பிரபலங்கள் ரவுன்ட்-அப்
சாயப் அலி கான் – கரீனா

பாலிவுடில் மிக பிரபலமான இந்த ஜோடி, தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கரீனா கர்ப்பமாக இருப்பதை அவரின் கணவர் சாயப் நேற்று உறுதி படுத்தினார்.
நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள்!
வாடகை தாய் சீசன்!

பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை. ஆனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியதால் வாடகை தாய் கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகி இருக்கிறார்.
அமீர் கான், ஷாருக் கான், சோஹைல் கான் போன்றவர்கள் ஏற்கனவே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது குறிபிடத்தக்கது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகர்.

சமீபத்தில் நடத்த இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் அவரின் இரண்டு மகன்களுடன் அதே விமான நிலையத்தில் கனக்டிங் ப்ளைட்டை தவற விட்டு மாட்டிக் கொண்டிருந்தார்.
அதிர்ஷ்டவசமாக எகானமி வகுப்பிற்கு கிடைத்த டிக்கட்டை ஏற்றுக் கொண்டு கிளம்பியதால், அந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு முன்பே அங்கிருந்து தப்பி விட்டார்.
ஷரபோவா!!!

பிரபலமான இந்த டென்னிஸ் விராங்கனையை அவரின் விளையாடிற்காகவும் தோற்றதிற்காகவும் பலருக்கும் தெரியும்.
சமீபத்தில் தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்துக் கொண்டதற்காக டென்னிஸ் விளையாட தடை செய்யப்பட்ட ஷரபோவா, இந்த தடையினால் டென்னிசை மட்டுமல்லாமல் மில்லியன் கணக்கில் ஸ்பான்சர்ஷிப்பையும் இழந்தார்.
ஆனால் அதற்காக அவர் வீட்டினுள் அடைந்து அழ எல்லாம் இல்லை!
உலக பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பலகலைக் கழகத்தில் படிக்க சேர்ந்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக மிக கடினம். விண்ணப்பிப்பவர்களில் 10 – 11%க்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷரபோவாவிடம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ளவும் விஷயங்கள் இருக்கின்றன!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.