(Reading time: 5 - 9 minutes)

From my desk - மனம் விட்டு பேசுவோமா? - 01

From my desk

னைத்து chillzee அன்பர்களுக்கும் வணக்கம்!

விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!

உங்களுடன் பேசி நாட்கள் ஆகி விட்டன!

நல்ல விஷயத்தை எப்போதும் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து! ஆனால் அதிர்ஷ்டவசமாக விநாயகர் சதுர்த்தி போல ஒரு திருநாளில் ஒரு புதிய தொடக்கம் ஏற்படுவது கூடுதல் சிறப்பு அல்லவா!

மறுபடியும் From my deskல் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

 

பொதுவாக இந்த அலைவரிசையில் chillzee பற்றி நிறைய பேசுவோம். ஒரு மாற்றத்திற்காக இந்த முறை பொதுவான விஷயங்களை பேசுவோமா?

 

படிக்கும் போது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் (!!!!) சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன்! தமிழ் பற்றி பேசும் போது ஆங்கிலம் கலப்பது எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கிறது! ஆனாலும் தேவை என்பதால் அதை செய்திருக்கிறேன். 

 

மனம் விட்டு பேசுவோமா? - 01 - தமிழ் வெப்சைட்கள்

From my desk

ன்ன இப்படி ஒரு தலைப்பு என்று யோசிக்கிறீர்களா?

இதை பற்றி நான் பேச விரும்புவது ஜெனரல் நாலேட்ஜ்க்காக! நம்புங்கப்பா!!! smile

 

உங்களில் சிலருக்கு நான் சொல்ல போகும் தகவல்கள் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். சிலருக்கு என்னை விட அதிகமான தகவல்களும் தெரிந்திருக்கலாம். அப்படி தெரிந்து இருந்தால் தயங்காமல் விபரங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

 

லகம் இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டது. கோடிக்கணக்கான வெப்சைட்கள் இருக்கின்றன.

இதில் எத்தனை தமிழ் வெப்சைட்கள்?

அந்த கோடியில் மிகவும் சிறிய பகுதி மட்டுமே!

இதிலும் பிரபலமான நியூஸ் பேப்பர், மேகசின் வெப்சைட்களை விட்டு விட்டு பார்த்தால் எத்தனை தமிழ் வெப்சைட்கள் இருக்கும்?

மிக மிக குறைவான வெப்சைட்கள் தான்.

 

2005ல் வெளி வந்த ரிப்போர்ட் படி தோராயாமாக தமிழ் பேசும் மக்கள் 7.7 கோடி பேர் உலகெங்கும் இருக்கிறார்கள்.

அப்புறம் ஏன் இந்த குறைந்த அளவிலான தமிழ் வெப்சைட்கள்?

எப்போதாவது இதை பற்றி யோசித்திருக்கிறீர்களா?

யோசிக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி இன்று பேசுவோம்.

 

ம் அனைவருக்குமே நம் தாய் மொழியான தமிழ் மீது தனி பாசம் இருக்கிறது, பற்று இருக்கிறது.

ஆனால் வர்த்தகரீதியாக (commercial) அது எந்த அளவில் உதவும்?

இங்கே நாம் பேசும் வெப்சைட்கள் விஷயத்தில் மிக மிக குறைவாக தான்!

 

பொதுவாக ஒரு சாதாரண வெப்சைட்க்கு வரவு (income) என்று இருக்கும் முக்கிய விஷயம் விளம்பரங்கள்.

chillzee உட்பட பல வெப்சைட்களில் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.

இந்த விளம்பரங்களின் மூலம் வரும் வரவு எவ்வளவாக இருக்கும் என்று யூகித்திருக்கிறீர்களா?

இதில் பேஜ் ஹிட்ஸ் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சோகமான விஷயம் என்ன என்றால் தமிழில் இருக்கும் பக்கங்களுக்கு விளம்பர ரீதியாக வரும் வருமானம் மிக மிக சொற்பம்!

ஆப்வியஸ்லி, இங்கே இங்கிலீஷிற்கு தனி மதிப்பு உண்டு.

 

மொழி மட்டும் அல்லாமல் எந்த நாட்டு மக்கள் அந்த வெப்சைட்டை பார்க்கிறார்கள் என்பதும் இதில் ஒரு முக்கியமான விஷயம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இங்கே மேல்தட்டு நாடுகள்.

இந்த நாடுகள் அல்லாத மக்கள் பார்க்கும் வெப்சைட்களின் வருமானமும் குறைவு தான். இதில் நம் இந்திய நாடும் ஒன்று என்று சொல்வது வருத்தமாக தான் இருக்கிறது!

 

இதை அனைத்தையும் தாண்டி, ஒரு நல்ல வெப்சைட்டிற்கு இன்னமும் பல பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

விளம்பரங்கள் எந்த வயதினரும் பார்க்கும் விதத்தில் நல்ல விதமாக இருக்க வேண்டும், எதையும் டவுன்லோட், இன்ஸ்டால் செய்யாததாக இருக்க வேண்டும், போன்றவை சில உதாரணங்கள்!

 

மேற்சொன்ன காரணங்களால் தான் பல கமர்சியல் சைட்கள் முக்கிய மொழியாக 'தமிங்கலம்' (ஆங்கிலத்தில் அடிக்கப்படும் தமிழ்) பயன்படுத்துகின்றன.

தமிழில் தொடங்கப்படும் பல சைட்களும் மெல்ல தமிங்கலத்திற்கு செல்கின்றன.

சில சைட்கள் மூடப் படுகின்றன!

அப்படியே தமிழில் ஒரு சைட் இருந்தாலும் அங்கே அதிகமான விளம்பரங்கள் செருகப் படுகின்றன.

முதலீடு இல்லை என்றால், அவர்களும் வேறு என்ன செய்வார்கள்!

 

ங்கே நாம் கேட்க வேண்டிய கேள்வி, இப்படி குறைந்த வருமானம் இருக்கும் ஒரு சைட்டை ஏன் எடுத்து நடத்த வேண்டும்?

இதற்கான பதிலை நீங்களும் யோசியுங்கள்.

என்னை பொறுத்த வரை இதற்கான பதில் – ஆர்வக் கோளாறு, (தமிழ்) பற்று, (தமிழ்) பாசம், அந்த வெப்சைட்டின் சேவை மீது அதை நடத்துபவருக்கு இருக்கும் ஈடுபாடு!

என்னுடைய பதிலை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது! மாற்று பதில் இருந்தால் சொல்லுங்கள் கேட்க காத்திருக்கிறேன்!

 

ந்த இடத்தில் உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன்.

இன்னொரு முறை எங்கேயாவது தமிழ் நிறைந்த நல்ல வெப்சைட்டை பார்த்தீர்கள் என்றால், அவர்களை உங்களால் முடிந்த விதத்தில் ஊக்குவியுங்கள்!

எதிர்காலத்தில் மாற்றங்கள் வரலாம், ஆனால் இன்றைய நிலவரத்தில் அவர்கள் அந்த சைட்டை நடத்துவது வணிகரீதியான காரணத்திற்காக மட்டுமல்ல!

அவர்களை நாம் ஊக்குவிக்காமல் வேறு யார் ஊக்குவிப்பது!

 

ங்களிடம் மனம் விட்டு பேச இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. எனவே மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

  

 

Shanthi...

www.Chillzee.in

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.