(Reading time: 6 - 12 minutes)

உங்கள் கணவர் சந்தோஷமாக இருக்கிறாரா என தெரிந்துக் கொள்ள சில டிப்ஸ்!

Happy Husband

திருமண பந்தம் என்பது பல பல வருடங்கள் தொடர்ந்து வரும் சொந்தம்...

திருமண வாழ்வில் சந்தோஷம் என்பது எளிதான ஒன்றல்ல. சில பல விஷயங்களில் விட்டுக் கொடுத்தும், நம்மை நாமே மாற்றிக் கொண்டும் தான் அதை அடைய முடியும்.

ஆனால், நம் சந்தோஷத்தை பற்றி எவ்வளவு யோசிக்கிறோமோ அதே அளவு நம் கணவரை பற்றியும் யோசித்து, அவரும் சந்தோஷமாக இருக்கிறாரா என்று தெரிந்துக் கொள்வதும் கூட இந்த வாழ்நாளுக்கான பந்தத்தில் அவசியம் தான்.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து நடந்துக் கொண்டாலே வாழ்வில் சந்தோஷத்திற்கு குறைவில்லை....

ங்கள் கணவர் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை வெளிபடுத்தும் சில அறிகுறிகள் இங்கே தொகுத்தளிக்க பட்டுள்ளது... கூடுதலாக அங்காங்கே அதை நீங்கள் எப்படி செய்யலாம் என்ற டிப்ஸும் இருக்கிறது....

1. உங்களிடம் மனம் விட்டு பேசுவது அவருக்கு எளிதாக இருக்கிறது....

இது அவருக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. smile நம்பிக்கை இல்லாமல் சந்தோஷம் ஏது?

ஒருவர் மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள்ளும் போது, அவரை விமர்சிப்பது போன்ற relationship breaker வேறில்லை. அது போன்ற தவறை எப்போதும் செய்யாதீர்கள்.

2. பழைய மனஸ்தாபங்கள், விவாதங்கள், கோபங்கள் இதை எல்லாம் நீங்கள் மனதினுள் வைத்து பேசுவதில்லை என்பது அவருக்கு தெரியும். 

இது அவர் உங்களை புரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது.smile

காதல் / அன்பு இருந்தால் மட்டுமே இதுபோல grudges இல்லாமல் இருக்க முடியும். அவர் சந்தோஷமாக இருப்பதாலேயே தான் இந்த அளவிற்கு minuteஆக உங்களை புரிந்து வைத்திருக்கிறார்.

பொதுவாக, சின்ன சச்சரவுகள் ஏற்படும் போது, ‘இந்த கல்யாணத்தினால் என் வாழ்க்கையே பாழாகி போச்சு’ என புலம்பும் பெண்கள் இருக்கிறார்கள். இது உங்கள் கணவரிடம் (அவர் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும்) என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என் எண்ணி பாருங்கள். இது போல் புலம்புவதும், பழைய சண்டைகள், பிரச்சனைகளை நினைவில் வைத்து பேசுவதும் நல்லதில்லை!

3. உங்களுக்கு உங்கள் கணவர் ‘மிகவும்’ முக்கியமானவர் என்பது அவருக்கு தெரியும்...

அவருக்கு ஒரு தேவை என்றால் நீங்கள் அவருடன் இருப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது.... smile

இந்த நம்பிக்கை சந்தோஷம் அல்லாமல் வேறு என்ன?

4. உங்களுக்கு அவர் தேவையானவர்.... ஆனால் அதற்காக நீங்கள் அவரை சார்ந்தவராகவே இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணாமல் இருப்பவர்... 

சந்தோஷமாக இருப்பவர் அடக்கி ஆள நினைக்க மாட்டார்.smile இது அவர் உங்களுக்கு கொடுக்கும் மதிப்பை காட்டுகிறது.

5. அவர் மீது நீங்கள் கோபப்படும் போது அது அவரை அவமானப்படுத்தும் செயலாக அவர் நினைப்பதில்லை. smile

புரிந்துக் கொண்ட மனங்கள் இருந்தாலும் ஊடல் வருவது இயற்கை. எனவே உங்களின் கோபதாபங்களை அவர் பெரிது படுத்துவதில்லை!

குடும்ப வாழ்வில் சந்தோஷமான மனநிலையில் இல்லாத கணவரால் இது போல் நடந்து கொள்ள முடியாது.

நீங்கள் கோபமாக இருக்கும் போது என்ன பேசுகிறோம் என்று உணர்ந்து பேசுவது முக்கியம். தேவை இல்லாமல், கிடைத்தது வாய்ப்பு என உங்கள் கணவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது சரியில்லை. மாறாக உங்களின் கோபத்திற்கான காரணத்தை புரிய வையுங்கள். அதை நீங்கள் கோபமாக சொன்னாலும் சரி தான்! laughing

6. நீங்கள் அவரின் குடும்பத்தினரிடம் அன்புடனும், பாசத்துடனும் நடந்துக் கொள்கிறீர்கள் என்பது அவருக்கும் தெரியும்... smile

உங்களின் இந்த extra effort கூட அவரின் கவனத்திற்கு செல்கிறது என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

என் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்துக் கொள்வது உன் கடமை என்று எண்ணாமல், அவரின் குடும்பத்தினருடன் சுமுகமாக பழக நீங்கள் செய்யும் சின்ன பெரிய விட்டுக் கொடுத்தல்கள் அவரின் கவனத்தை எட்டுகிறது என்றால் அவரின் சந்தோஷ மனநிலையை பற்றி சொல்லவும் வேண்டுமா?

நம் பெற்றோர், உடன்பிறந்தோரை நாம் தேர்வு செய்ய முடியாது. இது உங்கள் கணவர் விஷயத்திலும் உண்மை தான். எனவே உண்மையாகவே அவரின் குடும்பத்தினரையும் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மீது உங்கள் கணவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்துவதோடு, அவரின் மனதினுள் உங்கள் மீது அன்பு பெருகவும் காரணமாக இருக்கிறது.

7. உங்களால் மதிக்கப் படுபவராகவும், மெச்ச படுபவராகவும் அவர் உணர்கிறார். smile

சந்தோஷமான வாழ்விற்கு மதிப்பும் அவசியம். மரியாதை என்பது நீங்கள் அவரை அழைக்கும் விதத்தில் இல்லை. 'டா' போட்டு பேசினாலும், அவர் மீது நீங்கள் மனதில் வைத்திருக்கும் மதிப்பை அவர் உணர்ந்தாலே சந்தோஷம் பொங்கும்...!

மதிப்பு இல்லாத இடத்தில அன்பு இருப்பது இல்லை! நாம் விரும்புபவர் நம்மை போற்றுகிறார் என்பதே சுய மரியாதையை பன் மடங்கு பெருக செய்ய கூடிய ‘பூஸ்ட்’ ஆகும். இந்த respect & admiration போல கணவன் மனைவிக்குள் ஒட்டுதல் ஏற்படுத்தும் விஷயங்கள் வேறு இல்லை!!!

8. நீங்கள் அவரை ‘ஏனோ தானோ’ என்று நினைக்காமல் உயர்வான இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பது அவருக்கும் தெரியும்... smile

என் மனைவி என்னை மதிப்பதே இல்லை என்று ஆண்கள் புலம்புவது, அவர்கள் திருமண வாழ்வில் முழு சந்தோஷமாக இல்லை என காட்டும் அறிகுறி. அதற்கு இடம் கொடுக்காமல் உங்களிடம் அன்பாக இருக்கும் கணவனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புகழுங்கள்.... பாராட்டுங்கள்....!

ஆண்களுக்கும் தன்னை பாராட்டும் மனைவியை பிடிக்கும்! மனைவி தன்னை பாராட்டும் போது தான் தங்கள் திருமண வாழ்வு சந்தோஷமானதாக இருப்பதாக பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள்!

9. அவர் உங்களை எந்த அளவிற்கு விரும்புகிறாரோ அதே அளவிற்கு (இல்லை அதை விட மேல்) நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பது அவருக்கு தெரியும். smile

Give & Take என்பது உறவுகளில் மிகவும் முக்கியம். என் மனைவி என்னை மிகவும் நேசிக்கிறாள் என அவர் நினைப்பதே மகிழ்ச்சியின் வெளிபாடு தான்.

அன்பை வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிக் காட்டாமல் மறைத்து வைப்பதை போன்ற முட்டாள் தனம் எதுவுமில்லை! நாளை என்பது நிரந்தரமில்லை. உங்கள் கணவரிடம் உங்கள் மனதில் இருக்கும் அன்பை இன்றே உங்கள் செயல்களால், வார்த்தைகளால் காட்டுங்கள்! உங்கள் அன்பு மழையில் அவரை நனைய வைத்தால் அப்புறம் அவர் சந்தோஷ சாரல் இல்லாமல் இருப்பாரா என்ன!

10. உங்களுடன் இருப்பதை பெருமையாக உணர்பவர்.... smile

மனதில் சந்தோஷம் இல்லாமல் இதெல்லாம் நடக்க கூடியதா! திருமணமான புதிதில் கணவரிடம் இருக்கும் இந்த ஆர்வத்தை அதே அளவில் maintain செய்வது உங்களின் திறமை smile

எங்கே இருந்தாலும், உங்களின் கவனம் அவ்வப்போது உங்களின் கணவர் பக்கம் சென்றால், அதை ரசிக்காத கணவரே இல்லை என்று சொல்லலாம்.... நம்பவில்லை என்றால், அடுத்த முறை திருமணதிற்க்கோ வேறு விசேஷங்களுக்கோ செல்லும் போது, உங்கள் தோழி, உறவினருடன் இருந்தாலும், அவ்வப்போது உங்கள் கணவரையும் பார்த்து சின்ன புன்னகை பரிமாறி பாருங்கள்....!

11. அவரை அவராகவே ஏற்றுக் கொள்வீர்கள் என்று அவருக்கு தெரியும்...!

பொய் என்பது இருவருக்கும் இடையே இருக்கும் நம்பிக்கை இன்மையை காட்டுகிறது. உங்கள் கணவர் தன்னிடம் இருக்கும் குறைகளை உங்களிடம் மறைக்காமல் இருக்கிறார் என்றால், உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையும், அன்பும் வைதிருக்கிறார் என்று அர்த்தம்.

[ ஆனால் அதற்காக அவரின் தவறான நடத்தைகளை பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதும் அவருக்கு தெரியும்! smile ]

12. சினிமா நடிகை போல முழு மேக்கப்புடன் எப்போதும் நீங்கள் தோற்றமளிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணம் இல்லாதவர் என்றாலும், நீங்கள் சிரத்தை எடுத்து உங்களை அழகு படுத்திக் கொண்டால் அதையும் ரசிக்க தெரிந்தவர்.... smile

உலகிலேயே என் மனைவி தான் அழகி என கணவன் நினைக்க முதலில் உளமார்ந்த அன்பு வேண்டும். அவர் உங்கள் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருந்தால் அப்புறம் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்?

ங்கள் கணவரை கவனியுங்கள்... சந்தோஷமாக வாழுங்கள்... smile

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.