Chillzee WhatsApp Specials - மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பூனை!!!
இந்த கதை விடாமுயற்சியின் சக்திக்கு ஒரு சான்று 🙂 🙂 🙂
வேலைவாய்ப்பு குறைந்து வரும் இந்த நாட்களில், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் பூனை ஒன்று மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளது.
எல்வுட் என்று அழைக்கப் படும் பூனை ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் செக்யூரிட்டி டீமில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ள ஒரு வருடமாக அவர்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
அந்த மருத்துவமனை இருக்கும் அதே தெருவில் வசிக்கும் இந்த பூனை, மருத்துவமனை வெளியே நின்று காவல் காக்கும். கூடவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் முதலியவர்களை வாழ்த்தி வரவேற்கவும் செய்யும்!
எல்வுட்டின் கடின உழைப்பை அங்கீகரித்து ஆஸ்திரேலியாவின் ரிச்மன்ட், மெல்போர்னில் உள்ள எப்வொர்த் மருத்துவமனையின் செக்யூரிட்டி டீம் அதையும் தங்களில் ஒருவராக வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இப்போது எல்வுட் அங்கே பாதுகாப்பு காவலராக பணிபுரிகிறது. அதற்கு வேலை மட்டுமல்லாமல் ஐடி கார்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எப்வொர்த் மருத்துவமனையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது 🙂 🙂 🙂
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867