(Reading time: 2 - 4 minutes)

தமிழ் திரைப்படக் கதை – நுண்ணுணர்வு (Romantic thriller)

பிரிவு - காதல் கலந்த த்ரில்லர்

உகந்த பார்வையாளர்கள் - பெரியவர்களுக்கு மட்டும்

Nun Unarvu

Nunnunarvu

 

ஸ்த்ரேலியாவில் வசிக்கும் சாரு, தன் தந்தையின் புத்தகதிற்காக சிட்னி அருகே இருக்கும் வேறு ஊருக்கு செல்கிறார். அங்கே டெலிபதி எனப்படும் நுண்ணுணர்வு பற்றிய ஆய்வை தொடங்குகிறார்.

டெலிபதியின் மூலம் மனம் + மூளையின் உதவியுடன், தொலைவில் இருப்பவருடன் ஏதேனும் விதத்தில் தொடர்புக் கொள்ள முடியும் என நம்புகிறார் சாரு.

ந்நேரத்தில் சென்னையில் இருந்து சிட்னிக்கு பல் மருத்துவராக பணி செய்ய வருகிறார் சந்துரு. சிட்னியில் வசிக்கும் வினேஷுடன் தங்குகிறார்.

திடீரென சாரு மற்றும் சந்துருவிற்கு புது விதமான அனுபவம் தோன்றுகிறது. குழம்பி தவிப்பவர்கள், அவர்கள் இருவரின் 'மைண்டும்' டெலிபதியால் இணைந்திருப்பதை புரிந்துக் கொள்கிறார்கள்.

டெலிபதி மூலம் பேச தொடங்குபவர்களின் இடையே மெல்ல நட்பு பூக்கிறது. அந்த நட்பு மெல்ல காதலாக மாறுகிறது.

சாரு தனிமையில் பேசுவதையும், அவ்வப்போது தலைவலிப்பதாக சொல்வதையும் பார்த்து கவலை படும் சாருவின் தந்தை, சாருவிற்கு மனவியாதி ஏதேனும் வந்திருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். சாரு எத்தனை எடுத்து சொன்னாலும் நம்ப மறுக்கிறார் அவர்.

தனிடையே சந்துருவின் ரூம்மேட் வினேஷ் தன்னுடைய பெண் மோகத்தால் ஒரு பெண்ணை கொலை செய்கிறான். இது சந்துருவிற்கும் தெரிய வருகிறது.

தான் கொலை செய்ததை தெரிந்துக் கொண்டிருக்கும் சந்துரு உயிருடன் இருந்தால் ஆபத்து என நினைக்கும் வினேஷ், சந்துருவை காட்டிற்கு கடத்தி சென்று கொலை செய்ய முயற்சிக்கிறான்.

அதே நேரத்தில் சாருவின் தந்தையை தாக்கி விட்டு சாருவை மயக்க மருந்து கொடுத்து கடத்தி செல்கிறான் பிரஷாந்த்.

மயக்கத்தில் இருந்து தெளிந்த உடன், வினேஷிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் சந்துருவை டெலிபதி மூலம் தொடர்பு கொள்கிறாள் சாரு.

வினேஷ் மற்றும் பிரஷாந்த் நண்பர்கள் என்பதை அறிந்துக் கொள்ளும் சந்துரு, இரண்டு வில்லன்களையும் அடித்து விட்டு, சாருவை காப்பாற்றுகிறார்.

வித்தியாசமான படம்! சிறிய படமும் கூட (ஒன்றரை மணி நேர படம்!). டெலிபதி மூலம் தொலைவில் இருக்கும் ஒருவரை ஸ்டார் வார்ஸ் ரேஞ்சிற்கு பார்க்க முடியும் என்று சொல்லி இருப்பது ஆச்சர்ய பட வைக்கிறது. வித்தியாசமான கதைக்காகவும், ஆஸ்ட்ரேலியாவின் இயற்கை எழிலிற்காகவும் பார்க்கலாம்.

{kunena_discuss:943}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.