(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - மனிதனின் மறுபக்கம் :-) - அனுஷா

fun

கூட்டம் நிறைந்த இடத்தில் மனிதன் ஒருவன் தன்னுடைய ஸ்விப்ட் காறை நிறுத்த பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்தான்...

நேரம் சென்றுக் கொண்டே இருந்தது... ஆனால் அவனால் பார்க்கிங் இடம் கண்டுப்பிடிக்க முடியவில்லை...

அவனுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் வேறு இருந்தது...

வெறுத்து போனவனாக, வானத்தை பார்த்து,

“கடவுளே என் மேல் கருணை காட்டுங்கள். எனக்கு ஒரு பார்கிங் இடம் மட்டும் கொடுத்தீர்கள என்றால் ஒவ்வொரு வாரமும் கோவிலுக்கு வருவேன்... சிகரெட் பிடிக்கும் பழக்கம், குடிக்கும் பழக்கம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறேன்...” என்று வேண்டினான்.

அதிசயத்திலும் அதிசயமாக, அவன் முன் திடீரென ஒரு பார்க்கிங் இடம் தோன்றியது.

மனிதன் மீண்டும் வானத்தை பார்த்து,

“கவலை படாதீர்கள் கடவுளே, நானே பார்க்கிங் இடத்தை கண்டு பிடித்து விட்டேன். உங்களை வேற தேவையே இல்லாமல் டிஸ்டர்ப் செய்து விட்டேன்” என்று சொல்லி விட்டு தன்னுடைய காரை பார்க் செய்து விட்டு மீட்டிங்கிற்கு சென்றான்.

winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.