(Reading time: 2 - 3 minutes)

01. தினம் ஒரு (சிச்சுவேஷன்) பாடல் - நெல்லாடிய நிலம்மெங்கே

 

Inability

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சினிமா நம் வாழ்வில் முக்கியமான அங்கம் வகிக்கிறது.

ஒவ்வொரு நாளும் என் மனநிலைக்கு ஏற்ப தோன்றும் ஒரு பாடலை இங்கே பதிய போகிறேன்.

 

ன்றைய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நெல்லாடிய நிலமெங்கே’ பாடல்.

 

ஒரு உயர்ந்த ராஜக் குலத்தில் பிறந்திருந்தாலும், அதன் சிறப்புகளை கண்ணாலும் காண இயலாமல் தவிக்கும் மன்னனின் இயலாமையை அருமையாக சொல்லும் பாடல்!

 

பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் இன்றைய மனநிலைக்கேற்ற situation song என்று கூட சொல்ல தோன்றுகிறது!

 

My mood today - 😟 [ Frustrated, angry, worried and inability to do something]

 

 

Watch it in You Tube:

 

Lyrics:

நெல்லாடிய நிலம் எங்கே

சொல் ஆடிய அவை எங்கே

வில் ஆடிய களம் எங்கே

கல் ஆடிய சிலை எங்கே

தாய்த்தின்ற மண்ணே, தாய்த்தின்ற மண்ணே

 

கயல் விளையாடும் வயல் வெளித்தேடி

காய்ந்துக் கழிந்தனக் கண்கள்

காவிரி மலரின் கடிமணம் தேடி

கருகி முடிந்தது நாசி

சிலை வடிமேவும் உளி ஒலி தேடி

திருகி விழுந்தன செவிகள்

ஊன் பொதி சோற்றில் தேன்சுவைக் கருதி

ஒட்டி உலர்ந்தது நாவும்

புலி கொடிப்பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக்கறிப் கொறிப்பதுவோ......

காற்றைக் குடிக்கும் பாமரமாகி

காலம் கழிப்பதுவோ

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ

 

{kunena_discuss:1203}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.