவை.
வாழ்த்துக்கள் மகி நாகராஜ் 👍👍👍👍
TOP Contributor:
ஆகஸ்ட் மாதத்தில் அதிக பங்களிப்புகள் கொடுத்து நம் chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTOR" பட்டத்தை மீண்டும் பெறுபவர் சசிரேகா [ காதலை பெற எத்தனிக்கிறேன், முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி].
வாழ்த்துக்கள் சசிரேகா 👍👍👍👍
மஹி நாகராஜ், சசிரேகா இருவரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏
செப்டம்பர் மாத சிறப்பு எழுத்தாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம்.
{jb_purplebox}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_purplebox}
மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.