(Reading time: 2 - 3 minutes)
A child's cognitive abilities are linked to breast feeding
A child's cognitive abilities are linked to breast feeding

குழந்தையின் அறிவாற்றல் திறன்களுக்கும் தாய்ப்பாலுக்கும் தொடர்பிருக்கிறதாம்!

 

ரு புதிய ஆய்வின்படி, தாய்ப்பால் கொடுக்கும் காலமும், 5 முதல் 14 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் அறிவாற்றலும் இணைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது!

   

இதற்கு முன் நடத்தப் பட்ட பல ஆய்வுகள் தாய்ப்பால் மற்றும் குழந்தைகளின் நுண்ணறிவுக்கு (intelligence) இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளன. இருப்பினும், இந்த தொடர்புக்கான காரணம் என்ன என்பது இன்னமும் விவாத அளவில் மட்டுமே இருக்கிறது.

   

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த புது ஆய்வு, தாய்ப்பாலூட்டுதல் மற்றும் அறிவாற்றல் இரண்டுக்கும் இடையேயான தொடர்பை கண்டுபிடிக்க என்று குறிப்பாக வடிவமைக்கப்படவில்லை.

  

ஆயினும், முறையே 14 மற்றும் 11 வயது வரையிலான அனைத்து வயதினரிடமும் உள்ள அதிக வாய்மொழி மற்றும் இடஞ்சார்ந்த அறிவாற்றலுக்கும் (verbal and spatial cognitive) நீண்ட தாய்ப்பால் காலத்திற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.