(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - புதிய வகை இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

½ கிலோ இறால்

1 கப் தண்ணீர்

2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்

1⁄2 டீஸ்பூன் சீரகம்

1⁄8 டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மிளகு

2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 அங்குல இஞ்சி

2 பச்சை மிளகாய்

1 பெரிய வெங்காயம், நறுக்கியது (1 கப்)

1 பெரிய தக்காளி (1 கப்)

தேவைக்கு உப்பு

1 டீஸ்பூன் எண்ணெய்

1⁄2 டீஸ்பூன் சோம்பு

கறிவேப்பிலை சிறிது

 

செய்முறை

றாலை நன்கு கழுவி தனியே வைக்கவும்.

  

தேங்காய், சீரகம், மஞ்சள் தூள், மிளகு, மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து தனியே வைக்கவும்.

 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

 

பின் அரைத்த மசாலா, துருவிய இஞ்சியை சேர்க்கவும்.

 

நன்றாக கலந்து, பின் இறாலைச் சேர்த்து, 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும்.

 

ஒரு சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு சேர்த்து அது சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

 

இறால் நன்கு வெந்த உடன், வதக்கியவற்றை குழம்பில் ஊற்றவும்.

 

உப்பு சரிப் பார்த்து அடுப்பில் இருந்து அகற்றவும்.

 

சூடான சுவையான இறால் குழம்பு தயார். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.