(Reading time: 2 - 3 minutes)

குடும்பம் - பெண்களும் நகைச்சுவை உணர்வும்

humor sense

கைச்சுவை உணர்வு என்பது மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் வர பிரசாதம்!

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர்கள் என்பதால் மன அழுத்தம் அவர்களின் அருகேயும் செல்லாது!

அதேப் போல பிரச்சனை என்று வந்தாலும் உட்கார்ந்து புலம்பாமல் அதை தீர்க்கும் வழியை ஆராய்ந்துக் கண்டுபிடிக்கும் சாமர்த்தியசாலிகள்.

 

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களின் நட்பு வட்டம் பெரிதாக இருக்கும்...

மற்றவர்கள் அவர்களிடம் வெகு இயல்பாக பேச முடியும்...

தனிமை எனும் சூழலே அவர்களை அண்டாது!

 

நிபுணர்களின் ஆய்வு படி, பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம்.

எனவே பெண்கள் இதை மேம்படுத்தி எதையும் புன்னகையுடன் அணுகினால் அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களை சுற்றி இருக்கும் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்.

 

எனவே புன்னகையுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்களின் நகைச்சுவை உணர்வை வெளிபடுத்தி மற்றவரையும் புன்னகைக்க செய்யுங்கள்!

 

மகிழ்ச்சியுடன் வாழுங்கள்..!

 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.