(Reading time: 2 - 4 minutes)
Top 3 Most Expensive Pets in the World
Top 3 Most Expensive Pets in the World

உலகின் மிக விலையுயர்ந்த டாப் 3 வளர்ப்பு பிராணிகள்

 

செல்லப் பிராணிகளை பலரும் விலங்காக பார்க்காமல் சொந்தக் குழந்தைகள் போல தான் பார்க்கிறார்கள்.

 

சிலர் அதையும் தாண்டி கூட போகிறார்கள். அப்படி விலை அதிகமாக கொடுத்து வாங்கப்பட்ட டாப் 3 வளர்ப்பு பிராணிகளின் பட்டியல் இதோ:

  

#1.கிரீன் மங்கி - த்ரோப்ரெட் பந்தயக் குதிரை - 128 கோடி

உலகின் மிகவும் விலையுயர்ந்த செல்லப் பிராணிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ‘கிரீன் மங்கி’ எனும் குதிரை ஒரு அமெரிக்க பந்தய குதிரை.

  

ஏன் இவர் இவ்வளவு விலை உயர்ந்தவர் என்ற கேள்வி எழுவது இயற்கை தான்.

  

தன் முதல் போட்டியிலேயே வெறும் 9.8 வினாடிகளுக்குள் ஒரு மைல் என்ற நம்பமுடியாத வேகத்தில் ஓடிய குதிரை இது.

   

மேலும் இந்த குதிரையின் தந்தை சிறந்த அமெரிக்க பந்தயக் குதிரையான ஃபாரெஸ்ட்ரி.

    

ஆக மொத்தத்தில், வேகம் மற்றும் பந்தயக் குதிரைகளில் குறிப்பாக பார்க்கப்படும் த்ரோப்ரெட் குடும்பத்தில் இருந்து வந்ததால் இந்த் குதிரை மிகவும் உயர்ந்த வகையாக கணிக்கப்பட்டது.

   

2009ல் 16 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக 128 கோடி ரூபாய்) இந்த குதிரை ஏலம் எடுக்கப் பட்டது!

  

#2.சார் லான்ஸ்லாட் என்கோர் – லாப்ரோடர் நாய் - 128 கோடி

லாப்ரடோர் வகை நாய்களை நம்மில் பலரும் பார்த்திருப்போம். வீட்டில் கூட வளர்த்திருப்போம்.

   

ஆனால் இந்த லாப்ரடோர் நாய் அப்படி இல்லை. ரொம்ப ஸ்பெஷல் ஆனவர்!

   

ஏனென்ன்றால், இவர் தான் உலகிலேயே முதல் முதல் க்ளோன் செய்து உருவாக்கப்பட்ட நாய்குட்டி.

  

#3.மிஸ் மிஸ்ஸி – பசு - 9.6 கோடி

மிஸ் மிஸ்ஸி ஒரு உலகப் புகழ்பெற்ற ஹோல்ஸ்டீன் பசு. இந்த பசு 2009 வருடத்தில் $1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (9.6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது.

  

மிஸ் மிஸ்ஸி பல முக்கிய போட்டிகளை வென்று இருக்கிறது. மேலும் ஒரு சாதாரண பசுவை விட 50% அதிக பால் உற்பத்தி செய்ததால், அதன் மதிப்பு அதிகமானது.

    

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.