From my desk - November 2016 - Edition 10

அனைவருக்கும் வணக்கம். நலம் நலமறிய ஆவல் ![]()
இந்த் அலைவரிசையில் உங்கள் அனைவரையும் சந்தித்து பல மாதங்கள் ஆகி விட்டன. மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Chillzee.in இணையத்தளம் நம் அனைவரின் படிக்கும் ஆர்வத்தை தொடர்வதற்கும், எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இயக்கப் படும் ஒரு தளம்.
ஒவ்வொரு முறை ஒவ்வொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் போதும் சரி, மாற்றங்களை கொண்டு வரும் போதும் சரி இதை தான் மனதில் வைத்து செய்கிறோம்.
இந்த மாதமும் அதே போல சில புதிய அறிவிப்புகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அதற்கு முன் chillzee.inல் தங்களின் படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & நன்றிகள்!
இப்போது புதிய அறிவிப்புகளை பார்ப்போம்!
1. மதியம் ஒரு மணிக்கு பதிவாகும் அனைத்து 'on-schedule' தொடர்களும் காலை ஆறு மணிக்கு பதிவாகும் தொடர்களை போல cash reward தொடர்களாக இந்த மாதம் முதல் மாற்றப்படுகின்றன.
ஆறு மணிக்கு பதிவாகும் தொடர்களுக்கும், ஒரு மணி தொடர்களுக்கும் இதுவரை இந்த ஒரே ஒரு வேறுபாடு தான் இருந்தது.
அதை மாற்றி இரண்டையும் ஒன்றாக மாற்ற முடிவு செய்திருக்கிறோம்.
இதற்கான முக்கிய காரணம், நமக்காக ஆர்வத்துடன் நேரம் தவறாமல் எழுதி பகிர்ந்துக் கொள்பவர்களை பாராட்ட வேண்டும் என்ற நோக்கமே.
ஒரு மணி தொடர் எழுத்தாளர்கள் அனைவருக்கும் Chillzee.in teamடம் இருந்து முழு விபரங்களுடன் மின்னஞ்சல் விரைவில் வரும்.
2. 'Most active user' மீண்டும் வருகிறது
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதும் அனைவரும் பொதுவாக சொல்லும் ஒரு விஷயம், அவர்களுடைய படைப்பிற்கு பதியப் படும் ஒவ்வொரு கருத்தும் அவர்களை மகிழ்ச்சியூட்டுகிறது என்பதே.
இதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். எனவே தான் எழுதுபவர்களை பாராட்டுவது போலவே கருத்து பரிமாறுபவர்களையும் பாராட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
நவம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப் படும் 'Most active user' பற்றிய முழு விபரங்கள் விரைவில் chillzee.inல் பகிரப்படும்.
3. Chillzee.in அரையாண்டு விருதுகள்
டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் chillzee.in அரையாண்டு விருதுகள் வெற்றியாளர்களை தேர்வு செய்ய உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்யலாம். உங்களின் பங்களிப்பு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க எங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த விருதுகள் குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் வெளியாகும்.
4. சிறுகதை போட்டி 2016 - 17
chillzee.inன் நான்காவது சிறுகதை போட்டிக்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
போட்டியில் நடுவராக இருக்க வாசகர் பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இதை படிக்கும் போது உங்களுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றலாம்.
ஒன்று, 'இவங்க வேலையை நமக்கு தள்ளி விடுறாங்க!'
இரண்டாவது 'இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே! இவ்வளவு transparent (வெளிப்படை) ஆக போட்டியை நடுத்துறாங்களே!'
இரண்டில் எந்த விதமாக நீங்கள் யோசித்தாலும் தவறில்லை அதில் கொஞ்சம் கொஞ்சம் உண்மை இருக்க தான் செய்கிறது ![]()
நாங்கள் யோசித்த காரணம் என்ன என்றால், Teamல் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக யோசிப்பவர்கள் என்று எங்களுக்கு தோன்றுகிறது. எனவே வேறு கருத்து உள்ளவர்களின் கருத்தையும் தெரிந்துக் கொண்டு வெற்றி பட்டியலை நிர்ணயிக்கலாம் என்ற சிந்தனையே!
விருப்பம் உள்ளவர்கள் 15ஆம் நவம்பருக்குள்
அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்தால் பன்முகத்தன்மை (diversity) கருத்தில் கொண்டு மூன்று பேரை தேர்வு செய்வோம்.
இந்த புதிய அறிவிப்புகள் அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் என்று நம்புகிறோம்.
Chillzee.in வாசகர்கள் & எழுத்தாளர்களாகிய உங்களுக்கும் மேலே ஆரம்பத்தில் நான் சொன்ன நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் ஏதேனும் வேறு புதிய ஐடியாக்கள் இருந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
சற்று தாமதமான பதில் பரவாயில்லை என்றால் ![]()
உடனடி பதில் தேவை என்றால்
மீண்டும் அடுத்த மாதம் உங்களை மேலும் பல பல இனிய செய்திகளுடன் சந்திக்கிறேன்.
Shanthi...
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.