(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

11/4 கப் அரிசி

1/2 கப் பாசிப்பருப்பு

1 ஸ்பூன் ஜீரகம்

1 ஸ்பூன் மிளகு

5 கப் தண்ணீர்

2 டேபிள்ஸ்பூன் நெய்

உப்பு

 

பேஸ்ட் தயாரிக்க

1 கப் புதினா இலை

1/4 கப் கொத்தமல்லி இலை

1 பச்சை மிளகாய்

1 இன்ச் இஞ்சி

 

வதக்க

நெய்

சீரகம்

 மிளகு

மிளகாய்

முந்திரி

கறிவேப்பிலை

 

செய்முறை

ரிசி மற்றும் பாசிப் பருப்பை ஊற வைக்கவும்.

 

மிக்சியைப் பயன்படுத்தி புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை ஒரு பேஸ்ட்டாக அரைத்துக் தனியாக வைக்கவும்.

 

பிரஷர் குக்கரில் நெய்யை சூடாக்கி, சீரகம், மிளகு சேர்த்து வெடிக்க விடவும்.

  

இப்போது ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

  

பின், புதினா - கொத்தமல்லி விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

   

5 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வர விட்டு அடுப்பில் இருந்து நீக்கவும்.

  

ஒரு சிறிய வாணலியில் நெய்யை சூடாக்கி சீரகம், மிளகு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  

முந்திரி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

   

ப்ரெஷர் குக்கரில் ப்ரெஷர் வெளியானதும், மூடியைத் திறந்து பொங்கல் கலவையை கரண்டி கொண்டு கடைவதுப் போல கலக்கவும்.

  

பிறகு, அதன் மேல் சிறிய வாணலியில் வதக்கி வைத்திருக்கும் நெய் – முந்திரி கலவையை சேர்த்து பரிமாறவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.