(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி - தங்கமணி

தேவையான பொருட்கள்:-

  1. வெண்டைக்காய்---10 எண்ணிக்கை.
  2. புளி--எலுமிச்சை அளவு.
  3. பச்சை மிளகாய்---2 எண்ணிக்கை.
  4. வெல்லம்..சிறிதளவு.
  5. உப்பு...கால் ஸ்பூன்.
  6. உளுத்தம் பருப்பு...ஒரு ஸ்பூன்..
  7. கடுகு---ஒரு ஸ்பூன்.

 

செய் முறை:-

  1. வெண்டைக் காய்களை காரப் பொரியல் செய்வதற்கு நறுக்கும் சைஸ்சில் பாதியளவு சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயை லேசாகக் கீறிக்கொள்ளவும்.புளியை 250 மி.தண்ணீரில் ஊறப் போடவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை விட்டு கடுகைப் போடவும்.
  3. கடுகு வெடித்ததும் உ.பருப்பைப்போட்டு அது சிவந்ததும் வெண்டைக்காய் மற்றும் ப.மிளகாய்யைப் போட்டு லேசாக வதக்கவும்.கொஞ்சம் வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும். (மேலும் ரொம்பவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
  4. பின்னர் தேவையான அளவு திதிப்பாய் இருக்கும் அளவுக்கு வெல்லம் போடவும்.
  5. ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். கொதிக்க விடவும்.
  6. தளதளவென்று சுண்ட ஆரம்பிக்கும். பச்சடி அளவுக்குக் கெட்டியானவுடன் கீழே இறக்கிவிடவும்.
  7. நீர்க்க இருப்பதாகத் தோன்றினால் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு இரண்டு ஸ்பூன் கொஞ்சமாய்த் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும்.

இந்த திதிப்பு,புளிப்பு, உப்பு, உறைப்பு அனைத்தும் கலந்த பச்சடி சுண்டை வற்றல் காரக்குழம்பு,முக்கியமாய் காய்ந்த வேப்பம்பூ சுணட்க்(கார)குழம்பு சாதத்திற்கு மிக

பொருத்தமாக இருக்கும்.பிடிச்சா செஞ்சு பாருங்க...திட்டாதிங்க..ப்ளீஸ்..k..?

இது போலவே முளைகீரையிலும் பச்சடி செய்யலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.