பத்து வருடங்களாக தொடரும் சேவை
தொடர்கதைகள், போட்டிகள் என அனைத்திற்கும் சொன்ன நேரத்தில் சொன்னது போல நேர்மையுடன் ஊக்கத்தொகை / பரிசுத்தொகையை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்
தங்களின் நிஜ பெயர் வெளியிட விரும்பாமல் புனைப்பெயரில் எழுதும் எழுத்தாளர்களின் அடையாளத்தை அவரின் விருப்பமில்லாமல் எந்த காலத்திலும் வெளியிட்டதில்லை.
[We encourage and protect the privacy of writers who write stories in their Alias names]
எழுத்தாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளையோ, மற்ற தகவல்களையோ யாரிடமும் பகிர்ந்ததில்லை.
58 தனித்தன்மை வாய்ந்த கதாசிரியர்கள் chillzeeயில் தங்களின் கதைகளை முழுமையாக எழுதி முடித்திருக்கிறார்கள்.
மேல் சொன்ன எழுத்தாளர்கள் தவிர 13 புதிய எழுத்தாளர்கள் தங்களின் கதைகளை இப்போது chillzeeயில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய எழுத்தாளர்களை அன்றும், இன்றும், என்றும் அன்புடன் வரவேற்று ஊக்கமளிக்கிறோம்.
Chillzeeயில் அறிமுகமான 16 புதிய எழுத்தாளர்களின் கதைகள் புத்தகங்களாக வெளி வந்திருக்கின்றன.
ஏற்கனவே புத்தங்கங்கள் வெளியிட்ட 3 பிரபல எழுத்தாளர்கள் Chillzeeயிலும் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து எழுத்தாளர்களிடம் இருந்து பின்னூட்டம் (feedback) பெற்று, இயன்ற அளவில் அவர்கள் விரும்பும் மாறுதல்களை செய்து வருகிறோம். அவற்றுள் சில:
டீசர் (Teaser) பகுதியை மீண்டும் கொண்டு வந்தது
அதிகம் வாசித்தவை பகுதியில் நிறைவடைந்த கதைகளுக்கென தனி பகுதி கொண்டு வந்தது
எங்களிடம் உதவி (அ) கோரிக்கை விடுக்கும் கதாசிரியர்களுக்கு எங்களின் விதிமுறைகளை வளைத்து உதவி செய்தது
Chillzeeக்கு பாதிப்பு வராத அளவில் எந்த விதிமுறைகளையும் தளர்த்துவோம்.
நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க Chillzeeயில் log-in செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடை தளர்த்தியது.
நாங்கள் பயன்படுத்தும் software systemல் இன்று வரை கூட இல்லாத சரியான 'Page Hits' அம்சத்தை, ஒரு எழுத்தாளரின் கோரிக்கைகாக பிரத்தியேகமாக code எழுதி சேர்த்தது.
'Page Hits' தெரிவதை மறைத்த போது, அது தங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக எழுத்தாளர்கள் பகிர்ந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மீண்டும் கொண்டு வந்தது.
அட்டவணைப்படி (on schedule) தொடர்ந்து கதை எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
அட்டவணைப்படி எழுத விருப்பமில்லை எனில் உங்களுக்கு பிடித்தது போலவும் எழுதலாம்.
தொடர்ந்து chillzeeயில் கதை எழுதுபவர்களை
- முன்னிலைப்படுத்தி (விருப்பம் இருந்தால்) அவர்களின் நேர்காணலை (interview) வெளியிடுகிறோம்
- விளம்பரப்படுத்தி போட்டிகள் (contests) நடத்திக் கொண்டிருக்கிறோம்.
Chillzee நட்சத்திரங்கள், Chillzee விருதுகள், என Chillzeeயில் பங்களிப்பவர்களுக்கான சிறப்பு கவுரவங்கள் வழங்கி சிறப்பித்தும் கொண்டிருக்கிறோம்.
வாசகர்களாக இருந்த அனுபவத்தில் உருவான சைட் என்பதால் நாங்கள் எந்த பதிப்பகத்தையோ, நிறுவனத்தையோ ஆதரித்தோ, விளம்பரப்படுத்தியோ கதைகளை வெளியிட்டதில்லை (அனைவருக்கும் அனுமதி இலவசம்).
ஆனாலும் எழுத்தாளர்களை ஊக்குவித்து ஊக்கத்தொகை வழங்கும் முறையில் அன்றும், இன்றும் முன்னோடியாக இருக்கிறோம்.
ரியாக்ஷன்ஸ், ரேட்டிங், கருத்துக்கள், app என காலத்திற்குரிய ட்ரெண்ட் படி அம்சங்களை சேர்த்திருக்கிறோம்
படிக்கும் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும் விதத்தில் தளத்தை வடிவமைத்து இருக்கிறோம்.
உங்களின் கதை அத்தியாயங்களை எங்களுக்கு அனுப்புவதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.
அத்தியாயங்கள் வெளியிடுவது, கதைக்கென்ற படங்கள் தேர்வு செய்வது, ஒருவேளை நீங்கள் படங்கள் தேர்வு செய்திருந்தால் அதை பதிவு செய்வது என அனைத்தையும் நாங்களே செய்து வருகிறோம்
இதை தவிர chillzee எழுத்தாளர்களின் சிறப்பு கோரிக்கைகளின் படி,
வாசகர்களுக்கான அவர்களின் மெசேஜை ஹைலைட் செய்து பதிவு செய்திருக்கிறோம்.
கருத்துக் கணிப்புகள் (polls) நடத்தி இருக்கிறோம்
வழக்கமான நேரம் அல்லாமல் அவர்கள் விரும்பும் பிரத்தியேக நேரத்தில் அத்தியாயங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.
பிறந்தநாள், பண்டிகை நாட்களுக்கு என அவர்களின் சிறப்பு அத்தியாயங்களை வெளியிட்டு இருக்கிறோம்.
விரைவில் வெளிவர இருக்கும் அத்தியாயங்களுக்கு சுவாரசியம் கொடுக்க சிறப்பு டீசர் (special teaser) வெளியிடுகிறோம்.
அத்தியாயம் வெளியான உடன் வாசகர்களுக்கு அறிவிக்க Chillzeeயின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் போஸ்ட் செய்கிறோம்.
Chillzeeயில் மூன்று விதமான தொடர்கதை வகைகள் உள்ளது:
- On Time முழு நாவல் - முழு விபரங்கள்
உங்கள் முழு நாவலை chillzeeயில் தொடர் கதையாக வெளியிட விரும்பினால் On schedule முழு நாவல் விபரங்கள் பக்கம் சென்று உங்கள் விபரங்களை பகிருங்கள்.
- Flexi - முழு விபரங்கள்
உங்கள் விருப்பப்படி கதையை பதிவு செய்ய, ஃப்ளக்ஸி கதைப் பிரிவில் உங்கள் கதையை பகிருங்கள். ஃப்ளக்ஸி முறையில் பதிவு செய்தால் உங்கள் பகிர்வுகளை நீங்களே பதிவு செய்யலாம், மாற்றங்கள் செய்யலாம், நீக்கவும் செய்யலாம். விபரங்களுக்கு ஃப்ளக்ஸி விபரங்கள் பக்கம் பாருங்கள்.
- On Time / Ad-Hoc -
புதிதாக நீங்கள் எழுதும் கதையை ஒவ்வொரு அத்தியாயமாக எழுது chillzeeயில் தொடர்கதையாக வெளியிட விரும்பினால், கீழிருக்கும் விபரங்களைப் படியுங்கள்.
On Time / Ad-Hoc:
Chillzeeயில் கதை எழுதுபவர்களுக்கு Chillzee ஐடி இருப்பது அவசியம்.
உங்களை பற்றிய அடிப்படை விபரங்களுடன் (basic details), உங்கள் chillzee ஐடி-யை எங்களுடன் பகிருங்கள்.
கூடவே, உங்கள் கதையிலிருந்து 5 – 10 பக்கங்கள் வருவது போல ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களை எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் பக்கங்களை வாசித்து விட்டு, எங்கள் டீம் உங்களை நேரடியாக தொடர்புக் கொள்வார்கள்.
நன்றி.
Chillzee.in இன் பொது விதிமுறைகளை படிக்கத் தவறாதீர்கள்.
Chillzee.in இணையதளத்தில் வெளியிடப்படும் கதைகளை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் Chillzee.in இணையத்தள நிர்வாகிகள் பெற்றுள்ளார்கள்.
உங்கள் சிறுகதை, கட்டுரை படைப்புகளை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் படைப்புகளை ஆய்வு செய்து விட்டு, எங்கள் டீம் உங்களுக்கு விபரங்களை அனுப்பி வைப்பார்கள்.
நன்றி.
Chillzee.in இன் பொது விதிமுறைகளை படிக்கத் தவறாதீர்கள்.
Chillzee.in இணையதளத்தில் வெளியிடப்படும் கதை, கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் Chillzee.in இணையத்தள நிர்வாகிகள் பெற்றுள்ளார்கள்.
மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்படும் கதை, கட்டுரைகளை 'காபி - பேஸ்ட்' செய்து தயவுசெய்து எங்களிடம் பகிராதீர்கள்.
ஒரு இணையத்தளத்தை நடத்தி அதை நிர்வாகம் செய்வதன் பின்னிருக்கும் கஷ்டங்கள், வலிகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே மற்ற சைட்டுகளின் கதை, கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு மேலும் பிரச்சனைகள் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
உங்கள் தனிப்பட்ட வலைப்பதிவு (personal blogs) உட்பட பிற வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட உங்களின் கதை, கட்டுரைகளை தயவுசெய்து எங்களிடம் பகிர வேண்டாம். அதே போல, உங்கள் சொந்த வலைப்பதிவுகள் (personal blogs) உள்ளிட்ட மற்ற தளங்களில் Chillzee யில் வெளியிடப்பட்ட உங்கள் படைப்புகளையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஜோக்ஸ் மற்றும் கவிதைகள் பகுதிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறோம்.
உங்கள் சொந்த கதை, கட்டுரையை எழுத பிற வலைத்தளத்தை அல்லது புத்தகத்தின் உள்ளடக்கத்தை படிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
chillzee.inல் பிரசூரிக்கப்படும் அனைத்து படைப்புகளுமே குடும்ப வாசகர்களை பொதுவாக மனதில் கொண்டே வெளியிடப் படுகின்றன. எனவே தவறான வார்த்தைகள், அருவருக்கத்தக்க காட்சிகள் என பகிருதல் கூடாது.
எந்தவொரு காரணத்திற்காகவும் chillzee.inல் பிரசூரிக்கப்பட்ட கதை / கவிதை / கட்டுரையை நீக்க இயலாது.
புதிய தொடர்கதைகள் தொடங்கும் போது ,சமீபக் கால பின்னூட்டங்களை கொண்டு, புதிதாக அறிமுகப் படுத்தி இருக்கும் 'flexi' வகையை தேர்வு செய்தால் இதிலிருந்து விலக்குப் பெறலாம். விபரங்களுக்கு ப்ளக்ஸி விபரங்கள் பக்கத்தைப் பாருங்கள்.
அத்தியாவசியம் இருக்கும் பட்சத்தில், எங்களின் புதிய Chillzee KiMo சேவையைப் பாருங்கள்.
chillzee.inல் பிரசூரிக்கப்பட்ட கதை / கவிதை / கட்டுரைகளின் பகுதிகள் ஆசிரியர் பெயருடன் தேவைப்பட்டால் விளம்பரங்களில் பயன்படுத்தப்படலாம்.
Chillzee.inல் பிரசூரிக்க உங்கள் படைப்புகளை அனுப்பும் முன், அவற்றுக்கான back-up எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அதை மீட்டெடுத்து கொடுப்பது என்பது கடினமான ஒன்று.
Chillzee.inன் பொது விதிமுறைகளை (General Terms) மீறுகின்ற உள்ளடக்கத்தின் பகுதியை திருத்தவோ அல்லது அகற்றுவோ அனைத்து உரிமைகளையும் Chillzee.in பெற்றுள்ளது.
Chillzee.in இணையதளத்தின் பொது விதிமுறைகளில் மாற்றம் செய்தால், அந்த மாற்றங்கள் இந்த பக்கத்தில் வெளியிடப்படும். எனவே அவ்வப்போது இந்த பக்கத்தை பார்க்கவும்.
[If we decide to change our General Terms, we will post those changes on this page. It is strongly recommended to check this page often.]
உங்களுக்கு மேலும் தகவல்கள் தேவை என்றால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.
எங்கள் டீம் உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.
* Last updated on 8th Jan 2020
மேலும் விபரங்கள் தேவை என்றால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சலுக்கு உங்களின் கேள்விகளை அனுப்பி வையுங்கள்.
Kindly please note that during this tough pandemic period all responses will be delayed.