(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 01. 30 நிமிட காய்கறி குருமா - நந்தினி

 Quick Kurma

சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.

தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன smile

தேவையான பொருட்கள்

சிறிதாக நறுக்கப் பட்ட காய்கறிகள் - 1.5 கப்

வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 5 பல்

(அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்)

தக்காளி - 2

துருவிய தேங்காய் - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 

சோம்பு - 1 ஸ்பூன்

கசகசா - 1 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

முந்திரி - 5 - 10

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

 

செய்முறை

  1. காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தை சிறிது வதக்கி ஆற வைக்கவும்.
  3. பின், வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி நான்கையும் சேர்த்து மிக்சியில் மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி ஆகியவற்றை தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
  5. கடாயை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் சேர்க்கவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் - தக்காளி கலவையை சேர்க்கவும்.
  7. இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, தூள்கள் (மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்) சேர்க்கவும்.
  8. பின் வேக வைத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்கவும்.
  9. நன்றாக கிளறி விட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவை, 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  10. நன்றாக கொதிக்க விட்டு, எண்ணெய் பிரிந்து வந்த உடன் (7 - 10 நிமிடங்கள்) கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  11. சூடான சுவையான வெஜிடபிள் குருமா தயார்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.