(Reading time: 4 - 7 minutes)

பாகுபலியில் பெண்களும்... சில முரண்பாடுகளும்! - நந்தினி

பாகுபலி இரண்டாம் பாகம் பார்த்ததில் இருந்து அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் முரண்பாடுகளை பற்றியே என்னையும் அறியாமல் மனம் அசைப் போட்டுக் கொண்டிருந்தது.

யாரைக் கேட்டாலும் படம் நன்றாக இருக்கிறது, பிடித்திருக்கிறது என்று சொன்னார்களே தவிர என் மனதில் வந்த கேள்வி யாருக்கும் வந்ததாக தெரியவில்லை.

தேவை இல்லாமல் யோசிக்குறோமோ? பெண்ணிய கொள்கைகளில் ஈடுபாடு வந்து விட்டதோ போன்ற கேள்விகளுடனே படத்திற்கான செய்திதாள்கள் விமர்சனங்களை படித்தால் ஒரே ஒருவர் என் மனதில் வந்திருந்த கேள்வியையும் கேட்டு என் மனதிற்கு கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்தார்.

The female characters, however, continue to disappoint as like princess Avanthika (Tamannah Bhatia) in the first part. Devasena too starts off as an ace warrior only to be tamed into someone who has to be protected. 

- Dipanjan Sinha - Hindustan Times

ந்த திரைப்படத்தின் மையமாக இருப்பது பாகுபலியாக வரும் பிரபாஸும் வில்லன் ரானாவும் என்றாலும் சிவகாமியாக வரும் ரம்யா கிருஷ்ணன் தொடங்கி சத்யராஜ், நாசர் என அனைவருமே கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

இதில் சிவகாமி பாத்திரம் தனியாக மற்ற துணை பாத்திரங்களை விட பெரிதாக தெரிவதற்கு முக்கிய காரணம் அந்த பாத்திரத்தின் கம்பீரம்!

Sivagami

‘இதுவே என் கட்டளை! என் கட்டளையே சாசனம்..!’ 

என சொல்லும் குரலில் ஓங்கி ஒலிக்கும் அதிகாரம்!

தன் கணவனுக்கு சொந்தமான சிம்மாசனம் கிடைக்காமல் போய் விட்டது என்ற வருத்தமில்லாமல் நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வேன் என்று கணவனையும் தாண்டி சிந்தித்து நாட்டிற்காக செயல் படும் சிவகாமி உண்மையிலேயே ராஜமாதா தான்!

னால் என் கண்களுக்கு முரண் பட்டு தெரிந்த ஒரு பாத்திரம் தேவசேனா பாத்திரம்!

பாகுபலியின் மனைவியாகும் தேவசேனா, ஒரு நாட்டின் இளவரசி... அதுவும் வாள் வீச்சு, வில் வித்தை என அனைத்தும் பழகிய வீர மங்கை.

devasena

‘உங்களுடைய பணிப்பெண்ணாக வாழ் நாள் முழுவதும் வர கூட தயாராக இருக்கிறேன்... ஆனால் என் சுய மரியாதையை விட்டுக் கொடுத்து கைதியாக வர மாட்டேன்...’ 

என்று நேராக சொல்லும் நெஞ்சுரம் பெற்ற மறம் நிறைந்த மங்கை!

இதே தேவசேனா தன் கணவன் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு 25 வருடங்கள் மற்றவர்கள அனைவரும் இறந்து விட்டதாக நினைக்கும் மகன் தன்னை காப்பாற்ற வருவான் என காத்திருக்கிறாள்!

அதுவும் பொது மக்கள் பார்க்கும் வண்ணம் பொது இடத்தில சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காத்திருக்கிறாள்...!

devasena

ன் மகன் உயிருடன் இருக்கிறான் என ஒரு தாய் உணர்வதை, நம்புவதை தவறு சொல்லவில்லை...

ஆனால் அவன் வந்து காப்பாற்றட்டும் என்று 25 ஆண்டுகள் அப்படியே காத்திருப்பது சரியா?

அதுவும் தேவசேனா போன்ற ஒரு வீர மங்கை செய்ய வேண்டிய செயல் தானா அது?

அதை தாண்டி அவளால் எதுவுமே செய்திருக்க இயலாதா???

என் கணவனை கொன்ற உன்னை கொல்வேன் என்று சொல்லாமல் என் மகன் கொல்வான் என்று காத்திருப்பது கதாநாயகன் ஹீயோயிசம் காட்டுவதற்கு அமைத்துக் கொடுக்கும் மேடையாகவே தெரிகிறது!

ஹீரோயிசம் ஒன்றை தான் நாம் ஏற்றுக் கொள்வோமா???

ஹீரோயினிசம் இருக்க கூடாதா???

தற்கான பதிலும் இந்த படத்திலேயே இருக்கிறது!

Sivagami

கை குழந்தையோடு தப்பி செல்லும் சிவகாமி தன் மீது வில் பாய்ந்த பின்பும் மன உறுதியுடன் அந்த குழந்தையை காப்பாற்றுவது ஹீரோயினிசம் தானே!!!

[இங்கேயும் சின்ன கேள்வி இருக்கிறது! அம்மாவை பின் தொடர்ந்து சென்ற வீரர்கள் திரும்பவில்லை... ஆற்றோரம் இறந்துக் கிடக்கிறார்கள் எனும் போது குழந்தையும் ராஜ மாதாவும் தப்பி இருக்க கூடுமோ என பல்லாளத்தேவனுக்கு சந்தேகமே வராமல் போனது, ஏன்?]

சிவகாமி செய்த அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் கூட ஏன் தேவசேனா முயற்சி செய்யவில்லை???

எனக்கு புரியாத புதிர் தான்!

னால் படம் ரசிக்கும் விதத்தில் பிரமாண்டமாக, ஜனரஞ்சகமாக இருந்தது என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்!

மனதில் எழுந்த கேள்வியை என்ன செய்வது? Chillzeeயில் கட்டுரையாக எழுதியாகி விட்டது, இனி மனதிற்கு அமைதி வந்து விடும் cool

{kunena_discuss:943}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.